வறண்டது மாபெரும் மதுராந்தகம் ஏரி 20 ஆயிரம் ஏக்கர் விவசாயம் பாதிப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வறண்டது மாபெரும் மதுராந்தகம் ஏரி 20 ஆயிரம் ஏக்கர் விவசாயம் பாதிப்பு

Added : மே 29, 2013
Share
மதுராந்தகம் : மாவட்டத்தின் பெரிய ஏரியான மதுராந்தகம் ஏரியில், நீர் மட்டம் படிப்படியாக குறைந்து வருவதால், ஏரியை நம்பி உள்ள, 20 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்களில், விவசாயம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில், பெரிய ஏரி என்ற பெருமைக்குரியது, மதுராந்தகம் ஏரி. மொத்தம், 1,446 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள, இந்த ஏரியின் கரை, 26 அடி உயரம் கொண்டது. உத்தம சோழன்

மதுராந்தகம் : மாவட்டத்தின் பெரிய ஏரியான மதுராந்தகம் ஏரியில், நீர் மட்டம் படிப்படியாக குறைந்து வருவதால், ஏரியை நம்பி உள்ள, 20 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்களில், விவசாயம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில், பெரிய ஏரி என்ற பெருமைக்குரியது, மதுராந்தகம் ஏரி. மொத்தம், 1,446 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள, இந்த ஏரியின் கரை, 26 அடி உயரம் கொண்டது. உத்தம சோழன் என்பவரால், இந்த ஏரி உருவாக்கப்பட்டது. அப்போதிலிருந்து, பருவ மழையின் போது, ஏரி அடிக்கடி உடைவதால், கரைகள் உயர்த்தப்பட்டு, சரி செய்யப்பட்டு வந்தது. ஆங்கிலேயர் காலத்தில் மாவட்ட ஆட்சியராக இருந்த லயோனஸ் துரை, இந்த ஏரியின் கரையை வலிமை வாய்ந்ததாக சீரமைத்தார்.முப்போகம் பாலாற்றில் இருந்து, ஆரணி, செய்யார், உத்திரமேரூர், கிளியாறு வழியாக, மழைநீர் மதுராந்தகம் ஏரியை வந்தடைகிறது. இந்த ஏரியின் மூலம், கருங்குழி, கே.கே.புதூர், முள்ளி, அரைப்பாக்கம், அருங்குணம், தச்‹ர் உள்ளிட்ட, 26 கிராமங்களில் உள்ள, 20 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறுகின்றன.
இந்த ஏரி நீர் மூலம், சுற்றுப் பகுதிகளில் முப்போகம் பயிர் விளைந்து வந்தது. வெள்ளத்தில் அடித்து வரப்படும் வண்டலை தூர் வாரததால், கொள்ளளவு குறைந்து, தற்போது ஒரு போகம் பயிர் செய்யும் அளவிற்கு மட்டுமே நீர் பெற முடிகிறது. இந்நிலையில், தற்போது, மிகப்பெரிய மதுராந்தகம் ஏரி வறண்டு காணப்படுகிறது. இதனால், 20 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்களில், விவசாயம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.ஆக்கிரமிப்புஇதுகுறித்து, தோட்ட நாவல் பகுதியைச் சேர்ந்த பாக்கியநாதன் கூறுகையில்,""விவசாய நிலத்திற்கு செல்லும் ஏரி வரத்து கால்வாய்களை, ரியல் எஸ்டேட் அதிபர்கள் விதிகளை மீறி ஆக்கிரமித்துள்ளனர். இதற்கு, தாலுகா அலுவலக அதிகாரிகளும், நகராட்சி அதிகாரிகளும் உடந்தையாக உள்ளனர். வரத்து கால்வாயிகள் ஆக்கிரமிப்பின் பிடியில் உள்ளதால், விவசாய நிலத்திற்கு ஏரி நீர் வருவதில்லை. இதனால் விவசாயம் பாதிக்கும் அபாயம் உருவாகியுள்ளது. கடந்த, 1968ம் ஆண்டில், இந்த ஏரி கடைசியாக தூர்வாரப்பட்டது. அதன்பின் இந்த ஏரி முறையான பராமரிப்பின்றி உள்ளது குறிப்பிடத்தக்கது,'' என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X