பதிவு செய்த நாள் :
கருத்துகள் (9)  கருத்தை பதிவு செய்ய
எழுத்தின் அளவு:

ஈரோடு மாவட்டம், பெருந்துறையை அடுத்த, கொடுமணலில் நடத்தப்பட்ட அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட நகரம், 2,500 ஆண்டுகள் பழமையானது என்றும், அது வணிக நகரமாக செயல்பட்டது என்றும் தெரியவந்துள்ளது.
ஈரோடு மாவட்டம், பெருந்துறை தாலூகா, சென்னிமலைக்கு மேற்கே, 15 கி.மீ., தொலைவில், நொய்யல் ஆற்றின் வடகரையில், "கொடுமணம்' என்ற வரலாற்று சிறப்புமிக்க ஊர் உள்ளது. சங்க காலத்தில் அரிய கற்களால் ஆன, அணிகலங்களை உற்பத்தி செய்யும் தொழிற்கூடமாக, கொடுமணம் விளங்கியது. சங்க இலக்கியமான பதிற்றுப்பத்தில், "கொடுமணம் பட்ட... நன்கலம்' என, கபிலரும், கொடுமணம் பட்ட வினைமான்' என, அரிசில் கிழாரும் பாடியுள்ளனர்.
இவ்வூர் சேரரின் தலைநகரமாக விளங்கிய கரூரையும், மேலை கடற்கரை துறைமுகமான முசிறிபட்டினத்தையும் இணைக்கும் பெருவழியில் அமைந்து இருந்தது. 50 ஏக்கர் பரப்பில் ஒன்பது அகழாய்வு குழிகளும், 100 ஏக்கர் பரப்பிலான ஈமக்காட்டில், ஒரு ஈமச் சின்னமும் அகழாய்வு செய்யப்பட்டன.புதுச்சேரி பல்கலைக்கழக வரலாற்றுத் துறை தலைவர், ராஜன் தலைமையில், செல்வகுமார், ரமேஷ், பாலமுருகன், பால்துரை, யதீஷ்குமார் ஆகியோர் கொண்ட ஆய்வுக்குழு, கடந்த இரண்டு மாதங்களாக, அகழாய்வில் ஈடுபட்டு வருகிறது.கடந்த ஆண்டும், இதே போன்ற அகழாய்வில் ஈடுபட்ட போது, 2,500 ஆண்டுகளுக்கு முந்தைய, மிகப் பெரிய வணிக நகரம் இப்பகுதியில் இருந்தது கண்டறியப்பட்டது. அந்த நகரம் இருந்த கால கட்டத்தை, அமெரிக்காவில் உள்ள, காலக்கணிப்பு ஆய்வுக்கூடம், அங்கு கிடைத்த ஆதாரங்களின் பரிசோதனைக்கு பிறகு, உறுதி செய்தது. இந்த தகவல், அண்மையில் வெளியானது.
தற்போது, நடத்தப்பட்ட அகழாய்வில், இந்த இடம், வடநாட்டவர்கள் உடனான வணிக உறவில், முக்கிய பங்கு அளித்திருக்கும் என, தெரிய வந்து உள்ளது.இந்த இடம் நகை தயாரிப்பு மையமாக இருந்திருக்கலாம் என, ஆராய்ச்சியில் தெரிய வந்து உள்ளது. கொடுமணலில் உருவாக்கப்பட்ட நகைகளை பெறுவதற்காக, இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வணிகர்கள் வந்துள்ளனர்.
உத்தர பிரதேச மாநிலத்தின்,

