பொள்ளாச்சி:பொள்ளாச்சியில், ரூ.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் சார்-பதிவாளர் அலுவலக கட்டடம் இன்னும் ஒரு மாதத்தில் திறக்கப்படும் என பொதுப்
பணித்துறையினர் தெரிவித்தனர்.பொள்ளாச்சி- கோவை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சார்-பதிவாளர் அலுவலகத்திற்கு, தினமும் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பத்திரங்களை பதிவு செய்ய வருகின்றனர். கடந்த 50 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இந்த கட்டடம் பழுதடைந்து காணப்பட்டது.
இதையடுத்து, பொள்ளாச்சி- கோவை ரோட்டில் உள்ள சார்-பதிவாளர் அலுவலகத்தை புதுப்பிக்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. இதற்கு மாற்றாக பொள்ளாச்சி- பல்லடம் நெடுஞ்சாலையில் வாடகைக்கட்டடத்தில் இந்த அலுவலகம் இயங்கி வருகிறது.புதிதாக கட்டப்படும் கட்டடத்தில் இரண்டு தளங்கள் உள்ளன. முதல் தளத்தில் மக்கள் காத்திருக்கும் அறை, அலுவலர் அறை, ஹால் உள்ளிட்ட ஐந்து அறைகளும், சார்-பதிவாளர் "சேம்பரும்' அமைக்கப்படுகின்றன. மேல் தளத்தில் பத்திரங்களை பாதுகாக்கும் அறை, அலுவலக ஊழியர்களுக்கு கழிவறை வசதிகள், பொதுமக்களின் பயன்பாட்டுக்காக வளாகத்தில் கழிவறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
கடந்த நவ., மாதம் பூமி பூஜை நடத்தப்பட்டு, பிப்., மாதம் கட்டுமான பணிகள் துவங்கின. தற்போது இந்த கட்டுமான பணிகள் முடியும் நிலையில் உள்ளது.ஒரு மாதத்தில் முடியும்பொள்ளாச்சி பொதுப்பணித்துறை (கட்டடம்) உதவி பொறியாளர் ரவிச்சந்திரன் கூறுகையில்,""பொள்ளாச்சி பத்திரப்பதிவு அலுவலக கட்டுமான பணிகளை ஆறு மாதத்துக்குள் முடிக்க அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். ஆனால், இன்னும் ஒரு மாதத்திற்குள் பணிகள் நிறைவடையும்,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE