புதுடில்லி: ஸ்பாட் பிக்சிங் குறித்து கருத்து தெரிவித்த பி.சி.சி.ஐ., துணைத்தலைவர் சுக்லா, நாங்கள் இன்னும் அதிர்ச்சியில் உள்ளோம். ஒரு சில வீர்கள் இந்தியன் பிரிமியர் லீக் பெயரை கெடுத்தாலும் அது எந்தவிதத்திலும் கிரிக்கெட்டை பாதிக்காது. ஊழலை ஒழிக்க தேவையான நடவடிக்கைகளை பி.சி.சி.ஐ., எடுத்துள்ளது. ஐ.சி.சி., ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள், பிக்சிங் குறித்து அணி நிர்வாகத்திடம் விளக்கியுள்ளது. ஊழல் எதிர்ப்பு பிரிவு என்பது போலீஸ் அல்ல. அதனால், புக்கிகள் மற்றும் வீரர்களை கைது செய்ய முடியாது. ஸ்பாட் பிக்சிங் விவகாரத்தில் தவறு செய்த வீரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்தியன் பிரிமியர் லீக்கி ன் பெயரை நிலைநாட்ட பி.சி.சி.ஐ., நடவடிக்கை எடுக்கும். வெளிநாட்டு வீரர்களை தவறு செய்திருந்தால் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.