நீதி வென்றுள்ளது:பாஸ்டன் போலீசார்| Dinamalar

நீதி வென்றுள்ளது:பாஸ்டன் போலீசார்

Updated : ஏப் 20, 2013 | Added : ஏப் 20, 2013

பாஸ்டன் : பாஸ்டன் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக 2வது குற்றவாளியை கைது செய்திருப்பதாக அமெரிக்க போலீசார் உறுதி செய்துள்ளனர். இது குறித்து பாஸ்டன் கவர்னர் மற்றும் போலீசார் கூட்டாளர்கள் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர். செய்தியாளர்களிடம் போலீசார் கூறியதாவது :தேடுதல் வேட்டை முடிந்தது; நீதி வென்றுள்ளது; குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக தேடப்பட்டு வந்த குற்றவாளிகளில் ஒருவன் கொல்லப்பட்டுள்ளான்; 2வது குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளான்; மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து கவர்னர் கூறுகையில், குற்றவாளிகளை விரைவில் கைது செய்ததற்காக போலீசார் மற்றும் பொது மக்களுக்கு எனது வாழ்த்துக்கள் எனவும், குற்றவாளியை உயிருடன் பிடிக்க முயற்சி செய்தோம் எனவும், ஆனால் அது முடியாமல் போனது எனவும் தெரிவித்துள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X