அமைச்சர்கள் நீக்கப்பட்டது சோனியா, பிரதமர் இணைந்து எடுத்த முடிவு: காங்கிரஸ்

Updated : மே 12, 2013 | Added : மே 12, 2013 | கருத்துகள் (2)
Advertisement
அமைச்சர்கள்,சோனியா, பிரதமர்,முடிவு,காங்கிரஸ்,Dropping, minister, decision,PM, Sonia, Congress

புதுடில்லி: மத்திய அமைச்சரவையிலிருந்து பவன்குமார் பன்சால், அஸ்வனி குமார் நீக்கப்பட்டது, பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா இருவரும் இணைந்து எடுத்த முடிவு என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. ரயில்வே வாரியத்தில் முக்கிய பதவி பெற்றுத்தர உறவினர் ரூ.90 லட்சம் லஞ்சம் வாங்கிய விவகாரத்தில், ரயில்வே அமைச்சர் பன்சாலும், நிலக்கரி சுரங்க ஊழல் தொடர்பான அறிக்கையை திருத்திய விவகாரத்தில் மத்திய சட்டத்துறை அமைச்சர் அஸ்வனி குமாரும் தங்களது பதவிகளை கடந்த வெள்ளிக்கிழமை ராஜினாமா செய்தனர். கடந்த வெள்ளிக்கிழமை பிரதமர் மன்மோகன் சிங்கை, காங்கிரஸ் தலைவர் சோனியா சந்தித்து பேசிய பின்னர் இவர்கள் இருவரும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர். இதனால் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு நெருக்கமான இரண்டு அமைச்சர்களும் சோனியா வலியுறுத்தலினால் தான் பதவி விலகினார்கள் என தகவல் வெளியானது.

இந்த தகவல் வெளியானதும், பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி, தனது அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த அமைச்சர்கள் நீக்கம் குறித்து முடிவெடுக்கும் உரிமை பிரதமருக்கு இல்லையா? செய்தித்தாள்களில் சோனியா வலியுறுத்தலினால் அமைச்சர்கள் நீக்கப்பட்டுள்ளனர் என செய்தி வெளியாகியுள்ளது என கூறியிருந்தார்.

இந்நிலையில், அமைச்சர்கள் நீக்கம் குறித்து காங்கிரஸ் கட்சி விளக்கமளித்துள்ளது.

இது குறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜனார்த்தன் திவேதி கூறுகையில், ஒரு சில மீடியாக்களில், அமைச்சர்கள் இருவரும், சோனியா வலியுறுத்தலினால் தான் பதவி விலகினார்கள் என செய்தி வெளியானது. இது தவறான தகவல். பன்சால் மற்றும் அஸ்வனி குமார் இருவரும் பதவி விலக வேண்டும் என்ற முடிவு பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா ஆகியோர் இணைந்து எடுத்த முடிவு என கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
JOHN BOSCO - Tirupattur,இந்தியா
12-மே-201317:17:29 IST Report Abuse
JOHN BOSCO ஓகே. பதவி விலகியது சரி. லஞ்சம் வாங்கிய பணம் எங்கே. சோனியா. பிரதமா் அதை பற்றி கேட்கவில்லையா. ரயில்வே வாரியத்தில் முக்கிய பதவி வகிக்க லஞ்சம் கொடுத்த ஆசாமி எங்கே. பதவியில் இருக்கிறாரா அல்லது பதவி விலகினாரா தெரியவில்லையே. சொல்லுமையா சொல்லும். படிச்சு நல்லா தோ்வு எழுதினா கூட வேலைவாய்ப்பே கிடைக்காம அவதிபடுகிறவா் எத்தனையோ போ் இருக்கிறார்கள். பணத்தை லஞ்சமாக கொடுத்து பதவி பெறுகிறவா்களும் இந்த நாட்டில் இருக்கதான் செய்கிறார்கள். என்ன கொடுமை.
Rate this:
Share this comment
Cancel
K.Balasubramanian - Reading RG5 1DG ,யுனைடெட் கிங்டம்
12-மே-201316:44:47 IST Report Abuse
K.Balasubramanian இதுதான் இரட்டை அதிகாரம் என்று திக் விஜய் முன்பே சொல்லியதா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X