சுற்றுலா சென்ற 3 பேர் ஆற்றில் மூழ்கி பலி

Added : ஜூன் 01, 2013
Advertisement
மரக்காணம்: காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு சுற்றுலா சென்ற, திண்டிவனத்தைச் சேர்ந்த மூவர், ஆற்றில் மூழ்கி இறந்தனர். விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் ஜெயபுரத்தை சேர்ந்தவர் திருநாவுக்கரசு, 43; பொதுப்பணித் துறையில் பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி புனிதா, 38; மகள் மஞ்சு, 19; அதே பகுதியை சேர்ந்த மஞ்சுவின் தோழி காயத்ரி,19; நால்வரும் நேற்று, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள

மரக்காணம்: காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு சுற்றுலா சென்ற, திண்டிவனத்தைச் சேர்ந்த மூவர், ஆற்றில் மூழ்கி இறந்தனர். விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் ஜெயபுரத்தை சேர்ந்தவர் திருநாவுக்கரசு, 43; பொதுப்பணித் துறையில் பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி புனிதா, 38; மகள் மஞ்சு, 19; அதே பகுதியை சேர்ந்த மஞ்சுவின் தோழி காயத்ரி,19; நால்வரும் நேற்று, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஆலம்பரைகோட்டைக்கு சுற்றுலா சென்றனர். மன்னர்கள் கோட்டைக்கு அருகே உள்ள ஆற்றில், திருநாவுக்கரசு, மஞ்சு, காயத்ரி குளித்தனர். புனிதா கரையோரம் அமர்ந்திருந்தார். ஆற்றில் ஆழமான பகுதிக்குச் சென்ற மூவரும், சேற்றில் சிக்கி, பரிதாபமாக இறந்தனர். மஞ்சு, காயத்ரி உடல்கள் மீட்கப்பட்டு, புதுச்சேரி பிம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. திருநாவுக்கரசு உடலை, உள்ளூர் மீனவர்கள் மற்றும் போலீசார் தேடி வருகின்றனர். சூனாமேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X