பொது செய்தி

தமிழ்நாடு

இரட்டைக் குழந்தைகள் பிறப்பு அதிகரிப்பு ஏன்? டாக்டர்கள் "திடுக்' தகவல்

Updated : ஆக 28, 2010 | Added : ஆக 26, 2010 | கருத்துகள் (9)
Advertisement

சென்னை : "கருத்தரிப்பு மாத்திரைகளை உட்கொள்வதால், இரட்டைக் குழந்தைகள் பிறப்பு விகிதம் அதிகரிப்பதுடன், பக்கவிளைவுகளும் ஏற்படுகின்றன' என, மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.


சென்னை போன்ற பெருநகரங்களில் பெரும்பாலான பெண்கள் தாமதமாக திருமணம் செய்து கொள்கின்றனர். இதனால், மணமான ஓரிரு ஆண்டுகளிலேயே குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகின்றனர். குழந்தை பெற்றுக் கொள்வதில் உடல் ரீதியாக இவர்கள் சந்திக்கும் பிரச்னைகளை எதிர்கொள்ள, கருத்தரிப்பு மாத்திரைகள், ஊசிகளை எடுத்துக் கொள்கின்றனர். இவற்றால், இயற்கை முறை கருத்தரிப்பைவிட, இரட்டை குழந்தைகள் பிறப்பு விகிதம் அதிகரிப்பதுடன் பக்கவிளைவுகளும் ஏற்படுகின்றன.


திருவல்லிக்கேணி அரசு கஸ்தூரிபாய் காந்தி தாய் சேய் நல மருத்துவமனை டாக்டர். ரமேஷ் கூறியதாவது: நகரங்களில் வாழும் பெண்களில் பெரும்பாலானோர், 25 வயதுக்கு மேல் தான் திருமணம் செய்து கொள்கின்றனர். 30 வயதிற்கு மேல் குழந்தை பெற்றுக் கொள்வதில் தான் தாய்க்கும், சேய்க்கும் மருத்துவ ரீதியான சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. இதனால், இவர்களுக்கு, மணமாகிய சில மாதங்களிலேயே கருத்தரித்திட வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுகிறது. சினைப் பையிலிருந்து கருமுட்டை வெளியேறுவதில் பிரச்னை, சீரற்ற மாதவிடாய் சுழற்சி போன்றவற்றால் இவர்கள் உடனே கருத்தரிப்பதில் பிரச்னைகள் ஏற்படுகின்றன. இப்பிரச்னைகளை களைய உட்கொள்ளப்படும் கருத்தரிப்பு மாத்திரைகள், ஊசிகள் இரட்டைக் குழந்தைகள் பிறப்பு விகிதத்தை அதிகரிக்கின்றன.


எங்கள் மருத்துவமனையில் 2007ம் ஆண்டு 80, 2008ம் ஆண்டில் 131 மற்றும் இந்த ஆண்டு ஜூலை வரை 49 இரட்டைக் குழந்தைகளும் பிறந்துள்ளன. அளவிற்கு அதிகமாக கருத்தரிப்பு மருந்துகளை எடுத்துக் கொள்பவர்களுக்கு, பிரசவத் திற்கு பின் உடல் பருமன், மாதவிடாயின்போது அதிக ரத்தப்போக்கு, கல்லீரல் பாதிப்பு, சினைப்பை புற்றுநோய், கண்பார்வை மங்குதல் போன்ற பக்கவிளைவுகள் ஏற்படுகின்றன. சரியான வயதில் திருமணம், ஆரோக்கியமான உணவு முறை, முடிந்தவரை இயற்கை முறையில் கருத்தரிக்க முயற்சிப்பது போன்றவற்றால், கருத்தரிப்பு மாத்திரைகளால் ஏற்படும் பக்க விளைவுகளை தவிர்க்கலாம். இவ்வாறு டாக்டர் ரமேஷ் கூறினார்.


தனியார் கருத்தரிப்பு மையத்தின் மருத்துவ இயக்குனர் டாக்டர்.கீதா ஹரிபிரியா கூறும்போது, ""இயற்கை முறையை ஒப்பிடும்போது, கருத்தரிப்பு ஊசிகள் மூலம் 30 சதவீதமும், மாத்திரைகள் மூலம் 8 சதவீதமும் அதிகமாக இரட்டைக் குழந்தைகள் பிறக்கின்றன. திருமணமாகி ஒரு ஆண்டிற்குள் கருத்தரிக்காத இளம்பெண்களும் கருத்தரிப்பு மாத்திரைகளை சாப்பிடும் ஆபத்தான போக்கு தற்போது அதிகரித்து வருகிறது,'' என்றார்.


இரண்டு கருக்கள் எப்படி: கருத்தரிப்பு பிரச்னை உள்ளவர்களில் பெரும்பாலானோருக்கு, சினைப்பையைச் சுற்றி உருவாகும் நீர்க்குமிழிகள், கருமுட்டையை கருக்குழாய் வழியாக கர்ப்பப்பைக்கு செல்லாதபடி தடுக்கின்றன. இந்த நீர்க்குமிழிகளை உடைக்க தரப்படும் கருத்தரிப்பு மாத்திரைகளால், அதிக அளவில் நீர்க்குமிழிகள் உடைந்து ஒரே நேரத்தில் இரண்டு கருமுட்டைகளில் விந்துக்கள் இணைந்து இரண்டு கருக்கள் உருவாகின்றன.


Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
suresh - thuraiyur,இந்தியா
27-ஆக-201023:58:24 IST Report Abuse
suresh நல்ல தகவல்
Rate this:
Share this comment
Cancel
ajith - thuriayur,இந்தியா
27-ஆக-201022:46:07 IST Report Abuse
ajith மக்கள்க்கு நல்ல சேதி
Rate this:
Share this comment
Cancel
vijikutti - ap,இந்தியா
27-ஆக-201017:28:56 IST Report Abuse
vijikutti மனவியை நேசிங்கள் நன்றாக வாழ வழி வகுக்கும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X