அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஸ்டாலின் முடிவுகள் தி.மு.க.,வுக்கு பாதகமா? கருணாநிதி அதிருப்தி

Added : ஏப் 20, 2013 | கருத்துகள் (69)
Share
Advertisement
ஸ்டாலின் முடிவுகள் தி.மு.க.,வுக்கு பாதகமா? கருணாநிதி அதிருப்தி

தன்னிச்சையாக, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் எடுக்கும் முடிவுகளும், அவரது பேச்சும், கட்சிக்கு சாதகமாக அமையாமல், பாதகத்தை உருவாக்குவதால், அவர் மீது, தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளது என, அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சமீபத்தில் மதுரைக்கு சென்ற ஸ்டாலின், முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி வீட்டிற்கு சென்று, அவரை சந்தித்து பேச வேண்டும் என, கருணாநிதி விடுத்த கோரிக்கையை ஏற்காமல், அழகிரியை சந்திக்காமல், மதுரை சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு, சென்னை திரும்பினார்.தன் பேச்சை ஸ்டாலின் கேட்கவில்லை என்ற ஆதங்கம் கருணாநிதிக்கு ஏற்பட்டது. இந்த நிலையில் காங்கிரசுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை என, ஸ்டாலின் பேசியதும், கருணாநிதிக்கு கூடுதல் அதிருப்தியை அளித்துள்ளது.

காங்கிரசுடன் கூட்டணி வைக்கவில்லை என்றால், பா.ஜ.,வுடன் - தி.மு.க., கூட்டணி வைக்க முடியுமா? எதற்காக ஸ்டாலின் இப்படி பேச வேண்டும். லோக்சபா தேர்தலில், இலங்கை தமிழர் பிரச்னை விஸ்வரூபம் எடுக்காமல் இருந்தால், மதவாத சக்தியை முறியடிப்பதற்கு, காங்கிரஸ் கூட்டணியில் தி.மு.க., சேருவதற்கு வாய்ப்பு ஏற்படும். எனவே, காங்கிரசை ஏன் வீணாக பகைத்துக் கொள்ள வேண்டும். கூட்டணிக் கதவை மூடி வைக்க வேண்டிய அவசியமில்லை என, தி.மு.க., இரண்டாம் கட்டத் தலைவர்கள் சிலர் கருதுகின்றனர்.

சென்னை உள்நாட்டு விமான நிலையத்தின் இரண்டாவது முனையத்துக்கு, எம்.ஜி.ஆர்., பெயரைச் சூட்ட வேண்டும் என, சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்து, ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றிய போது, தி.மு.க., தரப்பில் யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஸ்டாலின் அத்தீர்மானத்தை வரவேற்றதும், கருணாநிதிக்கு பிடிக்கவில்லை. உடனடியாக, "மறைந்த தலைவர்களுக்கு மாசு கற்பித்தல் கூடாது' என்ற தலைப்பில், எம்.ஜி.ஆர்., பெயர் சூட்டுவதால் குழப்பம் ஏற்படும் என்ற அறிக்கையை கருணாநிதி வெளியிட்டார்.

