சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பாக்., மதபோதகருக்கு இந்தியர் இதயம் தானம் ; சென்னையில் நடந்தது அறுவை சிகிச்சை

Added : மே 24, 2013
Advertisement
பாக்., மதபோதகருக்கு இந்தியர் இதயம் தானம் ; சென்னையில் நடந்தது  அறுவை சிகிச்சை

சென்னை: இதய நோயால் உயிருக்கு போராடிய, பாகிஸ்தானைச் சேர்ந்த மதபோதகருக்கு, சென்னை, மலர் மருத்துவமனை மருத்துவர்கள், இதய மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்துள்ளனர். பாகிஸ்தானில் உள்ள கரியான் பகுதியைச் சேர்ந்தவர் மவுலானா முகமது ஜுபேர் ஆஸ்மி, 41. மதபோதகரான இவருக்கு, சில மாதங்களுக்கு முன் கடுமையான மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. அதோடு, உடல் வீக்கமும், சிறுநீர் வெளியேறுவதில் சிரமமும் இருந்துள்ளது. லாகூரில் உள்ள பிரபல மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு, இதய மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டி இருந்ததால், மேல்சிகிச்சைக்காக, சென்னை, அடையாரில் உள்ள, மலர் மருத்துவமனையில், கடந்த மார்ச், 10ம் தேதி, அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு, கடந்த ஏப்ரல் இறுதியில், இதய மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.இதுகுறித்து, மலர் மருத்துவமனை, இதயநோய் தீவிர சிகிச்சைப் பிரிவு தலைவர் சுரேஷ் ராவ் கூறியதாவது: ஜுபேர் ஆஸ்மி, "டைலேட்டட் கார்டியோமயோபதி' எனும் இதய நோய்க்கு ஆளானதால், அவரது இதயத்தின் இரண்டு தமனிகளும் மிக கடுமையாக பாதிக்கப்பட்டு, அதன் ரத்தம் வெளியேற்றும் திறன், வழக்கமான, 60 சதவீதத்திற்கு பதில், 15 சதவீதமாக குறைந்திருந்தது. இதனால், அவரின் சிறுநீரகமும் செயலிழந்து, ஒரு நாளைக்கு, 150 மி.லிக்கும் குறைவாகவே சிறுநீர் கழித்து வந்தார். கூடவே, மஞ்சள் காமாலை பாதிப்பும் இருந்தது. உடனே அவருக்கு, இதய மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலையில், மூளைச்சாவு அடைந்த, 37 வயது வாலிபரின் இதயம் தானமாக கிடைத்தது. ஆனால், இதயம் தானமாக தந்தவரின் ரத்த வகையில் இருந்து (ஓ பாசிட்டிவ்), ஜுபேர் ஆஸ்மியின் ரத்த வகை( ஏபி பாசிட்டிவ்) மாறுப்பட்டிருந்ததால், மாற்று இதயத்தை அவரது உடல் ஏற்றுக் கொள்ளுமா என்ற சந்தேகம் இருந்தது. "டிஷ்யூ மேப்பிங்' பரிசோதனையில் வந்த நேர்முறையான முடிவு, எங்கள் சந்தேகத்தை தீர்த்தது. இதய கோளாறுடன், சிறுநீரக செயலிழப்பு, மஞ்சள் காமாலை பாதிப்பு என, உயிருக்கு போராடிய ஜுபேர் ஆஸ்மி, சிக்கலான அறுவை சிகிச்சைக்கு பின், உடல்நலம் தேறிவருகிறார். சில நாட்களில், அவர் தாயகம் திரும்ப உள்ளார். இவ்வாறு சுரேஷ் ராவ் கூறினார்.ஜுபேர் ஆஸ்மியின் உறவினர், ஜமீல் ரகுமான் ஆஸ்மி கூறுகையில், ""ஒரு இந்தியர் தானமாக கொடுத்த இதயத்தால், ஜுபேர் ஆஸ்மி மறுபிறவி பெற்றுள்ளார் என்பதை எண்ணும்போது, பெருமையாக உள்ளது. இதற்கு காரணமான மருத்துவர்களுக்கு நன்றி,'' என்றார்.மலர் மருத்துவமனை, இதய சிகிச்சைப் பிரிவு இயக்குனர் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X