அமைச்சர் பதவியிலிருந்து பன்சால்-அஸ்வினி ராஜினாமா

Updated : மே 10, 2013 | Added : மே 10, 2013 | கருத்துகள் (11)
Advertisement
Pawan kumar bansal resigns

புதுடில்லி: ஊழல் குற்றச்சாட்டுகளை அடுத்து, அமைச்சர் பதவியிலிருந்து பவன்குமார் பன்சால் ,அஸ்வினி குமார் ஆகியோர் ராஜினாமா செய்தனர். மத்திய ரயில்வே அமைச்சர் பவன்குமார் பன்சாலின் உறவினரான விஜய்சிங்லா, ரயில்வே வாரிய உறுப்பினர், மகேஷ்குமாரிடம், முக்கிய பொறுப்பை பெற்றுத் தருவதாகக் கூறி, ரூ.90 லட்சம் லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தது. அதனால், பவன்குமார் பன்சாலை, பதவி நீக்கம் செய்ய வேண்டும் என, எதிர்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில், நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், பவன்குமார் பன்சால் பங்கேற்காமல் புறக்கணித்தார். அவருக்கு, உடல்நிலை பாதிக்கப்பட்டதாக கூறப்பட்டது. இதற்கிடையில், "மத்திய அமைச்சரவை, விரைவில் மாற்றியமைக்கப்பட உள்ளதாகவும், ரயில்வே அமைச்சராக உள்ள பவன்குமார் பன்சால், மாற்றப்பட்டு, அவருக்கு வேறு துறை ஒதுக்கீடு செய்யப்படலாம்' என, டில்லி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அதேபோல், நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு தொடர்பான சி.பி.ஐ., அறிக்கையில் திருத்தம் செய்த, சட்ட அமைச்சர் அஸ்வினி குமாரும் விரைவில் மாற்றப்படுவார். இருவர் வகித்த முக்கிய பதவிகளுக்கும் யாரை நியமிக்கலாம் என, தற்போது காங்., மேலிடம் தீவிரமாக ஆலோசித்து வருவதாகவும் கூறப்பட்டது.


இதனிடையே, இவ்விவகாரம் இன்று சூடுபிடித்தது. இது தொடர்பாக, காங்கிரஸ் தலைவர் சோனியா, பிரதமர் மன்மோகன் சிங்கை இன்று மாலை சந்தித்து பேசினார். இதைத் தொடர்ந்து பவன்குமார் பன்சால் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
அஸ்வனி ராஜினாமா: பவன் குமார் பன்சாலின் ராஜினாமாவை அடுத்து, நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு விவகாரத்தில், சி.பி.ஐ.,யின் அறிக்கையை திருத்தியதாக, சுப்ரீம் கோர்ட்டிடம் குட்டு வாங்கியுள்ள மத்திய சட்ட அமைச்சர் அஸ்வினி குமாரும் பதவி விலகினார்.


கார்கேவுக்கு வாய்ப்பு? இதனிடையே, கர்நாடக மாநில முதல்வராக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சித்தராமையா தேர்வு செய்யப்பட்டிருப்பதால், அதிருப்தியில் உள்ள அம்மாநிலத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு, ரயில்வே அமைச்சர் பதவி வழங்கப்படாலம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
4வது அமைச்சர்: ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் இரண்டாவது பதவிக்காலத்தில், தனது பதவியை ராஜினாமா செய்யும் 4வது ரயில்வே அமைச்சர் பன்சால் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, ரயில்வே அமைச்சர் பதவியிலிருந்த மம்தா பானர்ஜி, மேற்கு வங்க முதல்வர் ஆனவுடன் தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரைத் தொடர்ந்து, திரிணமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தினேஷ் திவேதி, கடந்த 2012ல் ரயில்வே பட்ஜெட்டில் கட்டணங்களை உயர்த்தியதால், கட்சித்தலைமையின் கோபத்துக்கு ஆளாகி பதவியைத் துறந்தார். தொடர்ந்து, ரயில்வே அமைச்சராக பதவியேற்ற முகுல்ராய், திரிணமுல் காங்கிரஸ், மத்திய அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றதால், தனது பதவியை ராஜினாமா செய்தார். தற்போது 4வதாக பன்சால் ஊழல் குற்றச்சாட்டு காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

பிரதமரிடம் ராஜினாமா கடிதம்: தனது ரயில்வே அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ள பன்சால்-அஸ்வினி ஆகியோர் பிரதமர் இல்லத்திற்கு சென்று தங்களது ராஜினாமா கடிதங்களை நேரில் அளித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஸநாதனன், குமரி மாவட்டம். - நாகர் கோவில்,இந்தியா
10-மே-201323:40:54 IST Report Abuse
ஸநாதனன், குமரி மாவட்டம். இதை முதலிலேயே செய்து பாராளுமன்றத்தின் முடக்கத்தை தடுக்க அரசு ஏன் முயல வில்லை, இது தான் காங்கிரஸ் ஸ்டைல்
Rate this:
Share this comment
Cancel
நீலகண்டன் - Chennai,இந்தியா
10-மே-201323:00:12 IST Report Abuse
நீலகண்டன் இருக்கும் சொற்ப மாதத்தில் கூடியவரையில் எத்தனை பேர் வேண்டுமானாலும் ரயில்வே துறை அமைச்சர் ஆகலாம். ஆனால் ஊழல் என்ற ஓட்டையை அடைத்தால் ஒழிய ஒன்றும் நடவாது. எப்போதும் போல் அமைதி காத்து இப்போது நடவடிக்கை எடுத்தபின் நடந்த தவறுக்கு மத்திய அரசும் பொறுப்பு என்று ஊர்சிதம் ஆகிறது
Rate this:
Share this comment
Cancel
Mohan Ramachandran - Itanagar,இந்தியா
10-மே-201322:48:38 IST Report Abuse
Mohan Ramachandran ரயில் அமைச்சர் தடம் புரண்டார், சட்ட அமைச்சர் கட்டம் கட்ட பட்டார். வாழ்க மக்கள் ஆட்சி
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X