பதிவு செய்த நாள் :
கருத்துகள் (42)  கருத்தை பதிவு செய்ய
எழுத்தின் அளவு:

பெங்களூரு குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக, தடை செய்யப்பட்ட இயக்கத்துடன் தொடர்புடையவர்களாக சந்தேகிக்கப்படும், சென்னையைச் சேர்ந்த, ஐந்து பேரை, சிறப்பு புலனாய்வு பிரிவினர் பிடித்து, ரகசிய இடத்தில், விசாரித்து வருகின்றனர்.

சென்னை உட்பட, தமிழகத்தின் முக்கிய நகரங்களில், குண்டு வெடிப்பு சம்பவங்களை அரங்கேற்ற சதித் திட்டம் தீட்டப்பட்டதா என, அவர்களிடம் விசாரணை நடக்கிறது.பெங்களூரு, மல்லேஸ்வரம் பகுதியில் உள்ள, பா.ஜ., அலுவலகம் அருகில், வாகன நிறுத்தம் பகுதியில், கடந்த, 17ம் தேதி, இருசக்கர வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த, குண்டு வெடித்தது. இதில், அப்பகுதியில் இருந்த போலீசார், பொதுமக்கள் என, 16 பேர் காயமடைந்தனர்.

சிக்கிய புரோக்கர்கள்:இந்த சம்பவம் தொடர்பாக, சிறப்பு புலனாய்வு பிரிவினருடன், கர்நாடக மற்றும் தமிழக போலீசாரும் இணைந்து விசாரித்து வருகின்றனர். வெடிகுண்டு வைக்கப்பட்ட வாகன எண்ணைக் கொண்டு நடத்தப்பட்ட விசாரணையில், வாகன புரோக்கர்கள் இருவர் சிக்கினர்.அவர்களிடம் விசாரணை நடத்திய போலீஸ், சென்னை பிராட்வே பகுதியில் இருந்த, நெல்லை மாவட்டம், மேலப்பாளையத்தைச் சேர்ந்த பீர் முகமது மற்றும் பஷீர் அகமது ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்கள் மூலம், மதுரையில் தங்கியிருந்த, கிச்சான் புகாரி என்பவரையும் கைது செய்தனர்.கைது செய்யப்பட்ட மூவரும், தடை செய்யப்பட்ட அமைப்பைச் சேர்ந்தவர்கள் என, தெரிய வந்ததை தொடர்ந்து, அவர்களை பெங்களூரு அழைத்து சென்று, மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தற்போது அவர்களை, காவலில் எடுத்து விசாரிக்க உள்ளனர்.

நிலுவையில் வழக்குகள்:கோவை குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையவரான கிச்சான் புகாரி, சிறை தண்டனை அனுபவித்து வெளியில் வந்துள்ளார். அவர் மீது, பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், நேற்று முன்தினம் இரவு, சென்னை திருவல்லிக்கேணியில் தங்கியிருந்த அமீன் என்பவரை சிறப்பு புலனாய்வு பிரிவினர் பிடித்தனர்.தொடர்ந்து, சென்னை மண்ணடி மற்றும் திருமங்கலத்தைச் சேர்ந்த, நால்வரையும், போலீசார் பிடித்து, ரகசிய இடத்தில் விசாரித்து வருகின்றனர். இவர்கள் ஐந்து பேரும், தடை செய்யப்பட்ட இயக்கத்துடன் தொடர்புடையவர்கள்

என சந்தேகிக்கப்படுகிறது.இது தவிர, கோவை குண்டு வெடிப்பில் கைது செய்யப்பட்ட, 167 பேரில், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர்களைத்தவிர, மற்றவர்கள் நடவடிக்கை குறித்தும் கண்காணிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், தமிழகத்தைச் சேர்ந்த, 23 முஸ்லிம் அமைப்புகளின் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள், நேற்று, தமிழக டி.ஜி.பி., ராமானுஜத்தை சந்தித்து, பெங்களூரு குண்டு வெடிப்பு தொடர்பாக, கைது செய்யப்பட்டவர்களுக்கு அதில் தொடர்பில்லை என தெரிவித்து, மனு அளித்துள்ளனர்.

