நிர்வாண நடனம் ஆடிய மாணவர் காங்., நிர்வாகி

Added : மே 08, 2013 | கருத்துகள் (4)
Advertisement
 நிர்வாண நடனம் ஆடிய மாணவர் காங்., நிர்வாகி

மும்பை:காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பான, என்.எஸ்.யு.ஐ., மும்பை நகர தலைவர், நிர்வாண நடனம் ஆடியதற்காக, "சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பு, என்.எஸ்.யு.ஐ., இதன், மும்பை நகர தலைவராக இருப்பவர், சூரஜ் சிங் தாக்குர். கடந்த மாதம் நடந்த கட்சி கூட்டத்தில், இளைஞர்கள் சிலருடன் சேர்ந்து, தாக்குர், நிர்வாண நடனம் ஆடியுள்ளார்.அந்தக் காட்சிகள், கடந்த ஞாயிறு அன்று, இணையதளங்களில் வெளியாகின. அதைப் பார்த்த காங்கிரஸ் மேலிடம், தாக்குரை, இளைஞர் அமைப்பின் தலைவர் பொறுப்பிலிருந்து, தற்காலிகமாக நீக்கி உத்தரவிட்டுள்ளது.நேற்று முன் தினம் வரை, தாக்குரின் நிர்வாண நடன காட்சிகள், இணைய தளங்களில், உலா வந்தன. கட்சி மேலிடம் கேட்டுக் கொண்டதற்கிணங்க, அந்தக் காட்சிகள், பிறகு நீக்கப்பட்டன.
தாக்குர் உடன் சேர்ந்து, மேலும் சில நிர்வாகிகள், தங்கள் ஆடைகளை களைந்து, நிர்வாணமாக ஆடியுள்ளனர். தாக்குர் மற்றும் அவருடன் நிர்வாண நடனம் ஆடிய அனைவருமே, போதை மயக்கத்தில் இருந்தது, வீடியோ காட்சிகளில் தெரிந்தது.கட்சி கூட்டத்தில், எதற்காக, தாக்குர் நிர்வாண நடனம் ஆடினார்; மும்பை நகர தலைவர் பொறுப்புக்கு, கடந்த ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட தாக்குரை, கட்சி மேலிடத் தலைவர்கள், "ராகிங்' செய்தனரா; அதனால் தான், அவர் நிர்வாணமாக ஆடினாரா என, விசாரிக்கப்படுகிறது.
விசாரணைக்குப் பிறகு, தாக்குரும், அவருடன் ஆடிய நிர்வாகிகள் இருவரும், காங்கிரசில் இருந்து நீக்கப்படுவர் என, கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S. MURALIDHARAN - CHENNAI,இந்தியா
08-மே-201323:34:59 IST Report Abuse
S. MURALIDHARAN இந்த ஆள் அம்மணமாக ஆடுகிறான் பதவியில் உள்ளவன் கோடி, கோடியாக லஞ்சம் வாங்கிக் குவிக்கிறான். மற்ற எல்லோரும் கோரசாக அதை மறைக்கிறார்கள், மறுக்கிறார்கள் பின்னர் நீதி மன்றம் அந்த ஊழலை அம்பலப் படுத்துகிறது. ஆக மொத்தத்தில் காங்கிரஸ் காரன் என்றால் மானம் கெட்டவனாகத்தான் இருப்பான் என்ற நிலை வர, தீவிரமாக எல்லா வழியிலும் முயற்சி செய்கிறார்கள். எப்படி இருந்த கட்சி, இப்படி ஆகி விட்டது
Rate this:
Share this comment
Cancel
Sakthivel Mariappan - tiruppur,இந்தியா
08-மே-201318:45:11 IST Report Abuse
Sakthivel Mariappan எதையும் மறைக்க கூடாதுன்னு உங்க கட்சிக்கு இப்படி சொல்லி புரிய வைக்கிறீங்க வாழ்த்துக்கள் .....
Rate this:
Share this comment
Cancel
LAX - Trichy,இந்தியா
08-மே-201318:03:09 IST Report Abuse
LAX தற்காலிகமாக நீக்கினீங்களா....? ஆட்களுக்கு அவ்வளோ பஞ்சமா காங்கிரசில்?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X