கர்நாடக முதல்வராக சித்தராமையா தேர்வு செய்யப்பட்டார்

Updated : மே 10, 2013 | Added : மே 10, 2013 | கருத்துகள் (36)
Advertisement
Siddaramaiah, Chief Minister, Karnataka, declare,leader, கர்நாடகா, முதல்வர், சித்தராமையா, தேர்வு

பெங்களூரு: கர்நாடக முதல்வராக சித்தராமையா தேர்வு செய்யப்பட்டார். பெங்களூருவில் நடந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில் சித்தராமையா முதல்வராக தேர்வு செய்யப்பட்டார்.

கர்நாடகாவில், கடந்த, 5ம் தேதி, சட்டசபை தேர்தல் நடந்தது. இதில் பதிவான ஓட்டுக்கள், நேற்று முன் தினம் எண்ணப்பட்டன. தேர்தலுக்கு முந்தைய மற்றும் ஓட்டுப் பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை, உண்மை என, நிரூபிக்கும் வகையில், தேர்தல் நடந்த, 223 தொகுதிகளில், 121 தொகுதிகளில், காங்கிரஸ் வெற்றி பெற்று, ஆட்சியைப் பிடித்துள்ளது.

கார்கே முதலிடம் : ஏழு ஆண்டுகளுக்குப் பின், கர்நாடகாவில் காங்., ஆட்சியை கைப்பற்றியுள்ளதால், அந்தக் கட்சியினர் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். இருந்தாலும், அடுத்த முதல்வர் யார் என்ற பரபரப்பும் கிளம்பியுள்ளது. அதற்கேற்ற வகையில், மாநில காங்., தலைவர்கள் இடையே, முதல்வர் பதவிக்கான போட்டி கடுமையாக உள்ளது.

முதல்வர் பதவிக்கான போட்டியில், இரண்டாவது இடத்தில் இருந்தவர் சித்தராமையா. கர்நாடக காங்கிரசின் இன்றைய முகம் இவரே. "முதல்வராக வரலாம்' என, முதலில் எதிர்பார்க்கப்பட்ட, மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வர், இந்த தேர்தலில் தோற்று விட்டதால், தனக்கே முதல்வர் பதவி என்ற நம்பிக்கையுடன் இருந்தார் சித்தராமையா.

குருபா இனம் : பழைய மைசூரில், 7 சதவீத ஓட்டு வங்கியை கொண்டிருக்கும், குருபா இனத்தைச் சேர்ந்தவர். ஆனாலும், இவர் ஆரம்பம் முதல் காங்கிரசில் இருக்கவில்லை. ஜனதா கட்சி, ஜனதா தளம், தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகளில் இருந்து விட்டு, 2006ல், காங்கிரசுக்கு வந்தவர். கடந்த 1996,2004ம் ஆண்டுகளில் கர்நாடக மாநில துணை முதல்வராகவும் சித்தராமையா இருந்துள்ளார். கடந்த பா.ஜ., ஆட்சியின் போதும் சட்டசபை எதிர்க்கட்சி தலைவராகவும் சித்தராமையா இருந்துள்ளார்.

இந்நிலையில், காங்கிரஸ் சட்டசபை கட்சித் தலைவரை தேர்ந்தெடுக்கும் கூட்டம், இன்று பெங்களூருவில் நடைபெற்றது. இதில் புதிதாக தேர்வான, காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் பங்கேற்று, சட்டசபை கட்சித் தலைவரை தேர்வு செய்தனர்.முதல்வராக யாரை தேர்வு செய்யலாம் என்பது குறித்து கலந்து ஆலோசிக்க, கட்சியின் மேலிடப் பார்வையாளர்களாக, மத்திய அமைச்சர் ஏ.கே.அந்தோணி உட்பட, நான்கு பேர் இன்று பெங்களூரு வந்தனர்.

காங்கிரஸ் மேலிடம் எப்போதும், இரண்டு விதங்களில் முதல்வரை தேர்வு செய்யும். ஒன்று, முதல்வர் யார் என்பதை மேலிடமே முடிவு செய்து, அந்தப் பெயரை எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில் முன்மொழிந்து ஒப்புதல் பெறும்.இரண்டாவதாக, ஒவ்வொரு எம்.எல்.ஏ.,க்களையும் தனித்தனியாக அழைத்துப் பேசி, அவர்கள் யாரை தலைவராக தேர்வு செய்ய விரும்புகின்றனர் என்பதை கண்டறிந்து, அதன் அடிப்படையில் முடிவு எடுக்கும்.

இன்று மதியம் காங்கிரஸ் கட்சி தலைவர் சிவகுமார் என்பவர் கூறுகையில், கர்நாடக முதல்வர், ரகசிய ஓட்டெடுப்பு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளதாக கூறினார்.

இதனையடுத்து இன்று எம்.எல்.ஏ.,க்கள் மத்தியில் நடந்த ரகசிய ஓட்டெடுப்பில் கர்நாடக முதல்வராக சித்தராமையா தேர்வு செய்யப்பட்டார். பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவரான சித்தராமையா, தெற்கு கர்நாடகாவில் உள்ள வரூணா தொகுதியிலிருந்து 5 முறை எம்.எல்.ஏ.,வாக தேர்வு செய்யப்பட்டவர். ரகசிய ஓட்டெடுப்பில் சித்தராமையாவுக்கு ஆதரவாக 80 ஓட்டுக்களும், கார்கேவுக்கு ஆதரவாக 40 ஓட்டுக்களும் கிடைத்தன.கர்நாடக முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ள சித்தராமையா திங்களன்று முதல்வராக பதவியேற்க உள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (36)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K.Balasubramanian - Reading RG5 1DG ,யுனைடெட் கிங்டம்
11-மே-201315:45:56 IST Report Abuse
K.Balasubramanian சித்த ராமையா செல்வாக்கு நன்றாக தெரிகிறது .அவரின் ஆட்சி அனைவர்க்கும் ( அண்டை மாநிலங்கள் உட்பட ) நலன் பயக்கட்டும்
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
11-மே-201313:20:11 IST Report Abuse
Nallavan Nallavan பாஜக எம்.எல்.ஏ. - க்கள் தங்களது செல்போனில் பார்த்த "மேட்டர்" படத்தை இனி ப்ளூடூத் மூலம் காங்கிரஸ் எம்.எல்.ஏ. க்களுக்கு டிரான்ஸ்பர் செய்து விடலாம் .... அவர்களுக்கும் பொழுது போகும் .....
Rate this:
Share this comment
Cancel
Senthilkumar K.p - gobi,இந்தியா
11-மே-201310:03:06 IST Report Abuse
Senthilkumar K.p ராகுலின் புதிய அத்தியாயம் நல்ல தொடக்கம் .சிறப்பான தேர்வு ,அருமையான தேர்வுமுறை, வளர்ச்சிப்பாதையில் கர்நாடகா,காவேரி பிரச்சினை ஒரு தீர்வு ஏற்ப்பட்டு நமது மாநிலத்தோடு சுமூகமான நட்பு தொடர வாழ்த்துக்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X