எந்த அமைப்பு காரணம்?""பா.ஜ., அலுவலகம் அருகில் நடந்த குண்டு வெடிப்பில், பயங்கரவாத இயக்கமான, அல்-உம்மாவின் கைவரிசை உள்ளது,'' என்று கர்நாடக உள்துறை அமைச்சர் அசோக் தெரிவித்தார்.பெங்களூருவில் நிருபர்களிடம், அசோக் கூறியதாவது: மல்லேஸ்வரம் குண்டு வெடிப்பு வழக்கில், அல்-உம்மா பயங்கரவாத இயக்க தலைவர் அன்வர் பாஷா முக்கிய குற்றவாளி; அவர் தலைமறைவாகி உள்ளார். அவரை கண்டுபிடிக்க, தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய அனைத்து குற்றவாளிகள் பற்றிய முழுமையான தகவல்களும் கிடைத்து உள்ளன; விரைவில், அவர்கள் கைது செய்யப்படுவர். குண்டு வெடிப்பு வழக்கு தொடர்பாக, ஏற்கனவே, நான்கு பேர் வெளி மாநிலங்களிலிருந்து கைது செய்யப்பட்டு, கர்நாடகாவுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர், கோயம்புத்தூரில், பா.ஜ., மூத்த தலைவர் அத்வானியை குறி வைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் தொடர்புடையவர். குண்டு வெடிப்பு குறித்து தீவிர விசாரணை நடந்து

Advertisement

வருகிறது. இந்த வேளையில், எல்லா விஷயங்களையும் பகிரங்கப்படுத்த முடியாது.இவ்வாறு, அவர் கூறினார்.

