கடந்த, அ.தி.மு.க., ஆட்சியில், சட்டசபை மானிய கோரிக்கை விவாதத்தின் போது, நுங்கம்பாக்கம் அகஸ்தீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான பல ஏக்கர் நிலங்கள், மீட்கப்பட்டதாக அப்போதைய அறநிலைய துறை அமைச்சர் அறிவித்தார். ஆனால், 15.6 கோடி ரூபாய் மதிப்புள்ள அந்த நிலங்கள் மீண்டும் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளன. நுங்கம்பாக்கம், வடக்கு வீதியில், அகஸ்தீஸ்வரர் - பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் அமைந்துள்ளது. 1959ல், இந்து சமய அறநிலைய துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்ட இந்த கோவிலுக்கு சொந்தமாக, 20 ஏக்கர் நிலம் உள்ளது.
தனியாருக்கு விற்பனை : இதில், வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலையை ஒட்டிய சொக்கட்டான் சாலையில், 10 கிரவுண்ட் (சர்வே எண்.451/1,452/1) நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன.
அறநிலைய துறையின் கட்டுப்பாட்டில் @காவில் வந்தபோது, தர்மகர்த்தாவாக இருந்தவர், 10 கிரவுண்ட் நிலங்களை, போலி பத்திரங்கள் மூலம், தனி நபர்கள் பலருக்கும் விற்றதாகவும், அவருக்கு கோவில் செயல் அலுவலர்களும் உடந்தையாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் ஏற்பட்ட நெருக்கடியை தவிர்க்க, தர்மகர்த்தாவின் மனைவி, ""எனக்கும், இந்த பிரச்னைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை,'' என, "நோட்டீஸ்' அடித்து, பகுதி முழுக்க வினியோகம் செய்தார். அப்போதும், அறநிலைய துறை அதிகாரிகள், இதில் கவனம் செலுத்தவில்லை.
அறநிலைய துறைக்கு சொந்தமான இடங்களை குத்தகைக்கு எடுப்பதற்கு மட்டுமே அனுமதி <உண்டு. ஆனால், சட்டத்திற்கு புறம்பான வகையில், கோவில் நிலங்கள், தர்மகர்த்தாவால் விற்கப்பட்டன.
அறநிலைய துறை தூக்கம் : புகார்களின் பேரில் எடுக்கப்பட்ட நடவடிக்கையின் பின்னணியில், 2003ம் ஆண்டு, அ.தி.மு.க., ஆட்சியில், அப்போதைய அறநிலைய துறை அமைச்சர் சி.பி.ராமசாமி, கோவிலுக்கு சொந்தமான நடைபாதையை அரசு மீட்டு விட்டதாக, சட்டசபையில் அறிவித்தார். ஆனால், இன்று வரை,
அந்த நடைபாதை உட்பட கோவிலுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடம் எதுவும் மீட்கப்படவில்லை. இது தொடர்பாக, அறநிலைய துறையும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என, கூறப்படுகிறது.
கோவிலுக்கு சொந்தமான இடங்களில் குடியிருப்போர், யாரிடம் வாடகை கொடுக்கின்றனர், என்ன விதமான ஒப்பந்தம் செய்திருக்கின்றனர் உள்ளிட்ட விவரங்களும் அறநிலைய துறையிடம் இல்லை.
கோவிலுக்கு சொந்தமான இடங்கள், போலி பட்டாக்கள் மூலம் விற்கப்பட்டுள்ளன என்பதை, 2010ல் அப்போதைய அறநிலைய துறை ஆணையர் ஒப்பு கொண்டிருக்கிறார்.
இது தொடர்பாக, இந்து சமூக நல ஆர்வலர்கள், 2009, 2010, 2011ம் ஆண்டுகளில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெற்ற விவரங்களில், இந்த தகவல்கள் அளிக்கப்பட்டு உள்ளன.
