பொது செய்தி

தமிழ்நாடு

தனியார் தொழிற்சாலையால் சுற்றுச்சூழல் பாதிப்பு

Added : மே 29, 2013
Advertisement

காட்டாங்கொளத்தூர் : திம்மாவரத்தில், செயல்படும் தனியார் ரப்பர் தொழிற்சாலையில் இருந்து, வெளியேறும் கரித்துகள்களினால், அப்பகுதியில் வசிப்போர், சுவாச கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளனர். காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்டது திம்மாவரம் ஊராட்சி. இங்கு, ராதாநகர், தேவகி நகர், என்.கே.வி. நகர் ஆகிய பகுதிகள் அமைந்துள்ளன. இதில், 3,000க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். டயர், டியூப் தயாரிப்பு
இந்நிலையில், ராதா நகர், பகுதியில் பாலாற்றங்கரையில், 3 ஏக்கர் பரப்பளவில், 35 ஆண்டுகளாக கனரக வாகனங்களுக்காக, ரப்பர் டயர் தயாரிப்பதற்கான, மூலப்பொருட்களை தயாரிக்கும், தனியார் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இதில், செங்கல்பட்டு, மதுராந்தகம், மறைமலை நகர் போன்ற பல்வேறு பகுதியில் இருந்து, சேகரிக்கப்படும் பழைய டயர் மற்றும் டியூப் போன்றவற்றை உருக்கி, மீண்டும் டயராக உருவாக்கும் வகையில், ரப்பர் சீட்டுகளை தயாரித்து, சென்னை மற்றும் ஸ்ரீபெரும்புதூர் போன்ற பகுதிகளில் உள்ள டயர் தொழிற் சாலைகளுக்கு, அனுப்புகின்றனர். காற்று மண்டலம் மாசுஇந்நிலையில், இந்த தொழிற்சாலையில் ரப்பர் சீட் தயாரிப்பதற்காக, பழைய டயர் மற்றும் டியூப் போன்றவற்றினை, பல்வேறு இயந்திரத்தின் துணையோடு உருக்குகின்றனர். இதில், இருந்து வெளியேற்றப்படும் கரித் துகள்கள், காற்றில் கலந்து கார்பன் அளவை அதிகரிக்கின்றது. இதனால், இப்பகுதியில் காற்று மாசடைந்துள்ளது. மேலும், இக்காற்றை சுவாசிக்கும் பொதுமக்கள், பல்வேறு சுவாச கோளாறு நோயால் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து, அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் சிலர் கூறியதாவது: தொழிற்சாலையில் இருந்து வெளியேற்றப்படும், கரித்துகள்கள், வீடுகளின் அனைத்து பகுதிகளிலும் படிந்து உள்ளது. மேலும், வீட்டில் சமைக்கப்படும் உணவுகளில், இவைகள் படிகின்றன. இதன் மூலம், உடலுக்குள் செல்லும் கரித்துகளினால், பல்வேறு உடல் பாதிப்புகள் ஏற்படுகின்றன. மேலும், காற்று மாசடைந்து உள்ளதால், இப்பகுதியில் உள்ள குழந்தைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். புதிய ரப்பர், சீட்டுகளை தயாரிப்பதற் காக, ஏராளமான பழைய டயர்களை இங்கு, திறந்தவெளியில் கொட்டி வைத்துள்ளனர்.
கார்பன் துகள்கள் இதனால், இங்கு கடும் துர்நாற்றம் வீசுகின்றது. மேலும், நிலத்தில் படியும் கார்பன் துகள்களால், நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், இந்த தொழிற்சாலையை இங்கிருந்து அகற்ற, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X