அமைச்சர் நாராயணசாமியுடன் சி.பி.ஐ., இயக்குனர் ஆலோசனை

Updated : மே 11, 2013 | Added : மே 11, 2013 | கருத்துகள் (8)
Advertisement
அமைச்சர் நாராயணசாமியுடன் சி.பி.ஐ., இயக்குனர் ஆலோசனை

புதுடில்லி : நிலக்கரி சுரங்க முறைகேடு விசாரணை விவகாரம், சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில், சி.பி.ஐ., இயக்குனர், ரஞ்சித் சின்கா, நேற்று மத்திய பணியாளர் நலத்துறை இணை அமைச்சர், நாராயணசாமியை சந்தித்து பேசினார். சி.பி.ஐ., செயல்பாடு மற்றும் அது தொடர்பான விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. "நிலக்கரி சுரங்க முறைகேடு குறித்து சி.பி.ஐ., நடத்திய விசாரணை அறிக்கையை, சட்ட அமைச்சர் அஸ்வனி குமார் திருத்தினார். இரண்டு உயர் அதிகாரிகளும், இதில், சம்பந்தப்பட்டு உள்ளனர்' என, சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ., இயக்குனர் தெரிவித்தார்.இதைத் தொடர்ந்து, மத்திய அரசு மற்றும் சி.பி.ஐ.,க்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம் தெரிவித்தது. இதன்பின், சி.பி.ஐ., அளித்த உறுதிமொழியில், சுப்ரீம் கோர்ட் அறிவுரைப்படி நடப்பதாக தெரிவிக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நிலக்கரி சுரங்க முறைகேடு குறித்த விசாரணை அறிக்கையில், மத்திய அரசு தலையீடு தொடர்பான ஆவணங்களை தரும்படி, மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம், சி.பி.ஐ.,யிடம் கோரியிருந்தது.இந்நிலையில், நேற்று சி.பி.ஐ., இயக்குனர், டில்லியில் நார்த் பிளாக்கில் உள்ள மத்திய பணியாளர் நலத்துறை இணை அமைச்சர், நாராயணசாமி அலுவலகத்திற்கு வந்து ஆலோசனை நடத்தினார். சி.பி.ஐ., தொடர்பான நிர்வாக விஷயங்களை கவனிக்கும், அமைச்சக பொறுப்பு நாராயணசாமியிடம் உள்ளது.சமீபத்தில், சி.பி.ஐ., செயல்பாடு குறித்து, சுப்ரீம் கோர்ட் தெரிவித்த கருத்துக்களை தொடர்ந்து, இச்சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.

Advertisement


வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
adithyan - chennai,இந்தியா
11-மே-201308:23:47 IST Report Abuse
adithyan நாராயணசாமிக்கு வாள் வாள் என்று அர்த்தமில்லாமல் கத்த தெரியுமே அல்லாமல் உருப்படியாக, அர்த்தமுடன் பேச கற்றுக்கொள்ள vum
Rate this:
Share this comment
Cancel
kumaresan.m - hochimin ,வியட்னாம்
11-மே-201308:07:15 IST Report Abuse
kumaresan.m இந்தியாவில் அணைத்து துறைகளில் பணியாற்ற துறை ரீதியாக கல்வி தகுதி அவசியம் தேவைப்படுகிறது ......ஆனால் அரசியலுக்கு விதிவிலக்கு ஏன் ? நவீன காலத்திற்கு தகுந்தாற்போல் மக்கள் பிரதிநிதிகள் சட்டத்தில் மாற்றம் கொண்டுவருதல் மிக அவசியம் "
Rate this:
Share this comment
Cancel
kumaresan.m - hochimin ,வியட்னாம்
11-மே-201307:59:57 IST Report Abuse
kumaresan.m இரவு பகல் பாராமல் திறமையுடன் பெரிய படிப்பு எல்லாம் படித்துவிட்டு வந்து ....10 ஆம் வகுப்பு கூட தாண்டாத அரசியல்வாதிகளின் கீழ் வேலை செய்வது .....????
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X