அடுத்த குறி:""பெங்களூரு, புனே, மும்பை, குஜராத்தின் ஆமதாபாத் ஆகிய நகரங்களை பயங்கரவாதிகள் குறி வைத்துள்ளனர்,'' என்று மத்திய பயங்கரவாத தடுப்பு படை தலைவர் பிட்வா தெரிவித்தார்.மல்லேஸ்வரம், பா.ஜ., அலுவலகம் அருகில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவ பகுதிக்கு, பிட்வா சென்று பார்வையிட்டார். பின், நிருபர்களிடம் கூறியதாவது:பெங்களூரு, புனே, மும்பை போன்ற மாநகரங்களில் தாக்குதலுக்கு பயங்கரவாதிகள் குறி வைத்துள்ளனர்; மாநில அரசுகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குண்டு வெடிப்பு நடத்தும் பயங்கரவாதிகளை கடுமையாக தண்டிக்க வேண்டும். இதுபோன்ற குண்டு வெடிப்பு சம்பவங்களை கட்டுப்படுத்த, கடும் சட்ட திட்டங்களை அமல்படுத்த வேண்டும். அப்போது தான், பயங்கரவாதத்தை கட்டுப்படுத்துவது சாத்தியமாகும்.இவ்வாறு, அவர் கூறினார்.- நமது நிருபர் -
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (42)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mahesh - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
25-ஏப்-201316:39:06 IST Report Abuse
mahesh எங்க அந்த விஸ்வரூபம் பட போராட்டக்கார்கள் ?
Rate this:
Share this comment
Padmanaban - DC,யூ.எஸ்.ஏ
26-ஏப்-201303:05:45 IST Report Abuse
Padmanabanவிஸ்வரூபம் பட போராட்டக்கார்கள் அனைவரும், அம்மா காசு கொடுத்து வாங்கினவங்க.......அவங்க என்ன பண்ணுவாங்க. அவர்கள் கண்டிப்பாக தீவிரவாதத்தை ஆதரிக்க மாட்டார்கள்.....ஆனால் எனக்கு என்ன மன வருத்தம் என்றால்...................... இதற்கிடையில், தமிழகத்தைச் சேர்ந்த, 23 முஸ்லிம் அமைப்புகளின் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள், நேற்று, தமிழக டி.ஜி.பி., ராமானுஜத்தை சந்தித்து, பெங்களூரு குண்டு வெடிப்பு தொடர்பாக, கைது செய்யப்பட்டவர்களுக்கு அதில் தொடர்பில்லை என தெரிவித்து, மனு அளித்துள்ளனர்...
Rate this:
Share this comment
Padmanaban - DC,யூ.எஸ்.ஏ
26-ஏப்-201303:59:36 IST Report Abuse
Padmanabanதொடர்பில்லை என்று இவர்களுக்கு எப்படி தெரியும்.....அப்போ உங்களுக்கு உண்மையான குற்றவாளி யார்னு தெரியுமா ??????அத சொல்ல வேண்டியது தானே.......
Rate this:
Share this comment
Cancel
N.K - bangalore,இந்தியா
25-ஏப்-201315:44:48 IST Report Abuse
N.K ஒரு புறம் மக்களை காப்பாற்ற போலீஸ் போராடி வருகிறது. அந்த 16 பேரில் பல போலீசாரும் உள்ளனர். இவர்கள் வேலையின்றி பெங்களூர் இருந்து மதுரை சென்று யாரையும் பிடிக்க வேண்டிய அவசியம் கண்டிப்பாக இல்லை. நிரபராதி என்று மனு கொடுக்க மனசாட்சியே இல்லாமல் வந்திருகிறார்கள். அப்பாவி பொது மக்கள் என்ன பவம் செய்தோம் நாங்கள். ஏன் இப்படி வெறி கொண்டி திரிகிறார்கள் என்று புரியவில்லை.
Rate this:
Share this comment
Cancel
Uthukkaattaan - Padmagiriswaram,இந்தியா
25-ஏப்-201314:51:19 IST Report Abuse
Uthukkaattaan வணிக வளாகத்தில் தீ. பள்ளி வாகன விபத்துகளில் குழந்தைகள் பலி. சாலையில் செல்லுபவர்கள் விபத்தில் பலி. தினசரி ஏதாவது ஒரு இடத்தில் குண்டு வெடிப்பு.மக்கள் யாருமே அரசையோ காவல் துறையையோ புலனாய்வு துறையையோ நம்பி வாழ்க்கை வாழ வில்லை. தெய்வத்தை மட்டும் நம்பி காலத்தை ஒட்டிக்கொண்டிருக்கின்றோம். இந்திய நாடு இறைவனின் தேசம்.
Rate this:
Share this comment
Cancel
Ulagarasan - Kolkatta,இந்தியா
25-ஏப்-201313:56:41 IST Report Abuse
Ulagarasan உலகம் முழுவதும், இவர்களுக்கு வேறு வேலையே கிடையாதா? எப்போதும் அழிவு செய்யும் வேலை தானா?
Rate this:
Share this comment
Cancel
Mohamed Nawaz - Sakaka,சவுதி அரேபியா
25-ஏப்-201313:33:53 IST Report Abuse
