பதிவு செய்த நாள் :
கருத்துகள் (89)  கருத்தை பதிவு செய்ய
எழுத்தின் அளவு:

சென்னை: தமிழகத்தில், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் படிக்கும், மாணவ, மாணவியர், வரும் கல்வியாண்டில், ஆங்கிலத்தில் தான் தேர்வு எழுத வேண்டும் என்ற அரசு உத்தரவை, வாபஸ் பெறும்படி, உயர் அதிகாரிகளுக்கு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். அத்துடன் மாணவர்கள், தங்களுடைய உள் தேர்வுகளை, அவரவர் விருப்பப்படி, தமிழ் அல்லது ஆங்கிலத்தில் எழுதலாம் என்றும் முதல்வர் அறிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், தமிழ் மற்றும் ஆங்கில மொழி வழிக் கல்வி உள்ளது. இங்கு படிக்கும் மாணவ, மாணவியர், தங்கள் விருப்பப்படி தேர்வுகளை, தமிழ் அல்லது ஆங்கிலத்தில் எழுதி வந்தனர். தமிழில் தேர்வு எழுத அனுமதித்ததன் மூலம், கிராமப்புற மாணவர்கள், அதிகம் பயன்பெற்றனர்.
ஆங்கிலம் கட்டாயம்
இச்சூழலில், "வரும் கல்வியாண்டிலிருந்து, மாணவ, மாணவியர், "அசைன்மென்ட்' மற்றும் தேர்வுகளை, ஆங்கிலத்தில் எழுத வேண்டும்' என, சமீபத்தில் தமிழக அரசு உத்தரவிட்டது. மாணவ, மாணவியர், ஆங்கில மொழி தொடர்பு திறனை வளர்த்துக் கொள்வதன் மூலம், அதிக வேலைவாய்ப்புகளைப் பெற முடியும். மாணவ, மாணவியர் தன்னம்பிக்கை அதிகரிக்கும் என, தேர்வு முறை ஆங்கிலத்திற்கு மாற்றப்பட்டதற்கு காரணம் கூறப்பட்டது.இதுதவிர, ஆசிரியர்களும், பாடங்களை, ஆங்கிலத்தில் தான் நடத்த வேண்டும் என, உத்தரவிடப்பட்டது. இந்த உத்தரவிற்கு, மாணவ, மாணவியரிடையே எதிர்ப்பு கிளம்பியது. இதுவரை தமிழில் தேர்வு எழுதி வந்த மாணவர்கள், ஆங்கிலத்தில் தேர்வு எழுத சிரமப்படும் சூழல் ஏற்பட்டது. இது குறித்து, "தினமலர்' நாளிதழில், 26ம் தேதி, விரிவாக

செய்தி வெளியிடப்பட்டது.ஆங்கிலத்தில் தான் தேர்வு எழுத வேண்டும் என்ற அரசு உத்தரவிற்கு, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் எதிர்ப்புதெரிவித்தனர்.
ஆலோசனை
அதைத் தொடர்ந்து, தமிழக முதல்வர் ஜெயலலிதா, நேற்று தலைமைச் செயலகத்தில், உயர் கல்வித் துறை அமைச்சர், தலைமைச் செயலர், உயர் கல்வித் துறை செயலர் ஆகியோரை அழைத்து பேசினார். அதன்பின், மாணவர்கள் விரும்பும் மொழியில், தேர்வு எழுத அனுமதிக்க முடிவு செய்தார்.
இது குறித்து முதல்வர் விடுத்துள்ள அறிக்கை:
தமிழகத்தில், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் படிக்கும், மாணவ, மாணவியர், தங்களுக்கான உள் தேர்வுகளை, ஆங்கில மொழியில் எழுத வேண்டும் என, தமிழக அரசு உத்தரவிட்டதாக, பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன. இது குறித்து, உயர் கல்வித்துறை அமைச்சர், தலைமைச் செயலர், உயர் கல்வித்துறை செயலர் ஆகியோருடன் விரிவாக விவாதித்தேன்.
விவாதத்தின் போது, ஆங்கில மொழித்திறனை வளர்த்துக் கொள்ள, தங்களது உள் தேர்வுகளை, ஆங்கிலத்தில் எழுத வேண்டும் என, தமிழ்நாடு மாநில, உயர்கல்வி மன்றம் உத்தரவிட்டிருப்பதாகவும், தமிழ் வழியில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு, இது பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்த உத்தரவு, என்கவனத்திற்கு கொண்டு வரப்படாமல், தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றத்தால் வெளியிடப்பட்டுள்ளது.ஆங்கில மொழி வழி அல்லது தமிழ் மொழி வழியில் படித்தாலும், மாணவ, மாணவியர், தமிழில் உள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட வேண்டும்

