தேவிபட்டினம்: தேவிபட்டினம் கோவில் திருவிழா ஊர்வலத்தின் போது, இரு தரப்பினர் மோதிக் கொண்டதில், ஊராட்சி தலைவர் உட்பட, 11 பேர் கைது செய்யப்பட்டனர். ராமநாதபுரம் மாவட்டம், தேவிபட்டினத்தில், முனீஸ்வரர் கோவில் வைகாசி விழா, நேற்று முன்தினம் இரவு நடந்தது. ஊர்வலத்தின் போது, இருதரப்பினர் மோதி கொண்டதால், கற்கள் வீசி தாக்கிக் கொண்டனர். போலீசார், கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மோதலில், இரு தரப்பிலும், 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். கனகராஜ் கொடுத்த புகாரின் அடிப்படையில், தேவிபட்டினம் ஊராட்சி தலைவர் ஜாகிர் உசேன் உட்பட, ஐந்து பேர் மற்றும் முகம்மது அசாருதீன் புகாரின் அடிப்படையில், ஆறு பேரை கைது செய்த போலீசார், பத்துக்கும் மேற்பட்டோர் மீது, வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.