பதிவு செய்த நாள் :
கருத்துகள் (92)  கருத்தை பதிவு செய்ய
எழுத்தின் அளவு:

புதுடில்லி : இந்திய கிரிக்கெட் அரங்கில், சூதாட்ட புயல் தொடர்கதையாக உள்ளது. ஐ.பி.எல்., தொடரில், "ஸ்பாட்-பிக்சிங்கில்' ஈடுபட்ட ராஜஸ்தான் அணியின் ஸ்ரீசாந்த், சண்டிலா, அன்கித் சவான் ஆகியோரை மும்பை போலீஸ் கைது செய்தது. இவர்கள் லட்சக்கணக்கில், சூதாட்டக்காரர்களிடம், பணம் பெற்று வேண்டுமென்றே, "நோ-பால்' வீசியது, ரன்களை வாரி வழங்கியது போன்ற குற்றங்களில் ஈடுபட்டது அம்பலமாகியுள்ளது. ஆறாவது, ஐ.பி.எல்., என்ற இந்தியன் பிரிமியர் லீக் போட்டி தொடர் தற்போது நடக்கிறது. இதில் சென்னை, மும்பை, ராஜஸ்தான், கோல்கட்டா உள்ளிட்ட ஒன்பது அணிகள் பங்கேற்கின்றன. மும்பையில் நேற்று முன் தினம், நடந்த லீக் போட்டியில் மும்பை, ராஜஸ்தான் அணிகள் மோதின. இதில் மும்பை, ராஜஸ்தானை, 14 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
நடந்தது என்ன?
இப்போட்டியில் ராஜஸ்தான் அணியின் அன்கித் சவான், தனது, 2வது ஓவரில், 13 ரன்களுக்கு மேல் கொடுத்து, "ஸ்பாட் பிக்சிங்' செய்துள்ளார். அதன் படி இவர், இந்த ஓவரில், 2 சிக்சர் உட்பட, 15 ரன்களை வழங்கியுள்ளார்.இந்த சூதாட்டத்துக்கு மூளையாக ராஜஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் இருந்துள்ளார். இதன் பின்னணியில், "நிழல் உலக தாதா' தாவூத் இப்ராகிம் தொடர்பு இருப்பதாக தெரிகிறது. இதையடுத்து, மும்பையில் ஸ்ரீசாந்த், அன்கித் சவான், சண்டிலா ஆகியோரை டில்லி சிறப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். இவர்களுடன் சூதாட்டத்தில் ஈடுபட்ட மொத்தம், 14 பேரை,மோசடி மற்றும் கிரிமினல் சதியில் ஈடுபட்டதாக போலீசார் கைது செய்தனர்.
சிக்கியது எப்படி
பிரிமியர் கிரிக்கெட் தொடர் துவங்கிய நாள் முதல், டில்லி சிறப்பு பிரிவு போலீசார் வீரர்களை தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இதில் சந்தேகத்திற்கு இடமான, 70 தொலைபேசி அழைப்புகளின் உரையாடலை வைத்து, ஸ்ரீசாந்த், சவான், சண்டிலாவை பிடித்துள்ளனர்.இதுகுறித்து, ஆதாரங்களை வெளியிட்டு, டில்லி போலீஷ் கமிஷனர் நீரஜ் குமார் கூறியது:சூதாட்டம் குறித்து தகவல்களை பெற, வீரர்கள் மற்றும் புக்கிகள் இடையிலான, 100 மணி நேரத்துக்கும் அதிகமான போன் அழைப்புகள், கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து பதிவு செய்யப்பட்டன. புக்கிகளுடன் செய்து கொண்ட ஒப்பந்தப்படி, ஸ்ரீசாந்த், சண்டிலா, அன்கித் சவான் ஆகிய மூவரும் அதிகளவு ரன்களை விட்டுக்கொடுத்தனர். "டவலை' இடுப்பில் வைத்துக் கொள்வது, "பீல்டிங்' நிறுத்துவது போல தாமதம் செய்வது என, பலமுறைகளில் புக்கிகளுக்கு, "சிக்னல்' கொடுத்தனர்.போட்டி இடைவேளையின் போது, சிக்னல் எதுவும் தருகின்றனரா என, கண்காணிக்க போலீசார், குறிப்பிட்ட போட்டிகளின் போது மைதானத்துக்கு சென்று கவனித்தனர்.

