சிறந்த தாய்-சேய் நலம்: ஐரோப்பிய நாடுகள் சூப்பர் ;இந்தியா ,ஆப்ரிக்க நாடுகள் படுமோசம்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்

Updated : மே 10, 2013 | Added : மே 09, 2013 | கருத்துகள் (12)
Advertisement
 சிறந்த தாய்-சேய் நலம்: ஐரோப்பிய நாடுகள் சூப்பர் ;இந்தியா ,ஆப்ரிக்க நாடுகள் படுமோசம்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்

பீஜிங்: உலகிலேயே, மிகச்சிறந்த, தாய்-சேய் நலனில், பின்லாந்து நாடு முன்னணியில் உள்ளது. இதில், இந்தியா, 142வது இடத்தில் உள்ளது.உலக, தாய்-சேய் நலம் குறித்த ஆண்டறிக்கையை, "குழந்தைகளை காப்போம்' என்ற சர்வதேச, அரசு சாரா அமைப்பு ஒன்று வெளியிட்டுள்ளது.

இதில், உலகத்தில், 176 நாடுகளில், தாய்-சேய் நலன் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.இதில், பின்லாந்து நாட்டை சேர்ந்த பெண்களே, சிறந்த தாய்களாக, முதலிடத்தில் உள்ளனர். அதைத் தொடர்ந்து, ஸ்வீடன், நார்வே, ஐஸ்லாந்து போன்ற நாடுகள் இடம் பெற்றுள்ளன. இதில், கடைசியாக, அதாவது, மிகவும் மோசமான நிலையில், காங்கோ நாட்டின் பெண்கள் உள்ளனர்.

ஐந்து விதமான பட்டியல்:கர்ப்ப காலத்தில், பெண்களின் உடல்நிலை, குழந்தை பிறப்பு, கல்வி, வேலை மற்றும் வருவாய், அரசியல் சூழ்நிலை ஆகிய ஐந்து அம்சங்களின் அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.இதில், காங்கோவில், கர்ப்ப காலத்தில், 30 பேரில் ஒருவர் வீதம் சராசரியாக இறந்து விடுகிறார்கள். அதுவே, பின்லாந்தில், 12,200 பேரில் ஒருவர் மட்டுமே இறக்கிறார்.கல்வியைப் பொறுத்தவரை, காங்கோவில், 8 ஆண்டுகள் மட்டுமே பள்ளிகளுக்கு பெண்கள் அனுப்பப்படுகின்றனர். பின்லாந்தில், 17 ஆண்டுகால கல்வியை பெண்கள் பெறுகின்றனர். பின்லாந்து பார்லிமென்டில், பெண்களின் பங்கு, 43 சதவீதமாக உள்ளது. காங்கோவில், 8 சதவீதமாக இது, இருக்கிறது.

இந்தியா:இருப்பினும், இந்த ஐந்து வகையான பட்டியலில், எல்லாவற்றிலும் பின்லாந்து முன்னணியில் இல்லை. இருப்பினும், தாய்-சேய் நலனில், 12வது இடத்தில், இந்த நாடு உள்ளது. இதைத் தொடர்ந்து, அமெரிக்கா, 30வது இடத்திலும், பாகிஸ்தான், 139வது இடத்திலும், சீனா, 68வது இடத்திலும் உள்ளது. இதில், இந்தியா, 142வது இடத்தில் உள்ளது.தாய், குழந்தைகளின் கல்வி, பொருளாதார நிலை மற்றும் அரசியல் நிலையில், முதல் பத்து இடங்களில், பின்லாந்து, ஸ்வீடன், நார்வே, ஐஸ்லாந்து, நெதர்லாந்து, டென்மார்க், ஸ்பெயின், பெல்ஜியம், ஜெர்மனி ஆகிய ஐரோப்பிய நாடுகளே முன்னணியில் உள்ளன. இந்தப்பட்டியலில், ஆஸ்திரேலியாவும் இடம் பெற்றுள்ளது. ஆப்ரிக்க நாடுகளான, நைஜீரியா, 169, ஜாம்பியா, 170, மத்திய ஆப்ரிக்க குடியரசு, 171, நைஜர், 172, மாலி, 173, சோமாலியா, 175, காங்கோ, 176வது இடங்களில் உள்ளன.இந்த நாடுகளில், தாய்-சேய் ஆகியோரின் நலம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. கர்ப்ப காலத்தில், முப்பது பேரில், ஒருவர் வீதம் சராசரியாக இறந்து விடுகின்றனர். அதுபோல், 7ல் ஒரு குழந்தை, தன் ஐந்தாவது பிறந்த நாளுக்கு முன்னதாகவே இறந்து விடுகிறது.இவ்வாறு, அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kumaresan.m - hochimin ,வியட்னாம்
10-மே-201319:31:02 IST Report Abuse
kumaresan.m " இந்தியாவில் பெண் கல்விக்கு முன் உரிமை மற்றும் பெண்களுக்கு சம உரிமை கொடுத்தால் ஜெட் வேகத்தில் முன்னேற்றம் காணலாம் "
Rate this:
Share this comment
Cancel
kumaresan.m - hochimin ,வியட்னாம்
10-மே-201319:28:24 IST Report Abuse
kumaresan.m " இதற்கு மிக காரணம் கல்வி அறிவு மற்றும் விழிப்புணர்வு. வேறந்த சிதம்பர ரகசியம் இல்லை "
Rate this:
Share this comment
Cancel
Prabagar B. - Long Island,யூ.எஸ்.ஏ
10-மே-201314:42:58 IST Report Abuse
Prabagar B. Do you guys know that European countries act demons in the name of social workers, last year some 90 thousand kids were taken from their mother to do forced adoption in UK and in norway some 110 thousand kids separated from their monther some 10s of thousands kids by birth in the name of future risk of emotional abuse of the kids. They will let live the mom but take away her souls. Read about forced adoptions in UK and Norway, which is a worst nightmare for parents. these separation takeplace in secret courts and the parents cant get help or talk about it to press or public otherwise the will be s to prison. tens of thousands of innocent parents suffered gravely. We never think about separating kids from moms in india. but for the sake of adoption industry money they are doing these grave sin separating kids by birth from mothers in some of the European countries. They should be ashamed to have such law, only few kids need protection but what is happening in european countries is cruel thing and the pain inflicted on the parents can't be explained in words. write about forced adoption in european countries.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X