சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பேஸ்புக் காதலால் சீரழியும் மாணவர்கள் : ஓசூரில் 6 மாதத்தில் இரண்டு பேர் கொலை

Added : ஜூன் 07, 2013 | கருத்துகள் (23)
Share
Advertisement
ஓசூர் : பேஸ்புக் காதல் விவகாரத்தில், ஓசூரில், ஆறே மாதத்தில், இன்ஜினியரிங் கல்லூரி மாணவர் உள்ளிட்ட, 2 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.ஓசூர், தனியார் கல்லூரி மாணவர் ராகவ், 22, பேஸ்புக் காதல் விவகாரத்தில் சிக்கினார். உடன் படிக்கும் மாணவர்கள், பிரவீன், பிரதாப் சச்சின் ஆகியோர், கடந்த, 6ம் தேதி, இவரை, கழுத்தை அறுத்து கொலை செய்தனர்.பேஸ்புக் மூலம், பிரவீன் காதலியை, ராகவ்
பேஸ்புக் காதலால் சீரழியும் மாணவர்கள்  : ஓசூரில் 6 மாதத்தில் இரண்டு பேர் கொலை

ஓசூர் : பேஸ்புக் காதல் விவகாரத்தில், ஓசூரில், ஆறே மாதத்தில், இன்ஜினியரிங் கல்லூரி மாணவர் உள்ளிட்ட, 2 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

ஓசூர், தனியார் கல்லூரி மாணவர் ராகவ், 22, பேஸ்புக் காதல் விவகாரத்தில் சிக்கினார். உடன் படிக்கும் மாணவர்கள், பிரவீன், பிரதாப் சச்சின் ஆகியோர், கடந்த, 6ம் தேதி, இவரை, கழுத்தை அறுத்து கொலை செய்தனர்.பேஸ்புக் மூலம், பிரவீன் காதலியை, ராகவ் வசியப்படுத்தியதால் ஏற்பட்ட ஆத்திரமே, இந்த கொலைக்கு காரணம் என, போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.இதே போல், 2012 டிச., 26 ல், ஓசூர், ராயக்கோட்டை, ஹட்கோவை சேர்ந்த செல்வம், 24, என்பவரும், பேஸ்புக் காதல் விவகாரத்தில், படுகொலை செய்யப்பட்டார். ஒரு பெண்ணுக்கு, தன்னை காதலிக்குமாறு தொடர்ந்து, பேஸ்புக்கில், தகவல் அனுப்பியுள்ளார்.இதை, அந்த பெண், தன் காதலன், அர்ஜுனிடம் கூறியுள்ளார். ஆத்திரமடைந்த அர்ஜுன், நண்பர்களுடன், செல்வத்தை கொலை செய்துள்ளார்.

பேஸ்புக் காதல் தகராறுகளால், கல்லூரி மாணவர்கள், வாலிபர்கள், அடிக்கடி மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். விவகாரம் வெளியே தெரியாமல், போலீசார், மாணவர்களை எச்சரித்து அனுப்புகின்றனர்.சில குறும்புக்கார இளைஞர்கள், பேஸ்புக்கில், தங்களை பெண்கள் போல் பாவித்து, மற்ற மாணவியர் படங்களை, மார்பிங் செய்து, கிளுகிளுப்பு குறுந்தகவல்கள், படங்கள் அனுப்பி குறும்பு செய்கிறார்; இன்னும் ஒருபடி மேலே போய், காதலிப்பது போல், மோசடி செய்வதும் நடக்கிறது.

"பேஸ்புக் பற்றி, மாணவர்களுக்கு முறையான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்' என, சமூக ஆர்வலர்கள், கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vandu murugan - chennai,இந்தியா
08-ஜூன்-201317:59:24 IST Report Abuse
vandu murugan இந்த அவசர உலகில் காதல் வெறும் 10 நிமிடத்தில் முடிந்து விடுகிறது. சிலர் இன்னும் சிக்கிரம் முடித்து விடுகின்றனர் .இது தான் கலி காலம்
Rate this:
Cancel
Rangarajan Pg - CHENNAI,இந்தியா
08-ஜூன்-201317:17:59 IST Report Abuse
Rangarajan Pg FACEBOOK வலைதளத்தை கூட விடாமல் "அப்படியே" தமிழ்படுத்தி அதை ""முகநூல்"" ஆக்கிவிட்டார் யாரோ ஒரு தமிழ் புண்ணியவான். அந்த அளவுக்கு நம் தமிழ் மொழியை காதலிக்கும் ஆட்கள் உள்ளார்கள் நம் மாநிலத்தில் . அப்படிப்பட்டவர்கள் வாழும் இந்த புண்ணிய பூமியில் இதை போன்ற போலி காதல் அதே முகநூல் மூலம் பரவி முகம் தெரியாதவர்கள் மீதெல்லாம் காதல் பிறந்து அதனால் உயிரையும் இழக்கிறார்களே. இப்படிப்பட்டவர்கள் தப்பி தவறி தங்கள் காதலில் ஜெயித்து வேறு வழி இல்லாமல் திருமணமும் செய்து கொண்டால் அதன் பிறகும் அந்த காதலருக்கோ/காதலிக்கோ உயிருக்கு உத்திரவாதம் இருக்குமா தெரியவில்லையே. ஏகப்பட்ட EXAMPLES இதற்கு உண்டு. இந்த காலத்தில் காதலர்கள் என்று கூறி கொள்பவர்களே,, பார்த்து காதலியுங்கள்.
Rate this:
Cancel
AISU - T P K MADURAI ,இந்தியா
08-ஜூன்-201313:16:32 IST Report Abuse
 AISU படிக்கிற வயசில இது தேவையா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X