கர்நாடகாவை கொள்ளையடித்த பா.ஜ.,: ராகுல் பிரசாரம்

Updated : ஏப் 23, 2013 | Added : ஏப் 23, 2013 | கருத்துகள் (87)
Share
Advertisement
 கர்நாடகாவை கொள்ளையடித்த பா.ஜ.,: ராகுல் பிரசாரம்,Rahul takes on BJP for "looting" Karna, launches poll campaign

சிந்தானூர்:""கர்நாடகா மாநிலத்தை, பாரதிய ஜனதா கொள்ளையடித்து விட்டது,'' என, காங்கிரஸ் துணைத் தலைவர், ராகுல், தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசினார்.

கர்நாடகாவில், அடுத்த மாதம், 5ம் தேதி, சட்டசபை தேர்தல் நடக்கிறது. மாநிலத்தின் வடக்கு பகுதியில் உள்ள, சிந்தானூர் என்ற இடத்தில் நேற்று நடந்த, காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில், ராகுல் பங்கேற்றார்.

கொளுத்தும் வெயிலில், பொதுமக்கள் காத்து கிடந்த நிலையில், ஒன்றரை மணி நேரம் தாமதமாக வந்த அவர், பேசியதாவது:கடந்த முறை நடந்த சட்டசபை தேர்தலில், பாரதிய ஜனதாவை நீங்கள் வெற்றி பெற வைத்தீர்கள். தேர்தல் பிரசாரத்தின் போது, பா.ஜ., தலைவர்கள், 24 மணி நேரமும் மின்சாரம் தருவோம் என்றனர்; கொடுத்தார்களா?வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுப்போம் என்றனர்; கொடுத்தார்களா? நீங்கள் அவர்களை நம்பினர்; அவர்கள் ஏமாற்றி விட்டனர். இந்த மாநிலத்தை அவர்கள் கொள்ளையடித்து விட்டனர்; இன்னமும் கொள்ளையடிக்க திட்டமிட்டுள்ளனர்; அதற்கு நீங்கள்


அனுமதிப்பீர்களா?

இந்த மாநிலத்தில் கிடைக்கும் இரும்பு தாதுவை, சீனாவுக்கு சட்டவிரோதமாக அனுப்பி, கொள்ளை லாபம் சம்பாதிக்கின்றனர்; இங்கேயே, இரும்பாலை துவக்கினால், நிறைய பேருக்கு வேலை கிடைக்குமே, செய்தார்களா?அமெரிக்கா போல, ஜப்பான் போல, பெங்களூரு நகரை மாற்றுவேன் என்றனரே, செய்தார்களா? உங்கள் ரத்தம், வியர்வையில் கிடைத்த பணத்தை கொள்ளையடிக்க அனுமதிப்பீர்களா? நாங்கள் ஆட்சிக்கு வந்தால், வேலைவாய்ப்பை மேம்படுத்த ஏற்பாடு செய்வோம் பிற மாநிலங்களில், மகாத்மா காந்தி கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டம் சிறப்பாக செயல்படுகிறது. இங்கு, இழுத்து மூடப்பட்டுள்ளது.உங்கள் பணத்தை உங்களுக்கு கொடுக்கும் கட்சி, காங்கிரஸ். மாநிலத்தில் இப்போது ஆளும் கட்சி, பணக்காரர்களுக்கான கட்சி; எங்கள் கட்சி, ஏழைகளுக்காக போராடும் கட்சி.இவ்வாறு, ராகுல் பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (87)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Dinakaran.E - Chennai,இந்தியா
28-ஏப்-201303:21:11 IST Report Abuse
Dinakaran.E நீங்க அடிச்சதை விடவா மோடி.... கத்துக்க பா ராகுல்
Rate this:
Cancel
Sundeli Siththar - Hyderabad,இந்தியா
24-ஏப்-201319:03:12 IST Report Abuse
Sundeli Siththar அது சரி... பாஜக சீனாவிற்கு இரும்பு தாதுவை ஏற்றுமதி செய்தது தவறு என்று ஒரு வாதத்திற்கு வைத்துக் கொள்வோம்... ஏற்றுமதி இறக்குமதி என்பது மத்திய அரசின் அனுமதி இல்லாமல் நடக்காது. இரும்பு தாதுவை ஏற்றுமதி செய்வதை சட்டத்தின் மூலம் நிறுத்தவேண்டியதுதானே... அவங்க ஏற்றுமதி செய்வதை அனுமதித்தது ஏன்? மத்திய அரசின் மூலம் ஒரு இரும்பு ஆலையை கர்நாடகாவில் அமைக்கவேண்டியதுதானே... அதை தடுப்பது யார்?
Rate this:
Cancel
Anwar ali - havana,கியூபா
24-ஏப்-201318:09:20 IST Report Abuse
Anwar ali உங்க பரம்பரை நாட்டை சுறையாடலையா விடுங்க பாஸ் .
Rate this:
Padmanaban - DC,யூ.எஸ்.ஏ
26-ஏப்-201303:56:48 IST Report Abuse
Padmanabanசத்தமா பேசாதீங்க...காங்கிரஸ் காரங்க காதுல விழபோகுது..........
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X