திறப்பு விழாவுக்காக காத்திருக்கும் ராமேஸ்வரம் அன்னதானக் கூடம்

Added : மே 08, 2013 | |
Advertisement
ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் கோவிலில், அன்னதான கூடம் கட்டடப் பணி முடிந்தும் திறக்கப்படாததால், இடவசதி குறைவான கூடத்தில், சாப்பிட வசதியின்றி பக்தர்கள் பரிதவிக்கின்றனர். ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில், தினமும், 500க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு, அன்னதானம் வழங்கப்படுகிறது. கோவில் தெற்கு பகுதியில் உள்ள சிறிய அன்னதான கூடத்தில், 45 பேர் மட்டுமே சாப்பிடும் வசதி உள்ளது. இதற்காக,
 திறப்பு விழாவுக்காக காத்திருக்கும்  ராமேஸ்வரம் அன்னதானக் கூடம்

ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் கோவிலில், அன்னதான கூடம் கட்டடப் பணி முடிந்தும் திறக்கப்படாததால், இடவசதி குறைவான கூடத்தில், சாப்பிட வசதியின்றி பக்தர்கள் பரிதவிக்கின்றனர்.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில், தினமும், 500க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு, அன்னதானம் வழங்கப்படுகிறது. கோவில் தெற்கு பகுதியில் உள்ள சிறிய அன்னதான கூடத்தில், 45 பேர் மட்டுமே சாப்பிடும் வசதி உள்ளது. இதற்காக, இந்த கூடம் அருகே, 46 லட்சம் ரூபாயில், 300 பேர் சாப்பிடும் வகையில், அன்னதான கூடம் கட்டப்பட்டது. கட்டடப்பணி முடிந்து, ஆறு மாதமாகியும், கோவில் நிர்வாகம், பூட்டியே வைத்துள்ளது. இதனால், பழைய அன்னதான கூடத்தில், பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். கோவில் இணை கமிஷனர் செல்வராஜ் கூறுகையில், ""அன்னதான கூடம் விரைவில் திறக்கப்படும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X