இது குறித்து, 2011, பிப்., 2ம் தேதி நடைபெற்ற விசாரணையில், 451/1, 452/1 ஆகிய சர்வே எண்களில், ஆக்கிரமிப்பு உள்ளது என்றும், அவற்றை அகற்ற அறநிலைய துறை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் தமிழ்நாடு தகவல் ஆணையம் உறுதிபட தெரிவித்துள்ளது.
ஆணையம் விŒõரணை : இது குறித்து, 2011, பிப்., 2ம் தேதி நடைபெற்ற விசாரணையில், 451/1, 452/1 ஆகிய சர்வே எண்களில், ஆக்கிரமிப்பு உள்ளது என்றும், அவற்றை அகற்ற அறநிலைய துறை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் தமிழ்நாடு தகவல் ஆணையம் உறுதிபட தெரிவித்துள்ளது.
"ஆக்கிரமிப்புகளை அகற்ற, உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்; இல்லாவிடில் துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்படும்' என, தமிழ்நாடு தகவல் ஆணையம் எச்சரித்தும் எவ்வித பலனும் ஏற்படவில்லை. தற்@பாது, ஆக்கிரமிக்கப்பட்ட இடங்களில், மளிகை கடை, வீடுகள், மசூதி போன்றவை கட்டப்பட்டு உள்ளன. இவற்றிடம், மாநகராட்சி வரி வசூல் செய்து வருவது, குறிப்பிடத்தக்கது.
பக்தர்கள் @காரிக்கை : இதுகுறித்து, அகஸ்தீஸ்வரர் @காவில் பக்தர்கள் கூறியதாவது: @காவில் நிலங்களை முறை@கடாக விற்பனை செய்தோர் மீது, இன்று வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இன்றைய சந்தை மதிப்பில், 10 கிரவுண்ட் நிலம், பல கோடி ரூபாய்க்கு விற்பனையாகும். அதை மீட்டால், வாடகை மூலம் நல்ல வருமானம் வரும். அறநிலைய துறை மூலம், அதை கோவில்களுக்கு செலவழிக்கலாம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.
இன்றைய வழிகாட்டி மதிப்பின்படி, öŒõக்கட்டான் தெருவில், ஒரு Œதுரடியின் மதிப்பு 6,500 ரூபா#. அந்த கணக்கின்படி, 10 கிரவுண்ட் நிலத்தின் மதிப்பு 15.6 @காடி ரூபா#. இதை மீட்டால், வாடகை மூலமாவது, @காவில் பராமரிப்பிற்கு நல்ல வருமானம் வரும் என்பது பக்தர்களின் கருத்தாக உள்ளது.
அறநிலைய துறை அதிகாரிகளிடம் இதுகுறித்து கேட்டபோது, பதில் அளிக்க மறுத்து விட்டனர்.
ஒருங்கிணைப்பு இல்லாததே காரணம்! : இந்து சமய அறநிலைய துறை, கோவில் நிலம் ஆக்கிரமிக்கப்பட்ட போதே, மின்சாரம், வருவாய், உள்ளாட்சி ஆகிய துறைகளுக்கு, முறைப்படி தகவல் தெரிவித்து, சர்ச்சைக்குரிய கட்டடங்களுக்கு எந்த இணைப்பும் வழங்க கூடாது என, அறிவுறுத்தி இருந்தால், துவக்கத்திலேயே இந்த பிரச்னை முடிவுக்கு வந்திருக்கும். மேலும், ஆக்கிரமிப்பாளர்கள், அடுத்தடுத்த நடவடிக்கைக்கு சென்றிருக்க வாய்ப்பில்லை. எனவே, இந்து சமய அறநிலைய துறை, மற்ற துறைகளோடு ஒருங்கிணைந்து செயல்படாததே, பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட காரணம். எனவே, இனிமேலாவது, மற்ற துறைகளோடு, இணைந்து செயல்பட்டு, வருவாய் இழப்பை தடுக்க வேண்டும்.
- நமது நிருபர் -