Advertisement

என்பது தான் என் எண்ணம். எனவே, ஆங்கில மொழி வழியில் படிக்கும் மாணவ, மாணவியரும், தங்களுடைய உள் தேர்வுகளை, தமிழ் மொழியில் எழுத அனுமதிக்க வேண்டும் என, அரசு உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

இதன் அடிப்படையில், தற்போது தமிழ்நாடு உயர்கல்வி மன்றத்தால், வெளியிடப்பட்டுள்ள உத்தரவை, திரும்பப் பெற ஆணையிட்டுள்ளேன். அனைத்து மாணவ, மாணவியரும், தங்களுடைய, உள் தேர்வுகளை, அவரவர் விருப்பப்படி, தமிழிலோ அல்லது ஆங்கிலத்திலோ எழுதலாம்.இவ்வாறு, முதல்வர் தெரிவித்துள்ளார்.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (89)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mohan Ramachandran - Itanagar,இந்தியா
29-மே-201315:26:08 IST Report Abuse
Mohan Ramachandran தமிழில் படிப்பது எழுதவது என்பது மிக குறைவாக உள்ளது .இந்த கருத்தை பரிமாறிக்கொள்ள ஆங்கில எழுத்துக்கள் மூலமாகதான் பதிவு செய்ய முடிகிறது .தமிழ் படிப்பு தமிழ் நாட்டில் என்பதை கட்டாயமாக இருக்க வேண்டும் .ஆங்கிலத்தின் மூலமாக தமிழ் எழுதுவது என்பது நமக்கு உடன்பாடில்லை எனினும் தமிழ் பேச தெரிந்து எழுத முடியதவர்களுக்கு இது ஒரு வர பிரசாதம் ,ஆங்கிலம் நமக்கு ஒரு கேடயம் .தமிழ் நாட்டில் ஒரு சில மேதாவிகள் ஹிந்திக்கு வக்காலத்து வாங்கும் இவர்கள் நமது தாய் மொழிக்கு எதிராக இவர்களின் கூச்சல் வங்காள விரிகுடாவின் அலையின் ஓசையை விட அதிகமாகும் .ஹிந்தி படித்தால் வேலை வாய்ப்பு பெருகும் தேசிய ஒருமை பாடும் எருமை பாடும் வளம் பெரும் ,என்று வாதத்தை வைக்கும் இவர்கள் வட நாட்டிலிருந்து இங்கு பிழைப்பை தேடும் வந்த வருகின்ற அனைவரும் தமிழ் படித்துதான் வந்தார்களா ? இல்லையே அப்படி ஹிந்தி படித்தால் வேலை வாய்ப்பு பெருகும் என்பது இவர்கள் வைக்கும் வாதம் தவிடு பொடியாக போகவில்லையா ?அப்படி இருந்தால் வட மாநிலத்து மக்கள் தென்னகத்தை நோக்கி அதுவும் தமிழ் நாட்டை நோக்கி படை எடுக்க வேண்டிய அவசியம் என்ன ?.கல்வி, மருத்துவம்,கம்ப்யூட்டர் ஐ டி மற்றும் கட்டுமான தொழில்களில் நாம் முன்னேற்றம் அடைந்து இருக்கிறோம் ஹிந்தி படிப்பு இல்லாமல் .இந்த மேதாவிகள் தங்கள் பள்ளி கூடம் மூலம் ஹிந்தி சான்ஸ்கிரிட் தமிழ் ஆங்கிலம் என்று நான்கு வகையான மொழிகளை குழந்தைகளுக்கு திணித்து அவர்களுக்கு மொழிகள் மீது ஒரு வெறுப்பை ஏற்படுத்தி தாய் மொழி மீது ஒரு சுணக்கத்தை உண்டு பண்ணியதுதான் இவர்களது உதவியாக இருந்து வருகிறது.எவ்வளவு மொழி படித்தாலும் நல்லதுதான் அனால் அது ஒருவரின் விருப்பதை பொருத்தது .எந்த மொழியும் மற்ற மொழிகளின் ஆதிக்கம் செலுத்தல் ஆகாது.தமிழ் வழி கல்வி நல்லது மிக நல்லது அதே நேரத்தில் ஆங்கிலத்தை நாம் துணைக்கு வைத்து கொள்வது நமக்கு நன்மை பயக்கும். .
Rate this:
Share this comment
