அரசியல் செய்தி

தமிழ்நாடு

அமைச்சர் செந்தில் பாலாஜி, பரஞ்ஜோதி மீதான வழக்குகள் : கருணாநிதி கேள்வி

Updated : ஏப் 25, 2013 | Added : ஏப் 24, 2013 | கருத்துகள் (42)
Share
Advertisement
அமைச்சர் செந்தில் பாலாஜி, பரஞ்ஜோதி மீதான வழக்குகள் : கருணாநிதி கேள்வி

சென்னை:""தான் நேர்மையானவர் என்று பறைசாற்றும் ஜெயலலிதாவிற்கு, அமைச்சர் செந்தில் பாலாஜி, பரஞ்சோதி எம்.எல்.ஏ., ஆகியோர் மீது தொடரப்பட்டுள்ள வழக்குகள் கண்ணுக்கு தெரியவில்லையா?'' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பினார்.

திருவான்மியூரில், தி.மு.க., சார்பில், "தமிழக சட்டமன்றத்தில் ஜனநாயகம் படும் பாடு' என்ற தலைப்பிலான கண்டன கூட்டம் நேற்று நடந்தது.

தி.மு.க., தலைவர் கருணாநிதி பேசியதாவது:நான் முதல் முறையாக சட்டசபை சென்றபோது, ஒரு ஏடு, என் கண்ணில் பட்டது. அதில், ஜாதிப் பெயரை குறிப்பிட்டு எழுதப்பட்டிருந்தது. அப்போதைய அவைத் தலைவரிடம் இது குறித்து முறையிட்டேன். அதற்கு தவறு நடந்ததாக வருத்தப்பட்டனர். உடனடியாக அந்த தவறு திருத்தப்பட்டு வெளியிடப்பட்டது. தற்போது, அப்படியெல்லாம் நடக்குமா? தவறை சுட்டிக் காட்டினால் திருத்துவதற்கு ஆள் இல்லை. இன்று, ஆளும் கட்சிக்கு ஒரு நீதி; எதிர்க்கட்சிக்கு ஒரு நீதி. காவல் துறையை கையில் வைத்துக் கொண்டு எதுவும் செய்து விடலாம் என்று நினைக்கின்றனர்.குறிப்பாக, தி.மு.க.,வையும், விஜயகாந்த் கட்சியையும் ஒழிக்க, முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

முன்னாள் அமைச்சர் பரஞ்ஜோதி, தன்னை இரண்டாவது திருமணம் செய்து, 60 சவரன் நகைகளை பறித்ததாக, டாக்டர் ராணி, கடந்த 2011ல் வழக்கு தொடுத்தார். 538 நாட்கள் ஆகியும், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை; தங்கள் உயிருக்கு ஆபத்து என்றும் அவர் கூறியுள்ளார். இந்த வழக்கு, முதல்வர் ஜெயலலிதாவிற்கு தெரியவில்லை. போலீஸ் மானிய பதிலில், இந்த செய்தி இடம் பெறவில்லை.இன்னொரு வழக்கில், அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக் ஆகியோர், தன்னை கடத்திச் சென்று மிரட்டி சொத்துகளை எழுதி வாங்கியதாக, கோகுல் என்பவர், கரூர் போலீசில், 2011ல் புகார் செய்துள்ளார். தற்போது, அந்த கோகுல் எங்கு சென்றார்; உயிருடன் இருக்கிறாரா என்பது தெரியவில்லை.ஆனால், தான் பற்றற்ற தலைவி, நேர்மையானவர் என்று கூறும் முதல்வர் ஜெயலலிதாவின் கண்களுக்கு, ராணி, கோகுல் படும்பாடு தெரியவில்லையா? இந்த குற்றச்சாட்டுகளுக்கு அவர் ஏன் இன்னும் பதில் அளிக்கவில்லை.

திருச்சி ராமஜெயம் கொலை செய்யப்பட்டு ஓராண்டு ஆகியும் குற்றவாளிகள் பிடிக்கப்படவில்லை. வீரபாண்டி ஆறுமுகம் சிறையில் கொலை செய்யப்படவில்லையா? இதற்கெல்லாம் இந்த ஆட்சி பதில் கூறித் தான் ஆக வேண்டும். இவ்வாறு தி.மு.க., தலைவர் கருணாநிதி பேசினார்.கூட்டத்தில், தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், பொதுச் செயலர் அன்பழகன், முன்னாள் அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து (42)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
tony vel - georgetown,கயானா
26-ஏப்-201300:34:26 IST Report Abuse
tony vel 90% admkஆதரவு செய்திதான் வரும் ,
Rate this:
Cancel
Vanavaasam - Dallas,Fort Worth,யூ.எஸ்.ஏ
26-ஏப்-201300:21:41 IST Report Abuse
Vanavaasam 2 வருட ஆட்சியில் ஐயாவுக்கு கிடைத்தது ஒன்னு .. 'ரெண்டு பொண்டாட்டி' கேசு... இதுல பரஞ்ஜோதி ஒரு குற்றவாளினா.. அய்யாவின் ராயபேட்டை குடிசை வீடு செயலுக்கு ஆயுள் தண்டனை தான் குடுக்கணும் ... ஒரு சொத்து அபகரிப்பு கேசு... அதுவும் எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை ... யாவின் ஆட்சியில் எல்லா மாவட்டதிலும் இதை தான் தி மு க வினர் முழு நேர செயலாக செய்தனர் ... எனக்கு தெரிந்த நன்பர்களே இருவர் நிலத்தை தி மு க வினரிடம் இழந்தனர் ... இந்த ரெண்ட குறையா சொல்லுற அளவுக்கு பாவம் தலைவர் இறங்கி வந்துள்ளார் ... மொழி போர் (போராம்பா...), திராவிட நாடு, சட்ட எரிப்பு போராட்டம், கல்லக்குடி பெயர் மாற்றம், குடமுருட்டு குண்டு சதி ( அதாவது அ தி மு க இவரை கொள்ள குண்டு வைதாங்கலாம் ..அது கடைசியிலே குண்டு அல்ல ...மாட்டு சாணி தான் என தெரிந்து தமிழகம் கொள் லென சிரித்தது ..) என ஜாலியா ஒன்னும் இல்லாததை பத்த வச்சி வோட்டு அல்லுன நாட்களை நெனைச்சி அய்யா அது வொரு கணா காலம் என பாட வேண்டியது தான் ..
Rate this:
Cancel
SUDARSAN - houston,யூ.எஸ்.ஏ
25-ஏப்-201317:25:45 IST Report Abuse
SUDARSAN உங்கள் ஆட்சியில் நடிகர் S S R ஜனநாயகம் செத்து விட்டது என்று கூறி வெளிநடப்பு செய்தது உங்களுடைய நினைவில் இருக்கும் என்று நம்புகின்றேன்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X