பயங்கரவாத பயிற்சி முகாமில் ஆயுதங்கள் பறிமுதல்: துப்பாக்கி முனையில் 21 பேர் கைது: பின்னணியில் "திடுக்'

Updated : ஏப் 25, 2013 | Added : ஏப் 24, 2013 | கருத்துகள் (23)
Share
Advertisement
பயங்கரவாத பயிற்சி முகாமில் ஆயுதங்கள் பறிமுதல்: துப்பாக்கி முனையில் 21 பேர் கைது: பின்னணியில் "திடுக்'

கேரளாவில், ரகசியமாக ஆயுதப் பயிற்சியில் ஈடுபட்ட, 21 பேரை, துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்த கண்ணூர் போலீசார், ஏராளமான ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். ஈரான் நாட்டவரின் அடையாள அட்டை சிக்கியதால், விசாரணை தீவிரமடைந்துள்ளது.

கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம், நாறாத்து என்ற கிராமத்தில், மர்ம நபர்கள் ஆயுதப் பயிற்சி முகாம் நடத்துவதாக, எஸ்.பி.,க்கு ரகசிய தகவல் கிடைத்தது. நேற்றுமுன்தினம், டி.எஸ்.பி., தலைமையிலான போலீஸ் படையினர், அங்கு திடீர் சோதனை நடத்தினர். தென்னந்தோப்பிலுள்ள கட்டடத்துக்குள், பயங்கர ஆயுதங்களுடன் பயிற்சியில் ஈடுபட்டிருந்த அப்துல் சமது, பகத், ஷெரீப், நவுபல், பைசல், ஷபீக், ஜம்ஷீர் உள்ளிட்ட, 21 பேரை, போலீசார் துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்து பிடித்தனர்; நான்கு பேர் தப்பியோடி தலைமறைவாகினர். சிக்கிய நபர்களிடம் அரிவாள், வெடிபொருட்கள், ஆயுதம் கொண்டு எதிரியை வெட்டி வீழ்த்தும் பயிற்சிக்காக, தயார் செய்து வைக்கப்பட்டிருந்த, மனித உருவ பொம்மை, ஈரான் நாட்டினரின் அடையாள அட்டை, மொபைல் போன்கள், இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.ஆயுதப் பயிற்சியின் நோக்கம் என்ன, முக்கிய பிரமுகர்களை கொலை செய்யும் திட்டத்துடன் பயிற்சி அளிக்கப்பட்டதா, பயிற்சி முகாம் எத்தனை மாதங்களாக நடக்கிறது, எத்தனை பேர் பயிற்சி பெற்றுள்ளனர் என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில், போலீசார் விசாரிக்கின்றனர்.

போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:திரைமறைவு பயங்கரவாத இயக்கம் என, உளவு அமைப்பால் சந்தேகிக்கப்படும் ஒரு இயக்கத்தினர், ஆயுதப் பயிற்சி நடந்த கட்டடத்தை, சமீபத்தில் வாங்கியுள்ளனர். இங்கு, சில நாட்களுக்கு முன், இலவச மருத்துவ முகாம் நடத்தி, யாருக்கும் சந்தேகம் வராமல் பார்த்துக் கொண்டனர்.அதன்பின், வெளியாட்களை அழைத்து வந்து, ஆயுதப் பயிற்சி அளித்துள்ளனர். கைதான வாலிபர்களில் பலர், இளநிலை, முதுநிலை பட்டதாரிகள். கார் ஷோரூமில் பணியாற்றும் விற்பனை பிரதிநிதி, பெயின்டர், ஆட்டோ டிரைவர், சிவில் இன்ஜினியரும் உள்ளனர்.இவர்கள், "ஸ்லீப்பர் செல்'லாக இருக்கக் கூடும். ஸ்லீப்பர் செல் என்பது, அடையாளம் காணப்படாத பயங்கரவாத இயக்கத்தின், ரகசிய உறுப்பினர்களை கொண்ட, வெளியில் தெரியாத அல்லது கண்டறிய முடியாத ரகசிய குழு.இதில், இடம் பெற்றிருக்கும் உறுப்பினர்கள், அன்றாடம் அவரவர் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருப்பர். தங்களுக்கு மேலிடத்திலிருந்து உத்தரவு வந்ததும், திடீர் என, களமிறங்கி, கொலை, குண்டுவெடிப்பு சதிகளில் ஈடுபடுவர். இதுபோன்ற நபர்களை, போலீசாரால் எளிதாக கண்டறிய முடியாது.தற்போது, ஆயுதப் பயிற்சி முகாமில் சிக்கியுள்ள நபர்கள், ஸ்லீப்பர் செல்லைச் சார்ந்தவர்களா என, விசாரிக்கிறோம்.இவ்வாறு, அவர் கூறினார்.

- நமது சிறப்பு நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mahie - coimbatore  ( Posted via: Dinamalar Android App )
25-ஏப்-201311:13:51 IST Report Abuse
Mahie தமிழகத்தி்லும் இது போன்ற அமைப்புகள் அதி்க அளவு இருக்க அதி்க வாய்ப்புகள் இருக்கிறது இதனை தீவிரமாக கண்கானிக்க படவேண்டும்
Rate this:
Cancel
Ahamed sha - Riyadh,சவுதி அரேபியா
25-ஏப்-201311:08:48 IST Report Abuse
Ahamed sha தண்டனை கடுமையாகவும் ,அதிகாரிகள் ,அரசியல்வாதிகளும் பணத்திற்கு ஆசை படாமல் நேர்மையாக இருந்தால் இந்தியாவில் குற்றங்கள் நடப்பது ரொம்ப குறைந்து விடும்.
Rate this:
Cancel
sasi, packottuvilai - vashafaru,மாலத்தீவு
25-ஏப்-201310:49:23 IST Report Abuse
sasi, packottuvilai மதங்கள் தீவிரவாதத்தை ஊகுவிக்கிரதா? அப்படியானால் அந்த மதங்கள் தேவை தானா ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X