பதிவு செய்த நாள் :
கருத்துகள் (98)  கருத்தை பதிவு செய்ய
எழுத்தின் அளவு:

சென்னை:தே.மு.தி.க., உறுப்பினர்கள் மீது போடப்பட்டுள்ள, அவதூறு வழக்குகளை, வாபஸ் பெற வேண்டும் என்ற, அக்கட்சியின் உறுப்பினர் பண்ருட்டி ராமச்சந்திரன், சட்டசபையில் நேற்று வைத்த கோரிக்கையை, முதல்வர் ஜெயலலிதா, நிராகரித்தார். ""அவதூறு வழக்குகளை வாபஸ் பெற, ஆலோசனை கூறுவதை விட, அவதூறு பேசுபவர்களிடம், பேச வேண்டாம் என, ஆலோசனை கூறினால், அனைவருக்கும் நன்மை பயக்கும்,'' என, முதல்வர் கூறினார்.

நடிகர் விஜயகாந்த் உருவாக்கிய, தேசிய முற்போக்கு திராவிட முன்னேற்றக் கழகம், கடந்த சட்டசபைத் தேர்தலில், அ.தி.மு.க.,வுடன் கூட்டணி வைத்து, 29 தொகுதிகளில் வென்றது. பின், எதிர்க்கட்சி அந்தஸ்தையும் பெற்றது.சில நாட்களிலேயே, அ.தி.மு.க.,வுடன், மோதல் போக்கைக் கடைபிடிக்கத் துவங்கியது. அதன் உறுப்பினர்கள், அ.தி.மு.க.,வைப் பற்றி, சகட்டுமேனிக்கு சாடத் துவங்கினர். அவர்கள் மீது அவதூறு வழக்கு போடப்பட்டது. இதனால், கட்சியில் பிளவு ஏற்பட்டு, ஆறு எம்.எல்.ஏ.,க்கள், அ.தி.மு.க.,வுக்கு ஆதரவு தெரிவிக்கத் துவங்கினர்.இதற்கிடையில், போலீஸ் மற்றும் தீயணைப்பு மானிய கோரிக்கை மீது, சட்டசபையில் நேற்று விவாதம் நடந்தது. அப்போது, அவதூறுக்கு ஆளாகி இருக்கும் உறுப்பினர்கள் மீதான வழக்கை வாபஸ் பெற வேண்டும் என, எதிர்க்கட்சித் தலைவர், பண்ருட்டி ராமச்சந்திரன், நேற்று, சட்டசபையில் கோரிக்கை வைத்தார்.

அது தொடர்பான விவாதம்:
தே.மு.தி.க., (எதிர்க்கட்சித் தலைவர்) - பண்ருட்டி ராமசந்திரன்:
பத்திரிகைகள், ஊடகங்கள், முன்னாள் முதல்வர் கருணாநிதி, சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் விஜயகாந்த்

ஆகியோர் மீது, அவதூறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. வழக்குகளை ஆய்வு செய்து, மோசமான வழக்குகள் என்ற நிலையில் உள்ளவற்றை தக்க வைத்துக் கொண்டு, பெரும்பாலான வழக்குகளை திரும்ப பெற வேண்டும். இது, தமிழகத்தில் ஆரோக்கியமான அரசியல் சூழ்நிலையை உருவாக்கும்.
முதல்வர் ஜெயலலிதா: அரசியலில்பற்றற்ற துறவியைப் போல் நான் வாழ்ந்து வருகிறேன். மோசமாக பேசப்பட்ட அவதூறுகள் பற்றி தான், வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. பொது வாழ்வில் உயர்ந்த அந்தஸ்தில் உள்ளவர்கள், குறிப்பாக ஒரு கட்சியின் தலைவர், "நா' காக்க வேண்டும்; என்ன பேசுகிறோம் என, அளந்து பேச வேண்டும்.என்னைப் பற்றியோ, அமைச்சர்கள் பற்றியோ இழிவாகப் பேசினால், அது தனிப்பட்ட பிரச்னை அல்ல. 7.28 கோடி மக்களுக்கு பொறுப்பேற்றிருக்கும் முதல்வர் மற்றும் அரசைப் பற்றி அவதூறுகளைப் பரப்பினால், அதற்கு நடவடிக்கை எடுக்காமல் விட்டுவிட்டால், கூறப்பட்ட அவதூறுகள் உண்மையாகி விடும். பொதுவாழ்வில், நிதானம், ஒழுங்கு, கட்டுப்பாடு இருக்க வேண்டும். இயற்கையாக இல்லை என்றால், அவற்றை வரவழைப்பதற்காக வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

