காவிரி விவகாரம்: தற்காலிக கண்காணிப்புக்குழு அமைத்து சுப்ரீம் கோர்ட் உத்தரவு

Updated : மே 10, 2013 | Added : மே 10, 2013 | கருத்துகள் (13)
Advertisement
காவிரி விவகாரம்: தற்காலிக கண்காணிப்புக்குழு அமைத்து சுப்ரீம் கோர்ட் உத்தரவு

புதுடில்லி: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி, தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை விசாரித்த சுப்ரீம்கோர்ட், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் வரை, தற்காலிக கண்காணிப்புக்குழுவை அமைத்து காவிரி நடுவர் மன்றக்குழு இறுதி தீர்ப்பை செயல்படுத்த சுப்ரீம்கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

காவிரி நீரை பகிர்ந்து கொள்வதில், கர்நாடகா மற்றும் தமிழக அரசுகளுக்கு இடையே, பல ஆண்டுகளாக பிரச்னை இருந்து வருகிறது. கடந்த, 2007ல், ஒவ்வொரு மாநிலத்துக்கும், காவிரியிலிருந்து, எவ்வளவு நீர் திறந்து விடப்பட வேண்டும் என்பது பற்றி, காவிரி நடுவர் மன்றம், இறுதித் தீர்ப்பு அளித்தது.

காலம் கடத்தியது : இந்த தீர்ப்பை, அரசிதழில் வெளியிடாமல், மத்திய அரசு காலம் கடத்தியது. தமிழக அரசு, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்ததை அடுத்து, "காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பை, உடனடியாக அரசிதழில் வெளியிட வேண்டும்' என, மத்திய அரசுக்கு, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.இதையடுத்து, நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பு, சமீபத்தில் அரசிதழில் வெளியிடப்பட்டது.

இதன்பின், தமிழக அரசு சார்பில், சுப்ரீம் கோர்ட்டில், தாக்கல் செய்யப்பட்ட மனு,காவிரி நடுவர் மன்றம் இறுதித் தீர்ப்பை அளித்த போது, அந்தத் தீர்ப்பை அமல்படுத்த, காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் ஒழுங்குமுறை கமிட்டியை அமைக்க வேண்டும் என பரிந்துரைத்திருந்தது.

விவசாய பணிகள் : தமிழகத்தில், வரும், ஜூன், 1 முதல், விவசாய பணிகள் துவங்கவுள்ளன. எனவே, காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் ஒழுங்குமுறை கமிட்டி ஆகியவற்றை அமைக்கும்படி, மத்திய நீர்வளத் துறை அமைச்சகத்துக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, தமிழக அரசின் மனுவில் கூறப்பட்டிருந்தது.

இதற்கு பதில் அளித்த மத்திய அரசு, "காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் ஒழுங்குமுறை கமிட்டியை அமைக்கும் பணிகள், துவங்கி விட்டன. கர்நாடகாவில், சட்டசபை தேர்தல் பணிகள் நடப்பதால், இந்த பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன' என, தெரிவித்திருந்தது.இந்நிலையில், தமிழக அரசு சார்பில், சுப்ரீம் கோர்ட்டில், 6ம் தேதி , புதிதாக ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், கூறப்பட்டுள்ளதாவது: கர்நாடகாவில், சட்டசபை தேர்தல் பணிகள் முடிந்து விட்டன. தமிழகத்தில் விவசாய பணிகள் துவங்கவுள்ளதை அடுத்து, காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் ஒழுங்குமுறை கமிட்டி ஆகியவற்றை அமைக்கும்படி, மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, தமிழக அரசின் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், நீதிபதிகள், ஆர்.எம்.லோத்தா, சரத் ஏ.போப்தே ஆகியோர் அடங்கிய, "பெஞ்ச்' முன், தமிழக அரசின் மனு, 8ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் ஒழுங்குமுறை கமிட்டி ஆகியவை, எப்போது அமைக்கப்படும் என்பது குறித்து, மத்திய அரசு, வரும், 10ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும். இந்த வழக்கின் அடுத்த விசாரணை, வரும், 10ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுகிறது.இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.

சிறிது காலம் ஆகும்: இந்த வழக்கு இன்று மீண்டும், சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க சிறிது காலம் ஆகும். அதுவரை தற்காலிக குழு அமைக்கலாம் என கூறினார்.

தற்காலிக கண்காணிப்புக்குழு: இதனையடுத்து, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் வரை, தற்காலிக கண்காணிப்புக்குழுவை சுப்ரீம் கோர்ட் அமைத்துள்ளது. மேலும், இந்த தற்காலிக கண்காணிப்புக் குழுவில் தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மாநிலங்களின் தலைமைச்செயலாளர்கள் இடம்பெறுவார்கள். கண்காணிப்புக்குழுவுக்கு மத்திய நீர்வளத்துறை செயலாளர் தலைமை ஏற்பார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் வரை தற்காலிக கண்காணிப்புக்குழு செயல்படும் வாரியம் அமைக்கப்படும் வரை காவிரியில் நீர் திறப்பது பற்றி தற்காலிக குழு முடிவு செய்யும். அதன் முடிவுகளில் மாநிலங்களுக்கு ஆட்சேபனை இருந்தால் சுப்ரீம் கோர்ட்டைஅணுகலாம் என கூறியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Karikalan - Manapakkam, CHENNAI-125.,இந்தியா
11-மே-201307:11:10 IST Report Abuse
Karikalan அடுத்து இந்த தற்காலிக குழு விரைவில் கூட்ட படவேண்டும் என்று அடுத்த உச்சநீதி மன்ற ஆணைக்கு மனு செய்ய வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
villupuram jeevithan - villupuram,இந்தியா
11-மே-201305:36:16 IST Report Abuse
villupuram jeevithan தற்காலிக குழு முடிவின் மீது ஆட்சேபனை இருந்தால் சுப்ரீம் கோர்ட்டைஅணுகலாம் என்பது தான் உதைக்குது. மறுபடியும் கோர்ட்டா? அதாவது மறுபடியும் முதலிலிருந்து?
Rate this:
Share this comment
Cancel
sundararaman - chennai,இந்தியா
10-மே-201322:21:25 IST Report Abuse
sundararaman ஜெயலலிதாவின் விடா முயற்சிக்கு கிடைத்த வெற்றி தமிழையும் தமிழக நலனையும் சுயலாபத்திற்காக இத்தாலிய சுரண்டல் கூட்டங்களின் காலடியில் அடகு வைத்த கூட்டமும் அவற்றிற்கு பல்லாண்டு பாடிய கூட்டமும் செய்யத்தவறியதை இப்போது ஜெயலலிதா செய்திருப்பது தமிழர்களின் எதிர்காலம் வழமையாகவே உள்ளது என்பதையே காட்டுகிறது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X