ஜப்பானில் வசிக்கும் 19ம் நூற்றாண்டு நபர்

Updated : மே 31, 2013 | Added : மே 31, 2013 | கருத்துகள் (6) | |
Advertisement
டோக்கியோ:உலகில், 19ம் நூற்றாண்டை சேர்ந்த, ஒரே ஒரு ஆண், ஜப்பானில் வாழ்ந்து வருகிறார். 116 வயதான, ஜிரோமோன் கிமூரா, தன் வாழ்நாளில், நான்கு மன்னர்கள் மற்றும், 60 பிரதமர்களின் ஆட்சியை கண்டுள்ளார்.ஜப்பானின், கியோடோவில் வசிப்பவர், கிமூரா, 116. இவர், உலகின் மூத்த குடிமகனாக கருதப்படுகிறார். இவர், 1897ல்,ஏப்.,19ல், பிறந்தவர். உலகில், 19ம் நூற்றாண்டில் பிறந்த, 22 பேர் உயிருடன் இருக்கிறனர். இதில்,
JIROEMON KIMURA BECOMES ‘LAST LIVING MAN BORN IN 19TH CENTURY’ ஜப்பானில் வசிக்கும் 19ம் நூற்றாண்டு நபர்

டோக்கியோ:உலகில், 19ம் நூற்றாண்டை சேர்ந்த, ஒரே ஒரு ஆண், ஜப்பானில் வாழ்ந்து வருகிறார். 116 வயதான, ஜிரோமோன் கிமூரா, தன் வாழ்நாளில், நான்கு மன்னர்கள் மற்றும், 60 பிரதமர்களின் ஆட்சியை கண்டுள்ளார்.

ஜப்பானின், கியோடோவில் வசிப்பவர், கிமூரா, 116. இவர், உலகின் மூத்த குடிமகனாக கருதப்படுகிறார். இவர், 1897ல்,ஏப்.,19ல், பிறந்தவர். உலகில், 19ம் நூற்றாண்டில் பிறந்த, 22 பேர் உயிருடன் இருக்கிறனர். இதில், கிமூரா மட்டுமே ஆண். மற்ற, 21 பேரும் பெண்க@ள.
இன்றும், ஆரோக்கியத்துடன் இருக்கும் கிமூரா, நண்பர்களுடன் அவ்வப்போது, மது அருந்தினாலும், புகையை அறவே வெறுப்பவர்.

குறைந்த உணவு உட்கொள்ளும் இவர், அதிக நேரம் உறங்கும் பழக்கத்தை கொண்டுள்ளார். வீட்டில், தன் மருமகள் மற்றும் பேத்தியுடன் இருக்கும் கிமூரா, அவர்களுக்கும் ஆரோக்கியமாக வாழ கற்றுக் கொடுத்துள்ளார். ஜப்பானில், 110 வயதை கடந்தவர்களை, "சூப்பர் சென்டினிரியன்ஸ்' விருது வழங்கி அந்நாட்டு அரசு கவுரவிக்கிறது. இவரும், அந்த விருதை பெற்றுள்ளார்.

உலகின் பல்வேறு நாடுகளிலும், 110 வயதைக் கடந்த, 200க்கும் மேற்பட்ட நபர்கள் உயிர்வாழ்கின்றனர். இருப்பினும், அவர்கள் அனைவரிடமும், சரியான வயது சான்றிதழ் இல்லாததால், இதுவரை, 60 பேர் மட்டுமே அதிகாரப் பூர்வமாக, 110 வயதைக் கடந்து உயிர் வாழ்பவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில், ஜப்பான் மற்றும் அமெரிக்காவை சேர்ந்தவர்களே, அதிக எண்ணிக்கையில் உள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (6)

Hariganesan Sm - uthamapalayam,இந்தியா
04-ஜூன்-201314:20:24 IST Report Abuse
Hariganesan Sm கீமூரா என்ற அந்த ஜப்பானின் மூத்த குடிமகன் ..தாத்தாக்களுக்கு தாத்தாவுக்கு இறைவன் இன்னும் நல்ல ஆரோக்கியமும் ஆயுளையும் கொடுக்கட்டும். தாத்தா வாழ்க.
Rate this:
Cancel
Karthi - Bangalore,இந்தியா
31-மே-201316:13:37 IST Report Abuse
Karthi சூப்பர் தாத்தா
Rate this:
Cancel
Sami - Tirupur,இந்தியா
31-மே-201312:22:25 IST Report Abuse
Sami வாழ்க்கைமுறையில் ஆயிரம் மாற்றங்கள் வாழ்ந்த பிறகு இவர் போன்று நம் சந்தியினர் ஆரோக்கியமாக வாழ்வது என்பது கடினமே. இருப்பினும் வாழும் வரை சுகமோடு வாழ முயல்வோம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X