எதிர்க்கட்சி தலைவர்: நான் கேட்டது என் தனிப்பட்ட வேண்டுகோள். யாருக்காகவும் வாதாட வரவில்லை. இருப்பினும், இது பற்றி முதல்வர் இன்னும் யோசிப்பார்கள் என, நம்புகிறேன்.
முதல்வர் ஜெயலலிதா: அனுபவஸ்தரான எதிர்க்கட்சி தலைவர், எனக்கு ஆலோசனை

Advertisement

கூறுவதை விட்டுவிட்டு, யார் இப்படியெல்லாம் அவதூறு பேசுகின்றனரோ, அவர்களுக்கு அறிவுரைகூறி, இப்படி பேச வேண்டாம் என, யோசனை கூறினால், அனைவருக்கும் நன்மை பயக்கும்.
எதிர்க்கட்சி தலைவர்: நான் ஆலோசனை சொல்லவில்லை; வேண்டுகோள் வைக்கிறேன்.
முதல்வர் ஜெயலலிதா: வேண்டுகோளை, வைக்க வேண்டிய இடத்தில் வைக்கட்டும்.
எதிர்கட்சி தலைவர்: தே.மு.தி.க.,- எம்.எல்.ஏ., அருண் சுப்ரமணியம், சட்டசபைக்கு வருவதற்கு, ஏற்பாடு செய்ய வேண்டும்.
முதல்வர் ஜெயலலிதா: அருண் சுப்ரமணியம் மீது, நில அபகரிப்பு புகார் கொடுக்கப்பட்டு, போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். நில அபகரிப்பு புகாரில் யார் சிக்கினாலும், அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. நில அபகரிப்பு புகாரில் சிக்கிய, அ.தி.மு.க., வினர் கூட, சிறை சென்றுள்ளனர்.இவ்வாறு, விவாதம் நடந்தது.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (98)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sundeli Siththar - Hyderabad,இந்தியா
24-ஏப்-201319:10:24 IST Report Abuse
Sundeli Siththar தமிழகத்தில் எதிர் கட்சி என்றால் எதிரிக் கட்சியென்று பார்க்கும் நிலையும், எதிர்கட்சிகள் ஆட்சியாளர்கள் மீது எல்லாவற்றிற்கும் எதிர் கருத்துக்களை கூறுவதும், மத்தியில் ஆட்சியில் பங்கு கொண்டு, மாநிலத்தில் ஆட்சியில் இல்லையெனில், தமிழகத்திற்கு கிடைக்கவேண்டிய நியாயமான கோரிக்கைகளை கூட தடுக்கும் மனப்பாங்கு இருக்கும் வரை, இதுபோன்ற அவதூறு வழக்குகள் வந்துக் கொண்டேதான் இருக்கும்.
Rate this:
Share this comment
Cancel
Jeyaseelan - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
24-ஏப்-201316:26:24 IST Report Abuse
Jeyaseelan அவதூறு என்கிற பெயரில் வழக்கு போடுவதையே முதலில் ஏற்றுக்கொள்ள முடியாது. எல்லோரும் என்ன இவர் வீட்டு வேலைக்காரர்களா .......? இவர் சொல்வது போல ஆடுவதற்கு. பொதுவாழ்வில் சில பல விமர்சனகள் வரத்தான் செய்யும், அதை எல்லாம் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் வேண்டும். இப்போது நீதி மன்றங்களில் நிலுவையில் இருக்கும் வழக்குகளை முடிப்பதற்கே 368 ஆண்டுகள் ஆகும் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது, இந்த நிலையில் இவர்களின் அவன் அடித்தான் இவன் கடித்தான் என்று காரணம் சொல்லி வீண் வழக்குகள் பதிவாவதால் நீதிமன்றத்தின் நேரம் வீணாகிறது.
Rate this:
Share this comment
Cancel
Ramkumar CR - Coimbatore,இந்தியா
24-ஏப்-201315:59:17 IST Report Abuse
Ramkumar CR அம்மா நீங்க state ஐ விட்டுட்டு சென்ட்ரலுக்கு prime Minister ஆகுங்க தமிழ் நாடு சுத்தம் ஆய்டும்.