கடைசியில் எல்லாம் சரியாக நடந்ததும், கைது செய்தோம்.மே 5ல் நடந்த போட்டியில் "பிக்சிங்' செய்ய சண்டிலாவுக்கு ரூ. 40 லட்சம் பேசப்பட்டது.
ஏற்கனவே ஒத்துக் கொண்டபடி, 14 ரன்கள் விட்டுத் தந்தார். ஆனால், குறிப்பிட்டபடி, புக்கியிடம், சிக்னல் தரவில்லை. இதனால், பணம் தரமுடியாது என்று புக்கிகள்வாதிட்டனர். கடைசியில் முன்பணமாக பெற்ற, 20 லட்சம் ரூபாயையும் திரும்பக் கொடுத்தார்.
பஞ்சாப் போட்டியில் முதல் ஓவரை ஸ்ரீசாந்த், சாதாரணமாக வீசினார். அடுத்த ஓவர் வீசும் போது, "டவலை' தன் இடுப்பில் வைத்து, புக்கிகளுக்கு சிக்னல் தந்தார். தவிர, களத்தில் பயிற்சி செய்வது போல நேரத்தை வீணடித்து, புக்கிகள் மற்றவர்களுடன், "பிக்சிங்' செய்ய நேரம் ஏற்படுத்தித் தந்தார்.மும்பை போட்டியில், சண்டிலா விளையாடவில்லை. இருப்பினும், அன்கித் சவானை இதில் ஈடுபடுத்தினார். 13 அல்லது அதற்கு மேல் ரன்கள் கொடுப்பதாக சம்மதித்த சவான், இதற்காக தன் கையில் கட்டியிருந்த, "பாண்டை' திருப்புவது போல, சைகை செய்து, "சிக்னல்' தந்தார்.இவ்விஷயத்தில், வெளிநாட்டை சேர்ந்தவர்களுக்கும் தொடர்பு உள்ளது. உறுதியான ஆதாரங்கள் இல்லாத நிலையில், யாருடைய பெயரையும் வெளியிட முடியாது.இவ்வாறு, நீரஜ் குமார் கூறினார்.

5 நாள் காவல்

கைது செய்யப்பட்ட ஸ்ரீசாந்த், சவான், சண்டிலா ஆகிய மூவரும் டில்லியிலுள்ள மாஜிஸ்திரேட் முன் ஆஜர் படுத்தப்பட்டனர். இவர்களை, ஐந்து நாட்கள் போலீஸ் காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.
வாழ்நாள் தடை
கடந்த ஆண்டு நடந்த, ஐ.பி.எல்., தொடரில், ஐந்து வீரர்கள், 15 நாட்களுக்கு, "சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர். இதே போல, இந்த ஆண்டும், "ஸ்பாட் பிக்சிங்கில்' சிக்கியுள்ள, ஸ்ரீசாந்த், அன்கித் சவான், சண்டிலா ஆகியோரும், "சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளனர். இதில், முக்கிய குற்றவாளியாக கருதப்படும், ஸ்ரீசாந்த்திற்கு வாழ்நாள் தடை விதிக்க, வாய்ப்பு உள்ளது. இதனால், எதிர் காலத்தில், எந்த ஒரு கிரிக்கெட்

Advertisement

போட்டிகளிலும் பங்கேற்க இயலாத நிலை ஏற்படும்.

