பொது செய்தி

தமிழ்நாடு

பொருளாதார கணக்கெடுப்பில் திருநங்கைகளை "கேலி' செய்வதாக புகார்

Added : ஜூன் 07, 2013
Share
Advertisement

சிவகங்கை:பொருளாதார கணக்கெடுப்பில், தனியார் நிறுவனங்களின்,"பான்',"டேன்' எண்களை குறிப்பிட வேண்டும், நிறுவன உரிமையாளர் திருநங்கை எனில், 9 என குறிப்பிட, கணக்கெடுப்பாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. நாட்டில்,புதிய திட்டங்களை வகுக்கவும், பொருளாதார வளர்ச்சி குறித்து அறிய, 6 வது பொருளாதார கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது. கண்காணிப்பாளராக ஆசிரியர்களும், கணக்கெடுப்பாளராக சத்துணவு ஊழியர், அரசு துறை ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வீடு, வணிக நிறுவனங்களில் கணக்கெடுப்பு பணியில் ஈடுபடும்,கணக்காளர்கள், தனியார் நிறுவனங்களை குறிப்பிடும் போது, அதற்கான இடத்தில்,நிறுவனத்தின் "பான்', "டேன்' எண்களை எழுத வேண்டும். நிறுவனத்தின் உரிமையாளர் ஆண், பெண்ணாக இன்றி, திருநங்கையாக இருக்கும் பட்சத்தில், பூர்த்தி செய்யும் விண்ணப்பத்தில், "9' என குறிப்பிட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
திருநங்கைகள் வேதனை: பொருளாதார கணக்கெடுப்பின் போது, தனியார் நிறுவன உரிமையாளர்கள், திருநங்கைகளாக இருக்கும் பட்சத்தில், "9' என குறிப்பிட கூறுவது, திருநங்கைகளை அரசே "கேலி' செய்வது போல் உள்ளதென, திருநங்கைகள் தெரிவிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X