மத்திய கங்கை சமவெளிப் பகுதியில் இருந்து, வணிகர்களும், கைவினைஞர்களும், இங்கு வந்து சென்றதை, தமிழ் மயப்படுத்தப்பட்ட பிராகிருத மொழி ஆட்பெயர்களும், வணிகர் பெயர்களும் உறுதிப்படுத்துகின்றன.இது குறித்து, பேராசிரியர் ராஜன் கூறியதாவது:
இந்த அகழாய்வில் கிடைத்த பண்பாட்டு எச்சங்கள், இவ்வூர், 2,500 ஆண்டுகளுக்கு முற்பட்ட மக்களின் வாழ்க்கை முறையை பற்றி எடுத்துரைக்கிறது. இதுவரை மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகள் மூலம், இங்கு விலை உயர்ந்த கற்களை கொண்டு உருவாக்கப்பட்ட கல்மணிகள் செய்யும் தொழிற்கூடமும், செம்பு, இரும்பு மற்றும் உருக்கு உருக்கப்பட்டதற்கான தொழிற் கூடங்களும் கண்டறியப்பட்டுள்ளன.போன்ற அரிய கற்களை கொண்டு உருவாக்கப்பட்ட தொழிற் கூடம், அதன் பல்வேறு படிநிலைகளில் கண்டெடுக்கப்பட்டுள்ளதே, இந்த ஆண்டு நடந்த அகழாய்வின் சிறப்பம்சம்.இத்தொழிற் கூடங்கள், 500 ஆண்டுகள் இங்கு நின்று நிலைத்துள்ளன. கொடுமணலில் உருவாக்கப்பட்ட அணிகலன்களை பெறுவதற்காக, இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து, வணிகர்கள் வந்துள்ளனர்.மேலும், கங்கை சமவெளி பகுதி பண்பாட்டுக்கே உரித்தான வடக்கத்திய கறுப்பு நிற மட்பாண்டங்கள் இங்கு கிடைத்துள்ளன. இவை கங்கைச் சமவெளிப் பகுதியில், கி.மு., 6ம் நூற்றாண்டுக்கும், கி.மு., 2ம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட பகுதியில் கிடைக்கின்றன. கொடுமணலில் கிடைத்த இந்த மட்பாண்டம், கி.மு., 3ம் நூற்றாண்டின் முற்பகுதியைச் சார்ந்தது.அதிந்தை, மாகந்தை, குவிரன், சுமனன் சம்பன், சந்தை வேளி, பன்னன், பாகன், ஆதன் என்ற பெயர் பொறித்த மட்பாண்டங்கள் தமிழர்கள், 2,500 ஆண்டுகளுக்கு முன், எழுத்தறிவு பெற்று, மிகச் சிறந்த சமூகமாக விளங்கியிருக்க வேண்டும் என்பதை உறுதிபடுத்துகின்றன. இவ்வாறு, அவர் கூறினார்.
பாரம்பரிய சின்னமாக அறிவிக்க வேண்டும்!
இந்த கண்டுபிடிப்பு குறித்து, தொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் கூறியதாவது:

Advertisement

தற்போது, கொடுமணலில் கண்டறியப்பட்ட, தாமிர தொழிற்கூடம், தமிழக வரலாற்றில், மிகவும் முக்கிமானது.
அங்கு காணப்படும், பல்வேறு விதமான அணிகலன்கள், அதை உறுதி செய்கின்றன. தமிழகத்தில் நடந்த, அகழாய்வுகளில், கொடுமணல் அகழாய்வு, வரலாற்றுச் சிறப்பு மிக்க பெருமை வாய்ந்தது.எனவே, தமிழக அரசு, கொடுமணல் தொல்லியல் களத்தை, பாரம்பரிய சின்னமாக அறிவிக்க வேண்டும். அந்த நிலத்தை கையகப்படுத்தி, பாதுகாக்கப்படும் இடமாக அறிவிக்க வேண்டும். அங்கு எவராலும், சேதம் விளைவிக்காத வண்ணம், கட்டடத்தை எழுப்ப வேண்டும். அதற்கு போதுமான ஏற்பாடுகள் செய்து தர வேண்டும். தமிழர்களின் பாரம்பரிய வரலாற்றைவிளக்கும், இந்த இடத்திற்கு, ஆண்டுதோறும் நிதி ஒதுக்கி, பாதுகாக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


நடைமுறை சிக்கல்கள் உள்ளன!