ஸ்பாட் பிக்சிங்' நடப்பது எப்படி
"ஸ்பாட் பிக்சிங்' என்பது,புக்கிகளின் உத்தரவுப்படி, சம்பந்தப்பட்ட வீரர், குறிப்பிட்ட ஓவரில் "நோ-பால்; வைடு அல்லது பவுன்சர்' வீசுவது, அல்லது அதிக ரன்கள் விட்டுக் கொடுப்பர்.
பேட்ஸ்மேன்கள் என்றால், சரியாக விளையாடாமல் விரைவில் அவுட்டாவது, பவுண்டரி, சிக்சர் அடிப்பது என, சூதாட்டத்தில் ஈடுபடுவர். இதில், "மேட்ச் பிக்சிங்' போல, போட்டிகளின் முடிவு நிர்ணயிக்கப்படுவதில்லை. மாறாக, ஏதாவது ஒரு ஓவரில் மட்டுமே தவறு நடக்கிறது.
* தங்களது செயலை செய்யும் முன், மைதானத்தில் அல்லது வேறிடத்தில் உட்கார்ந்து, தங்களை பார்த்துக் கொண்டிருக்கும் புக்கிகளுக்கு, ஏற்கனவே செய்யப்பட்ட முடிவின் படி, "சிக்னல்' கொடுக்கின்றனர்.
* இதற்காக, வீரர்கள் லட்சக்கணக்கில் பணம் பெறுகின்றனர்.
* கடந்த ஆண்டு, பிரீமியர் தொடரில் சுதிந்திரா, ஸ்ரீவாஸ்தவ், மோனிஷ் மிஸ்ரா, அமித் யாதவ், அபினவ் பாலி ஆகிய, ஐந்து வீரர்கள் பிடிபட்டனர். இம்முறை, ஸ்ரீசாந்த் உள்ளிட்ட மூவர் சிக்கினர். ஆறாவது தொடரில் மட்டும், 40 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு, சூதாட்டம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.
* இந்த வகையில், 12 ஆட்டங்களில், சூதாட்டம் நடந்ததாக சந்தேகம் கிளம்பியுள்ளது. இது பற்றி ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (92)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
karthikeyan - karur,இந்தியா
17-மே-201322:03:41 IST Report Abuse
karthikeyan ஊழலுக்கு எதிராகவோ , சூதாட்டத்தை தண்டிதோ இதுவரை யாராவது ஒருவரேனும் கடுமையாக தண்டிக்கப்பட்டுள்ளனரா.... ? வலுவான சட்ட திட்டம் இல்லாமல் நம் நாடு வல்லரசு ஆகும் என்பது வெறும் கனவே ...........
Rate this:
Share this comment
Cancel
Eswaran Ramanathan - kerala,இந்தியா
17-மே-201320:43:35 IST Report Abuse
Eswaran Ramanathan TODAY'S IPL MEANS "Idiots and Porukki League"
Rate this:
Share this comment
Cancel
Elavarasan. M - Chennai,இந்தியா
17-மே-201319:43:03 IST Report Abuse
Elavarasan. M IPL ஊழலைத் தடுக்க நம்மால் நிச்சயம் முடியும். இதற்கு உதாரணமாக கேராளவில் நடைபெற்ற ஒரு சம்பவத்தைக் கூறலாம். ஓணம் பண்டிகைக்குத் தேவையான பொருட்களை எல்லாம் அநியாய விலைக்கு தற்காலிக மார்க்கெட்டில் விற்றார்கள் என்பதற்காக ஒரு கிராமமே இவ்வியபாரிகளிடம் இருந்து பொருட்கள் வாங்காமல் புறக்கணித்தார்கள். அடுத்தமுறை வியாபாரிகள் அடக்கவிலை + செலவு + நியாயமான லாபம் = விற்பனைவிலை என்ற முறையில் விற்பனை செய்தார்கள். நாமும் IPL போட்டிகளைப் புறக்கணித்தால் இவர்கள் வழிக்கு வருவார்கள்.
Rate this:
Share this comment
Cancel
Gudiyerram Mani - Raleigh,யூ.எஸ்.ஏ
17-மே-201319:32:07 IST Report Abuse
Gudiyerram Mani பணத்தையும், நேரத்தையும் வீணடித்த அப்பாவி மக்களுக்கு எப்படி காம்பன்சேட் செய்யப்போகிடது...கிரிக்கட் வாரியம். இனி ஏமாற ஜனங்கள் ஒன்றும் அடிமுட்டள்கள் அல்ல. அதை, அவர்கள் மண்டையில் ஏற்றிகோள்ளட்டும்.
Rate this:
Share this comment
Cancel
K.SURIYANARAYANAN - chennai,இந்தியா
17-மே-201318:41:27 IST Report Abuse
K.SURIYANARAYANAN மொத்தத்தில் இந்த I P L தேவை இல்லை .
Rate this:
Share this comment
Cancel
vandu murugan - chennai,இந்தியா
17-மே-201317:40:59 IST Report Abuse
vandu murugan சரி 60 லட்சம் அடிச்சவனை பிடிசிடிங்க but அந்த 600 கோடி அடிச்சவனை எல்லாம் என்னையா பண்ணிங்க..............
Rate this:
Share this comment
Cancel
vandu murugan - chennai,இந்தியா
17-மே-201317:27:46 IST Report Abuse
vandu murugan IPL match இல் அனைவரும் முழு மூச்சுடன் முழு சிரத்தையுடன் இரவு பகல் பாராமல் விளையாடுகிறார்கள்
Rate this:
Share this comment
Cancel
Chakarapani Narasimhan - chennai,இந்தியா
17-மே-201317:19:29 IST Report Abuse
Chakarapani Narasimhan கிரிக்கெட் வீரர்களுக்கு எவ்வளவு சம்பளம்மாவது இருந்து pogattum ஒருவருக்கும் ஏழைகளுக்கு கொடுக்கும் மனம் வருவதில்லை. இவர்கள் பணம் இப்படித்தான் போகும். பாவம் கிரிக்கெட் ரசிகர்கள்.
Rate this:
Share this comment
Cancel
naagai jagathratchagan - mayiladuthurai ,இந்தியா
17-மே-201317:09:29 IST Report Abuse
naagai jagathratchagan ஏமாந்து போன கிரிக்கெட்டை நடத்தியவர்கள் ...சூதாட்டம் என தெரியாமல் ... குவிந்த ரசிகர்கள் கூட்டம் ...எல்லோரையும் பார்க்க வைத்து... ஏமாற்றிய மட்டை விளையாட்டு மடையர்கள் ...நாட்டின் மீது பக்தி இல்லாத பதர்கள் ..இவர்களை வாழ்நாள் பூராவும் ஜெயிலில் போடலாம் ...இனிமேல் கிரிக்கெட் என்றாலே வெறுப்பு கொள்ளும் அளவிற்கு ஆளாக்கிய இவர்களை ..கடுமையான தண்டனை கொடுத்து ...வாழ் நாள் பூராவும் நினைக்கும்படி செய்யவேண்டும் ..இது மற்றவர்களுக்கு பாடமாக அமையவேண்டும்
Rate this:
Share this comment
Cancel
maravan - dublin,அயர்லாந்து
17-மே-201317:02:54 IST Report Abuse
maravan பாவம் நம் மக்கள்...வேலையை கெடுத்து நேரத்தை வீணாக்கி கிரிக்கெட்டில் மூழ்கி கிடக்கிறார்கள்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X