பொது செய்தி

இந்தியா

தாயின் இதய வால்வுகளை தானமாக வழங்கிய 11வயது மகன்

Updated : மே 08, 2013 | Added : மே 07, 2013 | கருத்துகள் (29)
Advertisement
தாயின் இதய வால்வுகளை தானமாக வழங்கிய 11வயது மகன்

திருவனந்தபுரம்: விபத்தில் உயிரிழந்த தாயின், இதய வால்வுகளை, தானமாக வழங்கி, பிறரின் பாராட்டைப் பெற்றுள்ளான், 11 வயது சிறுவன் விஷ்ணு.கேரள மாநில தலைநகர், திருவனந்தபுரத்தில் வசிப்பவர் ராதிகா. அரசு ஊழியரான இவர், சில நாட்களுக்கு முன், தன், 11 வயது மகன் விஷ்ணுவுடன், ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, எதிரே வந்த ஆட்டோ, ஸ்கூட்டர் மீது பயங்கரமாக மோதியதில், சம்பவ இடத்திலேயே, ராதிகா இறந்தார்.சிறு காயங்களுடன், சிறுவன் உயிர் தப்பினான். ராதிகாவின் கணவர், சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டதால், தாயுடன் வசித்து வந்த சிறுவன், விபத்திற்கு பின், அனாதையாகி விட்டான்.எனினும், தன் தாயின் உடல் உறுப்புகளைத் தானமாக வழங்க, அச்சிறுவன் முன் வந்தான்.

சித்திரைத் திருநாள் மருத்துவமனையில், இதய அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள சிலருக்கு, இதய வால்வு தேவைப்படுவதை அறிந்த அச்சிறுவனை, மருத்துவர்கள் அணுகினர். தாயின் உடல் உறுப்புகளை தானமாக தர, அந்தச் சிறுவன் சம்மதம் தெரிவித்தான்.அதன்படி, ராதிகாவின் இதய வால்வுகள் அகற்றப்பட்டன. பரிசோதனைக்குப் பிறகு, தகுதி வாய்ந்தவர்களுக்கு வழங்கப்படும் என, மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

தந்தையையும், தாயையும் இழந்துள்ள சிறுவன், உறவினர் பராமரிப்பில் உள்ளான். தாயின் இதய வால்வுகளை தானமாக வழங்க முன் வந்த 11 வயது மகனை பலரும் பாராட்டியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
karthikeyan - karur,இந்தியா
08-மே-201320:54:24 IST Report Abuse
karthikeyan சிறிய வயதில் அரிய செயலை செய்த பிஞ்சு உள்ளமே நீ வாழ்க பல்லாண்டு ....
Rate this:
Share this comment
Cancel
Bilal Ahmed - dubai,இந்தியா
08-மே-201319:43:28 IST Report Abuse
Bilal Ahmed மிகவும் வருத்தமாக உள்ளது சிறுவனை பற்றி படிக்கும்போது. கடவுள் எல்லா வழிகளிலும் இவனுக்கும் அருள் புரியவேண்டும்
Rate this:
Share this comment
Cancel
kumaresan.m - hochimin ,வியட்னாம்
08-மே-201319:19:57 IST Report Abuse
kumaresan.m " இப்பிள்ளையின் பெருஞ்செயலை கண்டு வியக்க பெற்றோர்கள் இல்லையே இறைவா இந்த பிள்ளை இனி உங்கள் பிள்ளை நீங்கள் தான் கடைசி வரை உடன் இருந்து பிள்ளையை காத்தருள வேண்டுகிறோம் ....சிறுவயதில் பெற்றோர்கள் இன்றி தவிப்பது கொடுமையிலும் கொடுமை .....வேதனைகளை இந்த பிஞ்சு உள்ளம் எவ்வாறு தாங்கும் ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X