அரசியல் செய்தி

தமிழ்நாடு

தமிழ்த் தாய்க்கு சிலை:ஆங்கில பாடமொழியா?: கருணாநிதி கேள்வி

Updated : மே 17, 2013 | Added : மே 16, 2013 | கருத்துகள் (102)
Share
Advertisement
சென்னை: தமிழ்த் தாய்க்கு சிலை வைப்பதாகக் கூறிவிட்டு, ஆங்கிலத்தைப் பாட மொழியாக்க முயற்சிப்பது ஒன்றுக்கொன்று முரண்பாடாக உள்ளது,'' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.அவரது பேட்டி:தமிழ்த் தாய் சிலை அமைக்க, 100 கோடி ரூபாய் அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால், தாய்மொழி எல்லா நாடுகளிலும் பயிற்று மொழியாக ஆக்கப்படும் காலக்கட்டத்தில், தமிழகத்தில் அரசின் சார்பில், ஆங்கிலக்
தமிழ்த் தாய்க்கு சிலை:ஆங்கில பாடமொழியா?: கருணாநிதி கேள்வி

சென்னை: தமிழ்த் தாய்க்கு சிலை வைப்பதாகக் கூறிவிட்டு, ஆங்கிலத்தைப் பாட மொழியாக்க முயற்சிப்பது ஒன்றுக்கொன்று முரண்பாடாக உள்ளது,'' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.அவரது பேட்டி:தமிழ்த் தாய் சிலை அமைக்க, 100 கோடி ரூபாய் அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால், தாய்மொழி எல்லா நாடுகளிலும் பயிற்று மொழியாக ஆக்கப்படும் காலக்கட்டத்தில், தமிழகத்தில் அரசின் சார்பில், ஆங்கிலக் கல்வியைப் புகுத்தப் போவதாக விளக்கம் அளித்துள்ளனர். தமிழ்த் தாய்க்கு சிலை வைப்பதும், ஆங்கிலத்தைப் பாட மொழியாக ஆக்க முயற்சிப்பதும் ஒன்றுக்கொன்று முரண்பாடாக உள்ளது.சட்டசபையில் பேச விரும்புவோருக்கு வேலை இல்லை. ஒவ்வொரு நாளும், 110வது விதியின் கீழ் அறிக்கையைப் படித்து விட்டுப் போய் விடுகின்றனர். இதிலே விஷயம் அறிந்த, அரசியல் தெரிந்த, எம்.எல்.ஏ.,க்கள் சட்டசபையில் இருக்கின்றனர். அவர்கள் கூட இதுப்பற்றி வாய் திறக்கவில்லை என்பது தான் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.இவ்வாறு, கருணாநிதி கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (102)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bebeto - Michigan,யூ.எஸ்.ஏ
19-மே-201314:38:35 IST Report Abuse
Bebeto உம்மை சொல்லி குற்றமில்லை.ஏனென்றால் நீர் ஒரு கிரிமினல். ஆனால், இவ்வளவு அநியாயங்கள் செய்தும் இன்னும் உம பின்னால் கண்ணை மூடிக்கொண்டு வரும் திருந்தாத திமுக சொம்புகளை என்ன சொல்வது ? முதல் மொள்ள மாறிகள். உம்முடைய கெட்ட பழக்கங்களை குல தொழிலாக கொண்டிருக்கும் பெரிய கிரிமினல்கள்
Rate this:
Cancel
sakthivel habshan abudhabi - abu dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
18-மே-201317:37:57 IST Report Abuse
  sakthivel habshan abudhabi இப்படி ஒரு முடிவு முன்பு ஒரு தடவை எடுத்ததனால்தான், இந்தி தெரியாமல் வெளிநாடுகளில் கஷ்டப்படுகிறோம், அடுத்து ஆங்கிலமும் தெரியாமல் கெடந்து சாகவேண்டும். இந்தாளின் குடும்பம் எல்லா பாசையும் தெரிந்த குடும்பம். மக்கள் எப்படி போனால் அவர்களிற்கு என்ன.....
Rate this:
Cancel
LAX - Trichy,இந்தியா
17-மே-201311:59:14 IST Report Abuse
LAX ஐயய்யோ.... நாராசம் தாங்க முடியலையே.... மறுபடியும் வாய தொறக்க ஆரம்பிச்சுருச்சே....? குடும்ப பிரச்சனைகள் எல்லாம் முடிஞ்சிருச்சா பெரியவரே....?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X