பொது செய்தி

தமிழ்நாடு

வீடுகளில் இனி "சோலார்' கட்டாயம் : மாநகராட்சிகளில் முதற்கட்டமாக அமல்

Updated : ஏப் 25, 2013 | Added : ஏப் 24, 2013 | கருத்துகள் (58)
Share
Advertisement
வீடுகளில் இனி "சோலார்' கட்டாயம் : மாநகராட்சிகளில் முதற்கட்டமாக அமல்

மதுரை:"வீடுகளில் "சோலார் எனர்ஜி' பயன்படுத்தினால் மட்டுமே, கட்டடங்களுக்கு அனுமதி வழங்கப்படும்,' என்ற நடைமுறையை தமிழகத்தில் அறிமுகம் செய்ய அரசு திட்டமிட்டுள்ளது.

தமிழகத்தில் நிலவும் கடுமையான மின்வெட்டை சமாளிக்க, அரசு தரப்பில் பல்வேறு நடவடிக்கைள் மேற்கொள்ளப்படுகிறது. பிற மாநிலங்களில் இருப்பதைப் போல், சுயமின் உற்பத்தி தமிழகத்தில் இல்லை. முழுக்க அரசை நம்பியிருப்பதால், மின்தட்டுப்பாடு அதிகரித்துள்ளது.வடமாநிலங்களில், வீடுகள், விவசாயம், அலுவலகங்களில் தனியார் "சோலார்' பயன்பாடு உள்ளது. தமிழகத்தில் விரல் விட்டு எண்ணும் வகையில் சோலார் பயன்படுத்தப்படுகிறது. வருங்காலத்தில், மின்தட்டுப்பாட்டை சமாளிக்க வேண்டுமானால், "சோலார்' பயன்பாட்டை ஊக்குவிக்க வேண்டிய கட்டாயத்தில் தமிழகம் உள்ளது.

அதை கருத்தில் கொண்டு, கட்டடங்களுக்கான அனுமதியில், "சோலார்' பயன்பாட்டை கட்டாயப்படுத்த முடிவுசெய்துள்ளனர். முதற்கட்டமாக அனைத்து மாநகராட்சிகளிலும் இத்திட்டம் நடைமுறைக்கு வர உள்ளது. தற்போதுள்ள நடைமுறைப்படி, கட்டட அனுமதி பெற, "சோலார் வாட்டர் ஹீட்டர்' பொருத்தியிருக்க வேண்டும்.

ஆனால், நடைமுறையை யாரும் பின்பற்றுவதில்லை. புதிய நடைமுறைப்படி, வாட்டர் ஹீட்டருக்கு மட்டும் இருந்த சோலார் பயன்பாட்டை, கட்டாய "சோலார் என்ர்ஜி'யாக மாற்ற உள்ளனர். அதன் படி, லைட் உள்ளிட்ட பல்வேறு பயன்பாடுகளுக்கு சோலார் கட்டாயம் பொருத்தியிருக்க வேண்டும். அதற்கு ரூ.50 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை செலவாகும். "இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான தீர்மானத்தை நிறைவேற்றுமாறு,' அனைத்து மாநகராட்சிகளுக்கும் வலியுறுத்தப்பட்டுள்ளது. புதிய கட்டடங்களுக்கு வரும் இந்த புதிய நடைமுறை, நாளடைவில், முன்பு அனுமதி பெற்ற கட்டடங்களிலும் விரிவுபடுத்தப்படும்.

அதிகாரி ஒருவர் கூறும்போது, " புதிய நடைமுறை குறித்த தேதியை அரசு விரைவில் அறிவிக்கும்,' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (58)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தேவாங்கு - chennai,இந்தியா
29-ஏப்-201319:51:22 IST Report Abuse
தேவாங்கு முதல்ல, சோலார் பேனல் எங்க, என்ன விலையில, எவ்ளோ கிலோவாட்-க்கு கிடைக்கும், சிபாரிசு செய்யப்பட்ற 'panel quality & rating' என்னென்ன, அப்பிடி தயாரிக்கப்பட்ற மின்சாரத்துல பேன், லைட் தவிர வேற என்னென்ன உபகரணங்கள் உபயோகிப்படுத்தலாம், பாட்டரி திறன் எவ்ளோ போடவேண்டும்-ங்கற மாதிரியான அடிப்படைக் கேள்விகளுக்கு தமிழ்நாடு மின்சாரவாரியம் மூலமாக இலவசமாக தகவல்களைத் தர ஏற்பாடு செய்யவேண்டும். மேலும், அப்பிடி தயாரிக்கப்படும் மின்சாரத்துக்கு கட்டணம் உண்டா இல்லையா என்பதையும் தெளிவாக சொல்லவேண்டும். இப்படி சோலார் வழியாக தயாரிக்கப்படும் மின்சாரத்தை மின் மீட்டர் வழியாக தர வேண்டிய அவசியம் உள்ளதா, இல்லையா என்பதை தெளிவாக அறிவிக்க வேண்டும். உதாரணத்துக்கு, ரூ. 1 லட்சம் செலவு செய்து வைக்கப்படும் இந்த உபகரணங்கள், அதன் 'break off' எனப்படும், 'போட்ட முதலை எடுக்க' ஆகும் மின்சார உற்பத்தி, யூனிட் ஒன்றுக்கு ரூ.5/- என வைத்துக்கொண்டால், 20,000 யூனிட் எடுத்தால் தான் வரும். இதற்கு குறைந்தபட்சமாக, கிட்டத்தட்ட 3 வருடங்கள் ஆகும் அதற்குள் பேனல், பாட்டரி எதுவும் வேறு செலவு வைக்காமலிருந்தால். இந்த செலவை மக்கள் ஏற்றுக்கொள்ள தயாரா என்பதை பார்க்கவேண்டும். இவை எல்லாம், தரமான சோலார் பேனல்கள், மக்கள் வாங்கும் விலையில் தரப்படுவதை பொறுத்தே அமையும். நல்ல திட்டம் மக்களும் தயார் தான். ஆனால், செயல்வடிவம் பெறும்போது எழும் சிக்கல்களை சரியாகக் கையாளவேண்டும்.
Rate this:
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
29-ஏப்-201310:43:04 IST Report Abuse
Srinivasan Kannaiya நீங்க மின்சாரத்தை இலவசமாக கொடுக்க வேண்டாம் ....... இந்த சோலார் மின்சார சாதனங்களை இலவசமாக வைத்து கொடுங்களேன்.. நாங்கள் மிக்சி பேன், டிவி ,மடிகனினி, எல்லாம் வாங்கிகொள்வோம்
Rate this:
Cancel
Sivramkrishnan Gk - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
26-ஏப்-201300:38:28 IST Report Abuse
Sivramkrishnan Gk நம்ம அரசு ஊழியர்களுக்கு கொண்டாட்டம் தான். சோலார் தகடு போடாமலேயே போட்டதாக சான்றிதழ் கொடுக்க லஞ்சம் லக்ஷகனக்கில் புரளும். அரசு மானிய விலையில் சோலார் தகடு கொடுத்தால் அது அரசு ஊழியர் வீடுகளில் போடப்படும். ஆக அரசு ஊழியர்கள் காட்டில் மழை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X