கர்நாடகா சட்டசபை தேர்தல் 25ம் தேதி சோனியா பிரசாரம்| Dinamalar

கர்நாடகா சட்டசபை தேர்தல் 25ம் தேதி சோனியா பிரசாரம்

Updated : ஏப் 21, 2013 | Added : ஏப் 21, 2013
கர்நாடகா சட்டசபை தேர்தல் 25ம் தேதி சோனியா பிரசாரம்

பெங்களூரு:கர்நாடக சட்டசபை தேர்தலுக்காக, காங்கிரஸ் தலைவர் சோனியா, துணை தலைவர் ராகுல், பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர், வரும், 23ம் தேதி முதல், சூறாவளி பிரசாரம் மேற்கொள்கின்றனர்.கர்நாடகாவில், அடுத்த மாதம், 5ம் தேதி, சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதற்கான தேர்தல் பிரசாரம், ஏற்கனவே, சூடு பிடிக்கத் துவங்கியுள்ளது. வரும், 25ம் தேதி, சிக்மகளூர் மற்றும் மங்களூரிலும்; ஏப்ரல், 30ல், குல்பர்க்கா மற்றும் பெல்காமிலும்; மே, 2ம் தேதி, மைசூரு மற்றும் பெங்களூருவிலும், சோனியாவின் பிரசாரம் செய்கிறார்.வரும், 23ம் தேதி, ராய்ச்சூர் மற்றும் பீஜப்பூர் மாவட்டங்களிலும், வரும், 26ல், கோலார், தும்கூர் மற்றும் ஹாவேரி மாவட்டங்களிலும், மாண்டியா, ஹசன் மற்றும் ஷிமோகா மாவட்டங்களில், மே, 1ம் தேதியும், ராகுல் பிரசாரம் செய்கிறார். பிரதமர் மன்மோகன் சிங், 29ம் தேதி, ஹூப்ளி மற்றும் பெங்களூரில் பிரசாரம் செய்கிறார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X