Rate this:
Share this comment
tamilnambi - new delhi,இந்தியா
24-ஏப்-201318:16:00 IST Report Abuse
tamilnambiஇந்தியாவின் பிரதமர் இல்லத்துக்கு என்று ஒரு மரியாதை இருக்கிறது இதெல்லாம் அங்கே சென்றால் விளைவு அட ஆண்டவா மனிதர்களின் கற்பனைக்கு அளவே இல்லையா ...
Rate this:
Share this comment
Cancel
INTHIRAN - singapore,சிங்கப்பூர்
24-ஏப்-201315:37:40 IST Report Abuse
INTHIRAN இதிலிருந்தே தங்கள் தவறை மறைமுகமாக ஒப்புக்கொள்கிறார்கள் போலும்....பேசியதற்கு வருத்தம் தெரிவித்திருந்தால் ஒருவேளை முதல்வர் மன்னித்திருப்பார்....அதைவிடுத்து வாபஸ் வாங்க சொல்லி கெஞ்சுவது நல்லாவா இருக்கு?.
Rate this:
Share this comment
Cancel
tamilnambi - new delhi,இந்தியா
24-ஏப்-201315:16:22 IST Report Abuse
tamilnambi அம்மணி நீங்க எந்த வழக்கையும் வாபஸ் வாங்க மாட்டீங்க. காரணம் - என் மீது வழக்கு போட்டார்கள் நான் இன்னும் வாய்தா வாங்கி கொண்டு இருக்கிறேன் 15 வருடமாக - ஆனால் மற்றவர்கள் உடனே நீதிமன்றம் செல்கிறார்கள் வழக்கை முடித்துக்கொள்கிறார்கள் - ஆகவே என் வாய்தா வழக்கு முடியும் வரை அனைவர் மீதும் இப்படி வழக்கு போட்டு கொண்டுதான் இருப்போம் - அப்போது தான் இதோ பாருங்கள் இவர்கள் மீதும் வழக்கு உள்ளது என்று மக்கள் முன்னாள் அதிமுகவால் சொல்லிக்கொள்ள முடியும் -
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
24-ஏப்-201315:14:07 IST Report Abuse
Nallavan Nallavan பண்ருட்டியுடனான தனது பழைய நட்பை வைத்து நேரடியாகக் கேட்கக் கூச்சப்பட்டு கலைஞர் பண்ருட்டியார் மூலம் கேட்டிருப்பார் ......
Rate this:
Share this comment
Cancel
v j antony - coimbatore,இந்தியா
24-ஏப்-201314:06:48 IST Report Abuse
v j antony விமர்சனகளை தாங்கும் மனபக்குவம் வளர்த்து கொள்ள வேண்டும். யார் என்ன சொன்னாலும் மக்கள்தான் எல்லாம் முடிவு செய்ய வேண்டும். எனவே முதல்வர் அவர்கள் இதில் கவனம் செலுத்தாமல் மக்கள் சந்திக்கும் முக்கிய பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் .
Rate this:
Share this comment
Cancel
Raju (GHANA) - Accra,கானா
24-ஏப்-201314:05:16 IST Report Abuse
Raju (GHANA) நா காக்க வேண்டும் யாராயினும்
Rate this:
Share this comment
Cancel
பஞ்ச்மணி - கொவை,இந்தியா
24-ஏப்-201314:04:33 IST Report Abuse
பஞ்ச்மணி அம்மணி இரும்பு பெண்மணி. ஒரு பய நாக்கு மேல பல்லு போட்டு அனாவசியமா பேச முடியாதுல்ல. சும்மா வழ வழ கொழ கொழ ன்னுட்டு விளக்கெண்ணையை குடிச்ச மாதிரி இல்லாமா இருக்கறது எல்லாராலும் முடியாது
Rate this:
Share this comment
Cancel
samraj - ulaanbaatar ,மங்கோலியா
24-ஏப்-201313:26:03 IST Report Abuse
samraj சட்டத்தின் மூலம் கேப்டன் திருந்தும் பாக்கியம் கிடைத்தால் லட்சக்கணக்கான நாரவாயர்கள் கண்ணியமாக பேசும் நிலை ஏற்படும். அன்பு மொழி கேட்டு விட்டால் துன்ப நிலை மாறிவிடும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X