பொது செய்தி

தமிழ்நாடு

மானம்பாடி கோவில் விவகாரம் ; 1200 இணைய இளைஞர்கள் கலெக்டருக்கு மின்னஞ்சல்

Updated : மே 22, 2013 | Added : மே 22, 2013
Share
Advertisement
"மானம்பாடி, நாகநாதசுவாமி கோவிலை, இடிக்க கூடாது' என, இணையம் வழியாக, 1,200க்கும் மேற்பட்ட இளைஞர்கள், தஞ்சாவூர் கலெக்டருக்கு, மனு அளித்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி - தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில், திருப்பனந்தாளை அடுத்த மானம்பாடி எனும் கிராமத்தில், ஏறத்தாழ, 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த, நாகநாதசுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில், ராஜேந்திர சோழன் ஆட்சிக்

"மானம்பாடி, நாகநாதசுவாமி கோவிலை, இடிக்க கூடாது' என, இணையம் வழியாக, 1,200க்கும் மேற்பட்ட இளைஞர்கள், தஞ்சாவூர் கலெக்டருக்கு, மனு அளித்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி - தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில், திருப்பனந்தாளை அடுத்த மானம்பாடி எனும் கிராமத்தில், ஏறத்தாழ, 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த, நாகநாதசுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில், ராஜேந்திர சோழன் ஆட்சிக் காலத்தில் (கி.பி., 1012-1044) திருப்பணி செய்ததாக, தொல்லியல் துறை ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.பழமை வாய்ந்த இக்கோவில், இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பல ஆண்டுகள் சீரமைப்புப் பணிகள் நடக்காததால், தற்போது, சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ள, இந்து சமய அறநிலையத் துறையும், அப்பகுதி பொதுமக்களும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்நிலையில், விக்கிரவாண்டி - தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையை, 20 மீட்டர் அகலப்படுத்துவதற்கான, விரிவாக்க பணிகள் துவக்க இருப்பதால், கோவில் சிதையும் அபாயத்தில் இருப்பதாக, அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கோவில் இடிபடாத வண்ணம், மாற்றுத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில், இணைய தளம் வழியாக, 1,200க்கும் மேற்பட்ட இளைஞர்கள், தஞ்சை கலெக்டருக்கு மின்னஞ்சல் அனுப்பி உள்ளனர். இது குறித்து, மின்னஞ்சல் அனுப்பியவர்களில் ஒருவரான சசிதரன் கூறியதாவது: http://change.org என்ற இணைய தளம், உலகத்தில் நடக்கும் பிரச்னைகளுக்கு, எதிர்ப்பு தெரிவிப்பதற்காக அமைக்கப்பட்டது. இதில், மானம்பாடி நாகநாதசுவாமி கோவில் இடிக்கப்படுவது குறித்து, பதிவாகி உள்ளது. இதில், பதிவு செய்யப்படும் புகார்கள், தஞ்சை கலெக்டருக்கு நேரடியாக செல்லும், வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கோவிலை இடிக்க கூடாது என, 1,200க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மின்னஞ்சல் அனுப்பி உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X