கர்நாடக சட்டசபைக்கு இன்று தேர்தல்: பாதுகாப்புக்கு 1.35 லட்சம் போலீசார்

Updated : மே 05, 2013 | Added : மே 04, 2013 | கருத்துகள் (3)
Advertisement
கர்நாடக சட்டசபைக்கு இன்று தேர்தல்: பாதுகாப்புக்கு 1.35 லட்சம் போலீசார்

பெங்களூரு:கர்நாடக சட்டசபைக்கு, இன்று தேர்தல் நடக்கிறது. 223 தொகுதிகளுக்கு, ஒரே கட்டமாக ஒட்டுப்பதிவு நடக்கிறது. ஒரு தொகுதியில், பா.ஜ., வேட்பாளர் மறைவால் தேர்தல் ரத்து செய்யப்பட்டு உள்ளது. பாதுகாப்பு பணியில், 1.35 லட்சம் போலீசார் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். ஓட்டு எண்ணிக்கை, வரும், 8ம் தேதி நடக்கிறது.

கர்நாடகாவில், 2008ம் ஆண்டு நடந்த தேர்தலில், பா.ஜ., 110 தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்று, சுயேச்சைகள் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. ஆனால், ஐந்தாண்டுகளை கடந்து வருவதற்குள் படாதபாடுபட்டது.முன்னாள் முதல்வர் எடியூரப்பா, பா.ஜ.,விலிருந்து விலகி, கர்நாடக ஜனதாகட்சியை துவக்கி போட்டியிடுகிறார். காங்கிரஸ், தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதாதளம், பி.எஸ்.ஆர்., காங்கிரஸ் கட்சி மற்றும்கம்யூனிஸ்ட் கட்சிகளும் களத்தில் நிற்கின்றன.பெண்கள் குறைவு:கர்நாடகாவில், இதுவரை நடந்த தேர்தல்களை விட, இம்முறை வித்தியாசமாக இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தமுள்ள, 223 தொகுதிகளில், 2,948 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என, கூறும் தேசிய கட்சிகளான பா.ஜ.,வும், காங்கிரசும் கூறி வந்த போதிலும், அதை செயல்படுத்தியதாக தெரியவில்லை. பெண் வேட்பாளர்கள், 170 பேர் தான்போட்டியிடுகின்றனர்.
மாநிலம் முழுவதும், 52 ஆயிரத்து, 34 ஓட்டுச் சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. 2008 தேர்தலை காட்டிலும், 6,000 ஓட்டுச்சாவடிகள் இம்முறை கூடுதலாக அமைக்கப்பட்டு உள்ளன. மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், 79 ஆயிரத்து, 364 பயன்படுத்தப்படுகின்றன.கர்நாடக அரசியல்வாதிகளின் தலைவிதியை நிர்ணயிக்க, 4.36 கோடி வாக்காளர்கள் தங்கள் ஓட்டு உரிமையை பயன்படுத்தஉள்ளனர். சமீபத்தில், பெங்களூருவில் குண்டு வெடிப்பு நடந்ததால், தேர்தலை பாதுகாப்பாக நடத்த, முன் எப்போதும் இல்லாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

மத்திய பாதுகாப்பு படை போலீசார் உட்பட, மொத்தம், 1.35 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, கர்நாடக மாநில சட்டம்-ஒழுங்கு ஏ.டி.ஜி.பி., பிபின் கோபாலகிருஷ்ணா கூறியதாவது:மொத்த போலீசாரில், 75 ஆயிரம் பேர் மாநில போலீசைச் சேர்ந்தவர்கள். ஆந்திரா மற்றும் மகாராஷ்டிராவில் இருந்து, 4,500 ஊர்காவல் படையினர், 1,200 வனக்காவலர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மீதமுள்ளவர்கள், மத்திய போலீஸ் படையைச் சேர்ந்தவர்கள்.
மத்திய ஆயுதப்படை போலீசார், இந்தோ - திபெத் எல்லை படை மற்றும் எல்லை பாதுகாப்பு படையினரும் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.மொத்தமுள்ள ஓட்டுச்சாவடிகளில், 9,954 சாவடிகள் மிகவும் பதற்றம் உள்ளவையாக கண்டறியப்பட்டு உள்ளன. 14 ஆயிரத்து 209 சாவடிகள் பதற்றம் நிறைந்தவை என, தெரியவந்துள்ளன.நக்சலைட்டுகளால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில், 149 சாவடிகள் வருகின்றன. இங்கு, மத்திய படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
ரூ.7 கோடி பறிமுதல்:தேர்தல் பிரசாரத்தின் போது, வாக்காளர்களுக்கு பண பட்டுவாடா செய்வதற்கு முயன்ற வேட்பாளர்களிடம் இருந்து, 7.48 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வெளிநாட்டு மதுபானம், பெருமளவில் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இதன் மதிப்புமட்டும், 11.50 கோடி ரூபாய்.மேலும், சேலைகள் உட்பட, வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டு இருந்த, 11.66 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் கைப்பற்றப்பட்டு உள்ளன.இவ்வாறு, அவர் கூறினார்.
ரூ.200 கோடி:ஓட்டுப்பதிவு இன்று காலை, 7:00 மணியில் இருந்து மாலை, 5:00 மணி வரை நடக்கிறது.தேர்தல் செலவுகளுக்காக, மாநில அரசு, 200 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. இதில், 175 கோடி ரூபாய் வரை செலவிடப்படலாம். தேர்தல் விதிமுறைகளை மீறி, 2,500 சம்பவங்கள் நடந்துள்ளன. 650 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.தேர்தல் தினத்தன்று அரசியல் ரீதியான கருத்துகளையோ, பேட்டிகளையோ வெளியிடாமல், வாக்காளர்கள் சுயமாக தீர்மானிக்க வாய்ப்பு ஏற்படுத்தித் தர வேண்டும் என்று, மாநில தேர்தல் அதிகாரி அனில்குமார் ஜாஉத்தரவிட்டு உள்ளார்.வாக்காளர்களுக்கான பூத் சிலிப்களை, தேர்தல் கமிஷனே நேரடியாக வழங்கி வருகிறது. ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் மையங்களில், பாதுகாப்புக்கு, மத்திய ஆயுத படை போலீசாரே நிறுத்தப்பட உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
villupuram jeevithan - villupuram,இந்தியா
05-மே-201305:26:01 IST Report Abuse
villupuram jeevithan எடயூரப்பாவுக்காக காங்கிரசை தேர்ந்தெடுத்தால் காங்கிரசுக்கு தைரியம் கொடுத்ததாகிவிடுமே?
Rate this:
Share this comment
Cancel
யதார்தவாதி வெகுஜன விரோதி - சிராப்பள்ளி,இந்தியா
05-மே-201304:27:14 IST Report Abuse
யதார்தவாதி வெகுஜன விரோதி மக்கள், அலைகற்றை, ஆதர்ஷ், ஹெலிகாப்ட்டர், நிலக்கரி, காமன் வேல்து, டி எல் எப் வதேரா, சரப்ஜித், சீன ஊடுருவல் போன்றவற்றை மனதில் கொண்டு வாக்களிக்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
தமிழன் - Melanikuzhi(Ariyalur-DT),இந்தியா
05-மே-201303:53:42 IST Report Abuse
தமிழன் இத்தாலி ஜி உங்களுக்கு இத்தாலிக்கு புறப்பட நேரம் வந்துடுச்சு பேமளியோட ரெடியா இருங்க வண்டி வருது .....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X