மெல்போர்ன்: ஆஸ்திரேலிய பிரதமர், பள்ளியில் கலந்து கொண்ட விழாவின் போது, அவர் மீது, "சாண்ட்விட்ச்' வீசப்பட்டது. ஆஸ்திரேலிய பெண் பிரதமர் ஜூலியா கிலார்டு. கடந்த இரண்டு வாரங்களில் அவர் மீது, இரண்டாவது முறையாக, சாண்ட்விட்ச் வீசப்பட்டுள்ளது.
பிரிஸ்பேன் நகரில் உள்ள பள்ளியில், 10 நாட்களுக்கு முன், 16 வயது மாணவன், ஜூலியா மீது சாண்ட்விட்சை வீசினான். இதற்காக, அவன் பள்ளியில் இருந்து, 15 நாட்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டான்.
இதற்கிடையே, கான்பெர்ரா நகரில் உள்ள பள்ளியில், நடைபெற்ற விழாவில் பங்கேற்க வந்த ஜூலியா மீது, மற்றொரு மாணவன், சாண்ட்விட்ச் வீசினான். அது, அவர் தலைக்கு மேலாக சென்று, அவரது காலடியில் வந்து விழுந்தது. இதை பார்த்த ஜூலியா பலமாக சிரித்து, ""நான் பசியாக உள்ளதை அறிந்து, இந்த சாண்ட்விட்ச் வீசப்பட்டதாக நினைக்கிறேன்,'' என்றார்.