Cancel
Amanullah - Riyadh,சவுதி அரேபியா
29-மே-201314:50:24 IST Report Abuse
Amanullah ஏதோ தப்பித் தவறி ஒரு நல்ல காரியம் நடக்க இருந்தது, அதை எங்கே அடுத்த தலைமுறை நல்வழிப் பெற்றுவிடுமோ என்று பயந்து எல்லா அரசியல் வியாதிகளும் விட்ட அறிக்கையில் முதல்வரும் பயந்து இப்போது தேர்வுகளைத் தமிழிலும் எழுதலாம் என்று ஜகா வாங்கிவிட்டார்.ஹ்ம்... அடுத்த தலைமுறையும் வேலைவாய்ப்புக்காக தமிழ் நாட்டையே சுற்றி சுற்றி வரப்போகிறது. வெளி மாநிலமோ அல்லது வெளிநாடோ நம் பருப்பு (எல்லாவற்றுக்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் இந்தமாதிரி அரசியல் வியாதிகள் உள்ளவரை) வேகாது. ஒரு உதாரணம்: மேலே சந்துரு என்ற ஒரு நண்பர் தெரிவித்திருக்கும் (ஆங்கிலம்/ தமிழ்) கருத்தைப் படித்துப் பார்க்கவும்.
Rate this:
Share this comment
Cancel
RAJA - chennai,இந்தியா
29-மே-201314:43:20 IST Report Abuse
RAJA நல்ல வேளை. எனக்கு தெரியாமதான் தமிழ்நாட்டுல மின்தட்டுப்பாடு உள்ளது என்று சொல்லாமல் விட்டார்களே அது வரைக்கும் சந்தோசம்
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
29-மே-201314:30:24 IST Report Abuse
தமிழ்வேல் எனது குடும்பத்தில் நடக்கும் ஒரு சிறிய உதாரணம்... இரு சகோதரர்களின் மகன்களில் ஒருவர் தமிழ் பேசுவார். ஆனால் எழுதவோ படிக்கவோ தெரியாது. ஆனால் நல்ல வேலையில் நல்ல சம்பளத்தில் உள்ளார். இன்னொருவர், உள்நாட்டு வெளிநாட்டு இயந்திரங்களை வாங்கி விற்று வாழ்கின்றார். அவருக்கு தமிழ் மட்டும்தான் தெரியும். ஆங்கிலம் கொஞ்சம் தவறுடன் பேசுவார். ஆயினும் எழுத தெரியாது... இருவர் படும் பாடுகளும் அதிகம்.
Rate this:
Share this comment
Cancel
Rockes Porte - pudukai,இந்தியா
29-மே-201314:30:17 IST Report Abuse
Rockes Porte சபாஷ்...ஜே...ஏன்னா சில பேரு ஆங்கிலத்திலே படிச்சாதான் வெளிநாட்டு போகலாம் மற்ற ஆணிகளை புடுங்கலாம் என சொல்கிறார்கள். என் அனுபவத்தில் இன்றைக்கும் நான் தமிழிலே யோசித்துவிட்டு சற்று நேரத்தில் ஆங்கிலத்துக்கு மொழிபெயர்ப்பு செய்தே ஈமெயில் செய்கிறேன். இன்று பல விதமான நாட்டு மக்களுடன் பணியும் செய்கிறேன். பட்டப்படிப்பு வரை நான் தமிழிலே தெளிவாக படித்தேன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன். ஆக தமிழில் புரிந்து தேர்வு எழுதும் பழக்கும் சிறந்ததே. ஆங்கிலம் என்ற மனப்பாடம் வேண்டவே வேண்டாம்.
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
29-மே-201314:24:18 IST Report Abuse
தமிழ்வேல் அம்மாவுக்கு வாழ்த்து கூறி எழுதினவங்களை எல்லாம் காணோமே ?
Rate this:
Share this comment
Cancel
Krish - India,சிங்கப்பூர்
29-மே-201314:13:36 IST Report Abuse
Krish ஸ்டாலின் என்பது ஆங்கில பெயர், தமிழ் பெயர் அல்ல.. நன்றி நன்றி நன்றி
