"காவி பயங்கரவாதம்' : ராஜ்யசபாவில் அமளி

Updated : ஆக 28, 2010 | Added : ஆக 26, 2010 | கருத்துகள் (130)
Share
Advertisement
 "காவி பயங்கரவாதம்' : ராஜ்யசபாவில் அமளி

போபால் : "சிறுபான்மை ஓட்டு வங்கி அரசியலுக்காக, "காவி பயங்கரவாதம்' என்ற வார்த் தையை உள்துறை அமைச்சர் பயன்படுத்தியுள்ளார்' என, பா.ஜ., தலைவர் நிதின் கட்காரி கூறியுள்ளார்.போபாலில் நிருபர்களிடம், பா.ஜ., தலைவர் நிதின் கட்காரி பேசியதாவது: "காவி பயங்கரவாதம்' என்ற நடைமுறை தலை தூக்கி வருவதாக, மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் பேசியுள்ளார். சிறுபான்மை ஓட்டு வங்கி அரசியலுக்காகவே, அவர்களை திருப்திபடுத்தும் வகையில் இவ்வாறு அவர் பேசியுள்ளார்.


மதத்தை தாண்டி இருப்பது பயங்கரவாதம். அவர்களை மத அடிப்படையில் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. பயங்கரவாதிகளை ஒடுக்கும் விஷயத்தில், மத்திய அரசு தீவிரமாகச் செயல்படவில்லை. அதேபோல், நக்சலைட் வன்முறைகளும் அதிகரித்து விட்டன. சொல்லப்போனால் பசுபதிநாத் முதல் கன்னியாகுமரி வரை பரவி நிற்கிறது. போபால் விஷவாயு கசிவுக்கு காரணமான யூனியன் கார்பைடு நிறுவனத்தின் முன்னாள் தலைவர் வாரன் ஆன்டர்சன் தப்பிச் சென்ற விவகாரம் மிகவும் முக்கியமானது. விரைவில் இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்யவுள்ள அமெரிக்க அதிபர் ஒபாமாவிடம், மத்திய அரசு இது குறித்து விரிவாக பேச வேண்டும். போபால் சம்பவத்தின் பின்னணியில் இருந்தது யார் என்ற உண்மை வெளிவர வேண்டும். இவ்வாறு நிதின் கட்காரி கூறினார்.


இந்நிலையில் இன்று ராஜ்யசபாவில் பா.ஜ., மற்றும் சிவசேனா எம்.பி., க்கள் கோஷங்கள் எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். இதனையடுத்து அவை 15 நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்டது.


Advertisement
வாசகர் கருத்து (130)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
இபி - ThiviravathiyinEthiri,இந்தியா
30-ஆக-201016:53:12 IST Report Abuse
இபி பா.சிதம்பரம் அவர்கள் சொல்வது முற்றிலும் சரியே. இந்தக் காவி வந்தபின் தான் இந்தியாவில் பயங்கர வாதம் தீயெனப் பரவி தேசத்தையே சீர்குலைத்து நிற்கிறது. மதவாதம் அதிகமானதிற்கும், முஸ்லிம் தீவிரவாதம் உருவாவதற்கும் முக்கிய காரணமே ஆர்.எஸ்.எஸ். தான். இது கிராமங்கள் தோறும் வந்ததும் மதத்தை கடந்த நட்பு வைத்திருந்த நண்பர்கள் எல்லாம் பகைவர்கள் ஆனார்கள், இது வட இந்திய கும்பல் நாட்டுக்கே வைத்த வேட்டு. மக்கள் திருந்த வேண்டும் , மாற்று மதத்தவரையும் நேசிக்கும் நல்லன்பு வளரவேண்டும், மதம் அவரவர் அளவில் இருக்கட்டும், நாம் இந்தியராய் இருப்போம். இந்தியா இந்துக்களுக்கோ அல்லது காவிக்கோ மட்டும் சொந்தமானதில்லை ,இந்தியா இந்தியனுக்கு மட்டுமே. அதில் மதமில்லை நல்ல மனதுகள் மட்டுமே உருவாகட்டும்.மதம் கடந்து நேசிக்கப் பழகுவோம். வாழ்க பாரதம். நன்றி.... நம்பி அவர்களின் கரத்து 100 சதமானம் சரியே. ஒரு காலத்தில் எல்லா கோவில் கும்பாபிசேக விழாவிலும் இஸ்லாமிய & கிறிஸ்தவ சகோதர்கள் கலந்து கொண்டு சகோதர மனப்பான்மையோடு கலந்திருந்த காலம் உண்டு. என்று இந்த RSS, VHP,Hindumunani போன்ற இயக்கங்கள் வந்ததோ அன்று முதல் பிர மதத்தினர் வருவதில்லை. இன்றைய கும்பாபிசேக விழாவில் இந்த சங்க இயக்கங்கள் பிற மதத்தினரையும் இழிவுபடுத்தும் ஒரு விழாவாக நடத்துகிறார்கள். அப்பாவி பிற மத ரோட்டோர கடை வியாபாரிகளை கடை நடத்துவதற்கு கூட சம்மதிப்பது இல்லை இந்த சங்க கூட்டம்....
Rate this:
Cancel
அறிவுச்செல்வன் - Vellore,இந்தியா
30-ஆக-201011:09:06 IST Report Abuse
அறிவுச்செல்வன்   இங்கே கருத்து தெரிவிக்கும் முஸ்லிம்களுக்கு இந்தியாவில் இந்தியன்,தமிழன்,மக்கள் என்றால் அது முஸ்லிம்கள் மட்டும் தான்.செங்கோடன் சொல்கிறார் rss என்பது இந்தியாவின் சாபக்கேடு என்று.அப்படி என்றால் அல் உம்மா, இந்தியன் முஜகிடீன்.சிமி போன்ற அமைப்புகள் எல்லாம் இந்தியாவின் வரமா! தலிபான்,அல்கைதா,உலகளாவிய ஜிஹாத் எல்லாம் இஸ்லாமிய சகோதரர்களுக்கு இனிக்கும் அமைப்புகளா.
Rate this:
Cancel
nsg - madurai,இந்தியா
28-ஆக-201021:30:21 IST Report Abuse
nsg 1947 இய்ரிந்து இந்தியாவை யார் ஆட்சி செய்கிறார்கள் பிஜேபியா or காங்கிரஸ் யா கிட்டத்தட்ட 55 years ஆட்சி செய்தும் காஷ்மீர் ப்ரோப்லேம் solve பன்னமுடியவில்ல்யே why
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X