பொது செய்தி

தமிழ்நாடு

பச்சைநாயகி அம்மன் தேருக்கு தேர் கொட்டகை

Added : மே 18, 2013
Share
Advertisement
ரூ. 6 லட்சத்தில், பேரூர் பச்சைநாயகி அம்மனுக்கு புதிதாக தேர்கொட்டகை அமைக்கும் பணிகள் நேற்று துவங்கியது. பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திர திருவிழாவின் போது, பட்டீஸ்வரர், பச்சைநாயகி அம்மன் தேரில் அமர்ந்து வந்து பேரூரின் முக்கிய வீதிகளின் வழியே வலம் வந்து, பக்தர்களுக்கு அருள் பாலிப்பது வழக்கம். இதில், பேரூர் பச்சைநாயகி அம்மன் தேர்

ரூ. 6 லட்சத்தில், பேரூர் பச்சைநாயகி அம்மனுக்கு புதிதாக தேர்கொட்டகை அமைக்கும் பணிகள் நேற்று துவங்கியது.
பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திர திருவிழாவின் போது, பட்டீஸ்வரர், பச்சைநாயகி அம்மன் தேரில் அமர்ந்து வந்து பேரூரின் முக்கிய வீதிகளின் வழியே வலம் வந்து, பக்தர்களுக்கு அருள் பாலிப்பது வழக்கம். இதில், பேரூர் பச்சைநாயகி அம்மன் தேர் சிதிலமடைந்துபோனதால், கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக, அம்மன் தேர் இழுக்கப்படவில்லை.


இந்நிலையில், அம்மன் தேருக்கு ரூ. 6 லட்சம் மதிப்பீட்டில், புதிய தேர் கொட்டகை அமைக்க சிவனடியார் திருக்கூட்டம் சார்பில் முடிவுவாகியுள்ளது. இதையடுத்து, அம்மன் தேருக்கு புதிய தேர் கொட்டகை அமைக்கும் பணிகள் துவங்கின. தேர் நிறுத்தப்பட்டுள்ள நான்கு மூலைகளிலும், குழிதோண்டப்பட்டு, இரும்பு ஆங்கிள் பொருத்தப்படுகிறது. மழை, வெயிலால் பாதிக்கப்படாமலிருக்க, மேல்புறத்தில் தகர ஷீட்டுகள் பொருத்தப்படுகிறது. ஓரிரு வாரங்களில், இப்பணிகள் நிறைவடையும் என, கோவில் திருப்பணி ஊழியர்கள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X