விவேகானந்தர் ரதம்கிணத்துக்கடவு வருகை

Added : ஜூன் 07, 2013 | |
Advertisement
கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு விவேக் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிக்கு, கோவை ராமகிருஷ்ணா மடத்தில் இருந்து விவேகானந்தர் சிலையுடன் கூடிய ரதம் வந்தது. பள்ளித்தாளாளர் பழனிச்சாமி பூர்வ கும்ப வரவேற்பும், விவேகானந்தர் சிலைக்கு மாலை அணிவித்தார். கோவை ராமகிருஷ்ணா மடத்தலைவர் சுவாமி பக்தி காமானந்த மகராஜ், வீரபத்ரானந்தா மகராஜ், சுவாமி தர்மானந்த மகராஜ், சுவாமி

கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு விவேக் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிக்கு, கோவை ராமகிருஷ்ணா மடத்தில் இருந்து விவேகானந்தர் சிலையுடன் கூடிய ரதம் வந்தது. பள்ளித்தாளாளர் பழனிச்சாமி பூர்வ கும்ப வரவேற்பும், விவேகானந்தர் சிலைக்கு மாலை அணிவித்தார். கோவை ராமகிருஷ்ணா மடத்தலைவர் சுவாமி பக்தி காமானந்த மகராஜ், வீரபத்ரானந்தா மகராஜ், சுவாமி தர்மானந்த மகராஜ், சுவாமி சசிசிகானந்த மகராஜ் ஆகியோர் பள்ளியில் புதிதாக நிறுவப்பட்ட விவேகானந்தர் சிலைக்கு மாலை அணிவித்து, தீபாராதனை காண்பித்தனர்.சுவாமி விவேகானந்தரின் 150 வது பிறந்தநாளை ஒட்டி, ராமகிருஷ்ணா மடத்தில் இருந்து சுவாமி விவேகானந்தர் குதிரை தேரில் நிற்பது போல ரதம் அமைக்கப்பட்டுள்ளது. பின், பள்ளியில் 10ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்க்கு விவேகானந்தர் புத்தகம் பரிசாக வழங்கப்பட்டது.விழாவில், பள்ளி முதல்வர் சுந்தரகிரி, ஆசிரியர்கள், பெற்றோர் பங்கேற்றனர். பின்னர், மொபைல் புத்தக நிலையத்தில், விவேகானந்தரின் பல்வேறு புத்தகங்களை மாணவ, மாணவியர் பார்வையிட்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X