பாதல், ராகுல் பங்கேற்பு அரசு மரியாதையுடன் சரப்ஜித் சிங் உடல் தகனம்

Updated : மே 04, 2013 | Added : மே 03, 2013 | கருத்துகள் (7)
Advertisement
 பாதல், ராகுல் பங்கேற்பு அரசு மரியாதையுடன் சரப்ஜித் சிங் உடல் தகனம்

பிகிவிண்ட்:பாகிஸ்தான் சிறையில், கைதிகளால் அடித்து கொலை செய்யப்பட்ட, இந்தியர், சரப்ஜித் சிங்கின் உடல், நேற்று, அவரின் சொந்த ஊரில், முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. இதில், பஞ்சாப் முதல்வர் பாதல், மத்திய அமைச்சர் பிரினீத் கவுர், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் உட்பட, ஏராளமானோர் பங்கேற்றனர்.பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸ் அருகே உள்ள, பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய, பிகிவிண்ட் என்ற கிராமத்தை சேர்ந்தவர், சரப்ஜித் சிங். பாகிஸ்தானின் லாகூர் நகரில், 1990ம் ஆண்டு தொடர் வெடிகுண்டுகள் வெடித்தன. அதில், இந்திய உளவுப்படையான, "ரா' வின் கைவரிசை இருக்கலாம் என, பாகிஸ்தான் கருதி வந்தது.

வெடிகுண்டு வழக்கு:இந்நிலையில், இந்தியா - பாகிஸ்தான் எல்லை அருகே, போதையில் சுற்றித் திரிந்த, சரப்ஜித் சிங்கை, இந்திய உளவாளி எனக் கருதிய பாகிஸ்தான் போலீசார், அவரைப் பிடித்து சென்று, சிறையில் அடைத்தனர். அவர் மீது, வெடிகுண்டு வழக்குகள் தொடரப்பட்டு, தூக்கு தண்டனை அறிவிக்கப்பட்டது.அவரின் கருணை மனுக்களை, கோர்ட்டுகளும், அப்போதைய அதிபர் முஷாரப்பும் நிராகரித்த நிலையில், தண்டனையை, அதிபர் ஜர்தாரி அரசு நிறுத்தி வைத்திருந்தது.
இந்நிலையில், லாகூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சரப்ஜித் சிங்கை, சில நாட்களுக்கு முன், பாகிஸ்தானை சேர்ந்த கைதிகள் சிலர் தாக்கியதில், பலத்த காயமடைந்த அவர், சுயநினைவு இழந்தார். "கோமா' நிலையில், லாகூர் மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று முன்தினம் அதிகாலையில் இறந்தார்.லாகூர் மருத்துவமனையில், பிரேத பரிசோதனைக்குப் பிறகு, அவர் உடல், சிறப்பு விமானத்தில் இந்தியா கொண்டு வரப்பட்டது. அமிர்தசரஸ் நகர மருத்துவமனையில், மீண்டும் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
சொந்த ஊரில் தகனம்:பிறகு, சொந்த ஊரான பிகிவிண்டிற்கு, ஹெலிகாப்டரில் எடுத்துச் செல்லப்பட்ட சரப்ஜித் உடல், நேற்று அங்கேயே தகனம் செய்யப்பட்டது.இறுதிச் சடங்குகளை, சரப்ஜித்தின் மூத்த சகோதரி, தல்பீர் சிங் மேற்கொண்டார். மாநில அரசு சார்பில், முழு அரசு மரியாதையுடன், சரப்ஜித் சிங் உடல், துப்பாக்கி குண்டுகள் முழங்க, தகனம் செய்யப்பட்டது.இதில், மாநில முதல்வர், பிரகாஷ் சிங் பாதல், துணை முதல்வர், சுக்பீர் சிங் பாதல், வெளியுறவுத் துறை இணையமைச்சர், பிரினீத் கவுர், காங்கிரஸ் பொதுச் செயலர், ராகுல் உட்பட, ஏராளமானோர் பங்கேற்றனர்.சரப்ஜித் மறைவுக்கு, இரங்கல் தெரிவிக்கும் விதமாக, பஞ்சாப் மாநிலத்தில், மூன்று நாள் துக்கம் கடைபிடிக்கப்படுகிறது.மாநில சட்டசபையின் சிறப்பு கூட்டம் நேற்று கூடி, "சரப்ஜித் சிங், தேசிய தியாகி; அவர் மறைவு குறித்து, சர்வதேச விசாரணை நடத்த வேண்டும்' என, தீர்மானம் நிறைவேற்றியது.
உடல் உறுப்புகள் அகற்றம்:லாகூர் சிறையில் சரப்ஜித் சிங் மீது நடத்தப்பட்ட கொடூர தாக்குதலில், அவர் தலையில், 5 செ.மீ., அகலத்திற்கு காயம் ஏற்பட்டிருந்தது. ஆழமாக இருந்த அந்த காயம் தான், அவரை, "கோமா' நிலைக்கு கொண்டு சென்றது என, அவரின் உடலை, பிரேத பரிசோதனை செய்த, லாகூர் டாக்டர்களில் ஒருவர் கூறியுள்ளார்.மேலும், மரணம் ஏற்பட்டதற்கான காரணத்தை கண்டுபிடிக்க, சரப்ஜித் சிங்கின் மண்ணீரல், சிறுநீரகம், கல்லீரல், குடல், மூளை போன்ற பாகங்கள் அகற்றப்பட்டு, ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், அந்த டாக்டர் கூறினார்.
பத்திரிகைகள் இரங்கல்:பாக்., சிறையில், சரப்ஜித் கொல்லப் பட்டதற்கு, அந்நாட்டு பத்திரிகைகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. சம்பந்தப்பட்டவர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வலியுறுத்திஉள்ளன.நேற்று வெளியான, பாகிஸ்தான் பத்திரிகைகளில், முதல் பக்கத்தில், சரப்ஜித் சிங் செய்தி வெளியாகி இருந்தது. அந்த பத்திரிகைகளில், சரப்ஜித் சிங் மரணத்திற்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் செய்திகள் இடம் பெற்றிருந்தன. மேலும், நியாயமான முறையில் விசாரணை நடத்த வேண்டும் எனவும், அந்த பத்திரிகைகள் வலியுறுத்தியிருந்தன.

Advertisement


வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mohamed Nawaz - Sakaka,சவுதி அரேபியா
04-மே-201313:04:49 IST Report Abuse
Mohamed Nawaz இந்திய சுதந்திர போராட்ட தியாகி, கார்கில் வீரர் போங்கடா உங்க அரசியல் விளையாட்டில் நாங்கள் பலியாகிறோம்.
Rate this:
Share this comment
Cancel
சகுனி - ஸ்ரீபெரும்புதூர்,இந்தியா
04-மே-201310:32:05 IST Report Abuse
சகுனி உசிரோட இருக்கும்போது குடிக்க பச்ச தண்ணி குடுக்க வக்கில்ல ........ அவன காப்பாத்தனும்னு அறிவில்ல ....... மாதிரி பாகிஸ்தானுக்கு பயந்து உள்ள போயி ஒளிஞ்சிக்கிட்டவனுங்க ............ வந்துட்டானுங்க சாவு வீட்லயும் அரசியல் செய்யிறதுக்கு ....... மானம் கெட்டவனுங்க .......
Rate this:
Share this comment

Microsoft OLE DB Provider for SQL Server error '80040e31'

Query timeout expired

/xtralog_load_full_taboolabc.asp, line 393