தே.மு.தி.க., உடன் கூட்டணியும் எதிர்காலத்தில் உருவாகவில்லை என்றால், காங்கிரஸ் கூட்டணியும் கைவிட்டு விட்டால், தி.மு.க.,வுக்கு பின்னடைவு ஏற்படும் என, கருணாநிதி தரப்பு கருதுகிறது.சட்டசபையில், சென்னை விமான நிலையத்திற்கு எம்.ஜி.ஆர்., பெயர் சூட்டுவதற்கு, ஸ்டாலின் வரவேற்றதும், கருணாநிதிக்கு பிடிக்கவில்லை. காமராஜரை ஆதரிப்பதால், தென் மாவட்டங்களில் காமராஜர் மீது அன்பு கொண்டவர்களின் ஓட்டுகள் தி.மு.க.,வுக்கு கிடைக்கும். ஆனால், எம்.ஜி.ஆரை ஆதரிப்பதால், தி.மு.க.,வுக்கு எந்த லாபமும் இல்லை என, கருணாநிதி தரப்பு கருதுகிறது. அதனால் தான், தன்னிச்சையாக ஸ்டாலின் எடுக்கிற சில முடிவுகள், கட்சிக்கு பாதகமாக அமைகின்றன. எனவே, அவர் கட்சியின் மூத்த தலைவர்களிடம் ஆலோசனை நடத்தி, முடிவு எடுக்க வேண்டும். அனைவரையும் ஸ்டாலின் அரவணைத்து செல்லும் மனப்பக்குவத்தை அடைய வேண்டும் என, தனக்கு நெருக்கமானவர்களிடம் கருணாநிதி ஆதங்கப்பட்டுள்ளார்.இவ்வாறு, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

-நமது நிருபர்-

Advertisement


வாசகர் கருத்து (69)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raju Rangaraj - Erode,இந்தியா
26-ஏப்-201310:25:11 IST Report Abuse
Raju Rangaraj உமக்கு டப்பிங் எழுதித்தர சண்முகசுந்தரம் இருப்பது போல் ஸ்டாலினுக்கும் ஒருவரை ஏற்பாடு செய்து விட்டால் இந்த பிரச்னை வராது. தலைவர் பதவியை ஸ்டாலினுக்கு கொடுத்து விட்டு நீங்கள் கவுரவமாக ஒதுங்கலாம்.. பத்திரிக்கைகாரர்கள் ஸ்டாலினை நெறி படுத்தி விடுவார்கள்....காங்கிரசோடு கூட்டணி இல்லை என்றால் ஒன்றும் ஆகாது. விஜயகாந்த்துக்கு விழுந்த ஓட்டுக்கள் உமக்கு எதிராக விழுந்தவையே. அவரோடு கூட்டணி என்றால் அந்த ஓட்டுக்கள் ஜெயா அம்மையார்க்கு போய்விடும். ஆனால் விஜயகாந்தை ஒழிக்க இதைவிட சுலபமான வழி வேறில்லை''''நீர் ராஜதந்திரி அய்யா
Rate this:
Cancel
DAVID MC - CHENNAI,இந்தியா
22-ஏப்-201311:51:27 IST Report Abuse
DAVID MC மற்ற உறுப்பினர்களை சஸ்பென்ட் செய்ததால் தான் சட்டசபைக்குள் போகவில்லை என்று கூறுகிறார் ஸ்டாலின். கடந்த காலங்களில் ஒன்றிரண்டு சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருந்தபோதும், பரிதி இளம்வழுதி போன்றவர்கள், தனி ஆளாக நின்று சட்டசபையில் தி.மு.கவின் குரலை ஓங்கி ஒலித்திருக்கிறார்கள். மு.க.ஸ்டாலின் சிறந்த பேச்சாளர், வாத திறமையாளர் என்றால் சட்டசபைக்குச் சென்று பேசி அல்லவா இருக்க வேண்டும். அது இவருக்கு சுத்தமா வராது. துரைமுருகன் பேசுகின்ற பேச்சில் இவருக்கு பாதிகூட கிடையாது. அதனால் தான் அவரை துணைக்கு வைத்து இருக்கின்றார். ஸ்டாலின் தன்னுடைய திறமையை வளர்த்துக்கொண்டு சட்டசபையிலும் செயல்படவேண்டும்.
Rate this:
Cancel
Donald Raj - Tuticorin,இந்தியா
21-ஏப்-201316:13:43 IST Report Abuse
Donald Raj இதுவறை இலங்கை தமிழர்களை, ஆதரித்தவர்கள், கட்சி தமிழ்நாட்டில் வெற்றி பெட்டதிலை. - இது சரித்திரம் மற்றும் நடந்தது. என்னவே எம்மந்து போகாதீர்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X