இரவு நேர பஸ் போக்குவரத்து நிறுத்தம் எதிரொலி : கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் வியாபாரம் பாதிப்பு

Added : மே 08, 2013 | கருத்துகள் (3) | |
Advertisement
கடலூர்: பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதால், கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில், வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ராமதாஸ் சிறையில் அடைக்கப்பட்டதைத் தொடர்ந்து, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் பஸ்கள் மீது கல் வீச்சு, பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இரு மாவட்டங்களிலும், நேற்று முன்தினம் வரை, 145 பஸ்களில், கண்ணாடிகள்
இரவு நேர பஸ் போக்குவரத்து நிறுத்தம் எதிரொலி : கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் வியாபாரம் பாதிப்பு

கடலூர்: பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதால், கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில், வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ராமதாஸ் சிறையில் அடைக்கப்பட்டதைத் தொடர்ந்து, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் பஸ்கள் மீது கல் வீச்சு, பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இரு மாவட்டங்களிலும், நேற்று முன்தினம் வரை, 145 பஸ்களில், கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளன.
இதனால், மாலை 6:00 மணிக்கு பின், பஸ் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டு வருகிறது.
கிராமப் பகுதிக்கு பஸ் போக்குவரத்து இல்லாததால், நகரப் பகுதியில் உள்ள தனியார் மற்றும் அரசு ஊழியர்கள், பணிக்கு சரியாக வருவதில்லை. வந்தாலும் மாலை 5:00 மணிக்கே, வீட்டிற்கு புறப்பட்டு விடுகின்றனர். இதனால், அரசு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் தினம் தினம் "பந்த்' நடப்பதைப்போன்ற உணர்வு ஏற்பட்டுவிட்டதால் , பொதுமக்கள் தற்போது மாலை 6:00 மணிக்குள் வீட்டிற்கு வந்து முடங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். கிராம பகுதியில் பஸ்கள் செல்லாததால், பொதுமக்கள் கடைவீதிக்கு வருவது, முற்றிலுமாக தடைபட்டுள்ளது. இதனால், நகரப் பகுதி வர்த்தக நிறுவனங்களில், வியாபாரம் குறைந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
09-மே-201308:58:17 IST Report Abuse
Srinivasan Kannaiya அரசுக்கு இரும்பு கரம் இருப்பதாக் சொல்லிகொல்கிறதே .... அதை கொஞ்சம் வெளியே நீட்டி ...... நடவடிக்கை எடுத்து... மக்களின் குஐகலை தீருங்களேன்..
Rate this:
Cancel
Ram - chennai  ( Posted via: Dinamalar Android App )
09-மே-201308:37:48 IST Report Abuse
Ram They never realise the fact
Rate this:
Cancel
Ambaiyaar@raja - Nellai to chennai ,இந்தியா
09-மே-201300:47:28 IST Report Abuse
Ambaiyaar@raja இதற்க்கு அரசு ஒரு முடிவினை ஏற்படுத்தவேண்டும் அந்த வன்முறை கும்பலை எல்லாம் ஒடுக்கி மக்கள் நல்ல வாழ வழி செய்யவேணும் அந்த வன்முறை கும்பல் மீது இன்னும் கடும் நடவடிக்கை தேவை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X