Mohamed Nawaz இந்த வேளையில், எல்லா விஷயங்களையும் பகிரங்கப்படுத்த முடியாது.இவ்வாறு, அவர் கூறினார். இவரது அமைச்சரவை என்ன முன்னரே உறங்கி கொண்டிருந்ததா? நடப்பது நடக்கட்டும் பின்னர் சிலரை பிடித்து உள்ளே போட்டு காரியத்தை முடித்துவிடலாம் என்ற என்னமா? இவர்கள் உண்மையான குற்றவாளிகள் என்றால் இவர்களது நடவடிக்கையை கண்காணிக்க தவறிய இரண்டு மாநில அரசுமே குற்றவாளிகல்தான். உள்துறை மந்திரிகள் உறங்கக்கூடாது. உடனே குற்றங்கள் தாமதமின்றி நிரூபிக்கப்பட வேண்டும் மரண தண்டனை அளிக்கப்பட வேண்டும் இல்லையென்றால் அரசுகள் இதற்கு தார்மீக பொறுப்பேற்று பதவி விலக வேண்டும். கிச்சான் புஹாரி மீது பல வழக்குகள் நிலுவையில் இருக்கும் பட்சத்தில் அவனை குறிப்பிட்ட காவல் நிலையத்தில் தினமும் கையொப்பமிட செய்திருக்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
zahoor ahmed - vellore,இந்தியா
25-ஏப்-201313:10:57 IST Report Abuse
zahoor ahmed இந்த தீவிரவாதிகளுக்கு கடவுள் நேர் வழி காட்ட வேண்டும். மனித உயிர்களின் மதிப்பை உணராத இவர்கள் மிருகங்கள்.
Rate this:
Share this comment
Padmanaban - DC,யூ.எஸ்.ஏ
26-ஏப்-201304:24:21 IST Report Abuse
Padmanabanஉண்மை. முதலில் இந்த காங்கிரஸ் அரசு மக்களுக்கு வாழ வழிவகை செய்யவேண்டும். எந்த அரசியல் வாதி, வேலை வாய்ப்பு, கல்வி, மருத்துவம், குட்டி கம்பெனி க்கு அதரவு, இப்படி பேசுகிறான்.. நான் இதுவரை பார்க்க வில்லை. அனால் இப்போது மோடி பேசி நான் பார்கிறேன்...பார்போம்.....மோடி என்ன செய்யபோகிறார் என்று...
Rate this:
Share this comment
Cancel
Sathyamoorthy - Bangalore,இந்தியா
25-ஏப்-201312:58:49 IST Report Abuse
Sathyamoorthy தீவிரவாதம், பயங்கரவாதத்தை பற்றி பேசக்கூடாது. நமக்கும் மத சார்பு வந்துவிடும். குண்டு வைப்பவர்களுக்கு சலாம் போட வேண்டும். அப்போதுதான் நாம் மத சார்பற்றவர்கள்.
Rate this:
Share this comment
Cancel
Ashok ,India - India,இந்தியா
25-ஏப்-201312:26:11 IST Report Abuse
Ashok ,India தமிழக மற்றும் கர்நாடக போலிசின் அலட்சியமே இந்த குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ காரணம். அணைத்து காவலர்களும் செல்போன் பேச்சுக்கு அடிமையாகி விட்டனர். முன்பு 1960 ஆண்டுகளில் சைக்கிள் மூலம் போலீசார் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் நகரை வலம் வருவார்கள். 1980 முதல் மோட்டார் சைக்கிள் மூலம் போலீசார் நகர் சட்டம் ஒழுங்கை பராமரித்தார்கள். 2000 ஆண்டு முதல் நவீன சுமோ கார்களில் நகரை சுற்றி வந்தார்கள். ஆனால் இன்று போலீசார் செல் போன் மூலமாகவே ஒரே இடத்தில உட்கார்ந்து கொண்டு வேலை செய்கிறார்கள். உயர் அதிகார்கள் அவர்களது வாகனத்தை விட்டு தரையில் கால் வைப்பதில்லை. இன்ஸ்பெக்டர்கள் தங்களது அறையை விட்டு வெளியே வருவதில்லை. ஏதாவது மிக பெரிய சம்பவம் நடந்தால் மட்டுமே மக்களை வந்து பார்கிறார்கள். ஒவ்வரு பகுதி இன்ஸ்பெக்டரும் அந்த பகுதியில் அணைத்து பகுதிக்கும் நேரடியாக சென்று மக்களிடம் நேரடியாக கலந்தால் மட்டுமே இனி குற்றம் குறையும். என்னதான் கேமரா போட்டாலும் போலீஸ் நேரடியாக களம் இறங்கினால் மட்டுமே குற்றம் குறையும். போலீஸ் மீதும்,சட்டத்தின் மீதும் குற்றவாளிகளுக்கு பயம் இல்லை.
Rate this:
Share this comment
Cancel
Arulraj - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
25-ஏப்-201312:05:12 IST Report Abuse
Arulraj தமிழகத்துக்கு மேலப்பாளையம் ஒரு தலை வேதனை தரக்கூடிய நகரம், தமிழா விழித்தெழு
Rate this:
Share this comment
Cancel
K.Balasubramanian - Reading RG5 1DG ,யுனைடெட் கிங்டம்
25-ஏப்-201311:20:37 IST Report Abuse
K.Balasubramanian தேசீய நலன் விரும்பும் எவரும் இந்த குற்றத்தினை பயங்கர வாதம் என்றே கூறுவார்கள் .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X