வரலாற்றுச் சிறப்புமிக்க, கொடுமணல் அகழாய்வு களத்தை, பாதுகாக்கப்பட்ட சின்னமாக அறிவிக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ள சூழ்நிலையில், அந்த நிலத்தை கையகப்படுத்துவதற்கு தொல்லியில் துறை தயாராக இல்லை என, தெரிகிறது.இது குறித்து, பெயர் வெளியிட விரும்பாத தொல்லியல்துறை அதிகாரி, கூறியதாவது:
தனிப்பட்ட குழுக்களோ, அரசு சார்ந்த நிறுவனங்களோ அகழாய்வு செய்யும் போது, அதில் கிடைக்கும் அரிய பொருட்களை மட்டுமே, கையகப்படுத்தப்படும். அப்பொருள், எங்கு கண்டுபிடிக்கப்பட்டதோ, அந்த இடத்திற்கு அருகில் உள்ள, அருங்காட்சியகத்தில் வைக்கப்படும். மற்றபடி, தவிர்க்கவே முடியாத வகையில், பெரும் கட்டமைப்புடன் காணப்படும் இடங்களை மட்டுமே, கையகப்படுத்துவோம். கையகப்படுத்தும் நிலத்தின் உரிமையாளருக்கு, முறையான இழப்பீடு வழங்கப்படும். தற்போது, கொடுமணலில் கிடைத்துள்ள அரிய பொருட்களை, அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைப்போம். மற்றபடி, நிலத்தை கையகப்படுத்த முடியாது. அதற்கு பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. இவ்வாறு அவர் கூறினார். - நமது நிருபர் -
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (9)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
23-மே-201303:26:38 IST Report Abuse
மதுரை விருமாண்டி அப்பவும், வணிக வளாகம் கட்டுவதில் முறைகேடு நடந்துள்ளது தெரிய வந்துள்ளது.. அனுமதி பெறாமல் கட்டப்பட்டது தான் அந்த கடைசி கட்டம்.. ஆட்சியாளகள் அன்றைக்கு வைத்த சீல், இன்றைக்குத் தான் திறக்கப்பட்டது..
Rate this:
Share this comment
Cancel
bathassarady krichena - paris,பிரான்ஸ்
22-மே-201300:04:01 IST Report Abuse
bathassarady krichena இன்னூம் நிறைய போட்டோ போட்டு இருக்கலாம் நல்ல கண்டுபிடிப்பு
Rate this:
Share this comment
Cancel
c Siva - Raleigh,யூ.எஸ்.ஏ
21-மே-201319:39:49 IST Report Abuse
c Siva அந்த கார்னர்ல என்ன பான்பராகா?
Rate this:
Share this comment
Cancel
Narayan - Zurich,சுவிட்சர்லாந்து
21-மே-201314:49:39 IST Report Abuse
Narayan அய்யயோ.... நான் சொன்னது தவறாக கொள்ள வேண்டாம். நான் சொன்னது குறிப்பாக மண்டல ரீதியாக மட்டுமே. ஜாதிய ரீதியாக கண்டிப்பாக இல்லை.
Rate this:
Share this comment
Cancel
Narayan - Zurich,சுவிட்சர்லாந்து
21-மே-201314:46:06 IST Report Abuse
Narayan என்ன ஒரு கண்டுபிடுப்பு. வணிகம் வர்த்தகம் வியாபாரம் இன்னமும் கொங்கு மண்ணில் கொங்கு ரத்தத்திலேயே உள்ளது. ஜெனெடிக் கண்டினுட்டி(Genetic Continuity) இன்னமும் தொடர்கிறது
Rate this:
Share this comment
Cancel
villupuram jeevithan - villupuram,இந்தியா
21-மே-201314:13:35 IST Report Abuse
villupuram jeevithan அரசால் முடியவில்லை என்றால் கட்சிகளிடம் விட்டு விடுங்கள். மாமல்லபுரம் கோயில் மீது ஏறி கட்சிக் கொடியை நாட்டியவாறு, இந்நிலத்தையும் அவர்களால் கை பற்றமுடியும்? முடியாதது ஒன்றுமில்லை, அவர்களுக்கு?
Rate this:
Share this comment
Cancel
amukkusaamy - chennai,இந்தியா
21-மே-201313:31:53 IST Report Abuse
amukkusaamy "இது குறித்து, பெயர் வெளியிட விரும்பாத தொல்லியல்துறை அதிகாரி, கூறியதாவது: தனிப்பட்ட குழுக்களோ, அரசு சார்ந்த நிறுவனங்களோ அகழாய்வு செய்யும் போது, அதில் கிடைக்கும் அரிய பொருட்களை மட்டுமே, கையகப்படுத்தப்படும்." போங்கடா வெத்து வேட்டுங்களா.
Rate this:
Share this comment
Cancel
amukkusaamy - chennai,இந்தியா
21-மே-201313:29:58 IST Report Abuse
amukkusaamy நமது பாரம்பரியத்தை காக்க உங்களுக்கு இடைஞ்சல்கள் வரும். உங்களால் எதுவும் செய்ய முடியாது. மகாபலிபுரத்தையும் கோவிலையும் கூட உங்களால் காப்பாற்ற முடியவில்லை. ஆனால் அங்கு கண்டெடுக்கப்படும் பொருட்களை மட்டும் நீங்கள் எடுத்துக்கொள்வீர்கள். நல்ல நியாயம்.
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
21-மே-201307:52:14 IST Report Abuse
Srinivasan Kannaiya 2500 ஆண்டுகளுக்கு முன்பு தலை நிமிர்ந்து சிறந்து விளங்கிய நாம் சமுதாய சீர் கேடு,ஒழுக்கமின்மை..லஞ்சலாவன்யத்தில் ஈடுபாட்டால்..அரசியல்வாதிகளால்..தலைகுனிந்து நடக்கிறோம்..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X