Rate this:
Share this comment
Cancel
Snake Babu - Salem,இந்தியா
29-மே-201313:48:29 IST Report Abuse
Snake Babu தமிழ் வழியில் படிப்பதால் எந்த குறையும் இல்லை, அதுவும் இல்லாமல் மேற்கூறிய செய்தி எழுதுவதை பற்றித்தான் படிப்பதை பற்றி அல்ல. எல்லோருக்கும் தாய் மொழி அவர்களது உயிர்மொழி. இதன் மூலம் கிடைக்கும் அறிவு சிறந்தது.மற்ற மொழிகள் வியாபார மொழிகள்,அந்தந்த இடத்திற்கு தேவைப்படும் போது அவைகளை தெரிந்து கொள்ளலாம். நண்பர் ஒருவர் கூறியதை போன்று ஸ்போகன் இங்கிலீஷ், communication development ஐ ஒரு பாடமாக வைத்து கொள்ளலாம். ஹிந்தியை அதேபோல் வைத்து கொள்ளலாம். இதற்காக தமிழில் படித்தால் வேலை கிடைக்காது என்று கூற கூடாது. என்ன சிலர் மொழிகளை மட்டுமே வைத்து நல்ல வசதியான இடத்த்தில் வேலையில் இருப்பார்கள், இங்கே சிலரின் கருத்தும் அப்படியே. அது வேற டாபிக். வேலை திறமை என்று பார்க்கும் பொது மொழி ஒரு பிரச்சனை அல்ல, நான் தமிழ் வழியில் படித்தவன் MCA மட்டும் (ஆங்கிலத்தில்) முடித்தவன், நல்ல வேலையிலும் உள்ளேன்.கிராமத்தில் இருந்து வருபவர்களையும் கவனிக்க வேண்டும். மற்ற மொழிகள் (ஆங்கிலம், இந்தி,...) எல்லாம் அறிமுகத்திற்கும், தொடர்ப்புக்கும் மட்டுமே. திறமை தாய்மொழியால் மட்டுமே அடைய முடியும். அது ஆடு மெய்ப்பதாக இருந்தாலும் சரி, பெரிய கட்டுமான (engineers ) வேலைக்கும் சரி. இதனோடு 10% மற்ற மொழி தேவை அவ்வளவுதான்.
Rate this:
Share this comment
Cancel
Nallavan - ERODE,இந்தியா
29-மே-201313:13:55 IST Report Abuse
Nallavan முட்டாள் தனமான முடிவு. ஆங்கிலம் கட்டாயம் ஆக்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Van - Leeds,யுனைடெட் கிங்டம்
29-மே-201313:00:12 IST Report Abuse
Van படிப்பு நமக்கு தெளிவை கற்பிக்க வேண்டும். மாறாக மனப்பாடம் செய்ய கற்று தர கூடாது. தாய் மொழி கல்வி நமக்கு தெளிவை தர இயலும். மேலும் IT கம்பெனிகலில் பயன் படுத்தும் அங்கிலம் நல்ல தரம் வாய்ந்தது அன்று. (நான் பார்த்த வரையில்) மேலும் இன்று கான்வென்ட் தவிர மற்ற மெட்ரிக் பள்ளிகளில் பயன் படுத்தும் ஆங்கிலமும் நல்ல தரம் வாய்ந்தது அன்று. மேலும் பொறியியல் கல்லூரிகளில் ஆசிரியர்கள் பேசும் ஆங்கிலம் மோசமாக உள்ளது. அகவே தரம் இல்லாத ஆங்கிலத்தை விட தரமான தமிழ் படிப்பு எவ்வளோ மேல். பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் ஆங்கிலம் ஒரு படமாக இருப்பினும் அதன் தரத்தை உயர்த்துவது மிக்க அவசியம் என்றே தோன்றுகிறது. ஆங்கிலம் பேச தெரிந்தால் தான் மன தைரியம் வரும் என்று பாடம் புகட்டுவது நன்றன்று.
Rate this:
Share this comment

Microsoft OLE DB Provider for SQL Server error '80040e31'

Query timeout expired

/xtralog_load.asp, line 349