பொது செய்தி

தமிழ்நாடு

அம்மா திட்ட முகாம்

Added : ஏப் 24, 2013
Share
Advertisement

விருத்தாசலம்:குப்பநத்தத்தில் நடந்த அம்மா திட்ட சிறப்பு முகாமில், 37 முதியோர்களுக்கு ஓய்வூதிய உத்தரவு வழங்கப்பட்டது.
விருத்தாசலம் அடுத்த குப்பநத்தம் கிராமத்தில், அம்மா திட்ட சிறப்பு முகாம் வி.ஏ.ஓ., ராஜேஷ்வரன் தலைமையில் நடந்தது. ஆதி திராவிடர் நல தாசில்தார் சொக்கலிங்கம், கிராம மக்களிடமிருந்து 151 மனுக்களைப் பெற்றார்.
அதில், 37 முதியோர் ஓய்வூதியம் மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு, ஓய்வூதியம் வழங்க உத்தரவு வழங்கப்பட்டன. ரேஷன் கார்டு உள்ளிட்ட மனுக்கள் பரிசீலனையில் உள்ளதாக வருவாய்த் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
முகாமில் வருவாய் அலுவலர் உதயகுமார், வட்ட வழங்கல் அலுவலக உதவியாளர் ராஜேந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X