"இப்படி நடந்தால், என்ன செய்ய வேண்டும்...': மூன்றாம் வகுப்பிலே வந்துவிட்டது பாடம்

Added : ஜூன் 07, 2013 | கருத்துகள் (24) | |
Advertisement
கோவை :எதுவும் அறியாத, எதிர்க்கும் சக்தியில்லாத குழந்தைகள், பாலியல் கொடுமையில் சிக்கினால், என்ன செய்ய வேண்டும்? இதற்கு, விழிப்புணர்வு ஏற்படுத்தும் பாடம், மூன்றாம் வகுப்பு, தமிழ்ப் பாடத்தில், சேர்க்கப்பட்டு உள்ளது.விழிப்புணர்வு:குழந்தைகளிடம் பாலியல் வன்முறை செய்வது அதிகரித்து வருகிறது. இதனால், குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, மூன்றாம் வகுப்பு,
Awarness subject about sexual harrasment in 3rd class book"இப்படி நடந்தால், என்ன செய்ய வேண்டும்...': மூன்றாம் வகுப்பிலே வந்துவிட்டது பாடம்

கோவை :எதுவும் அறியாத, எதிர்க்கும் சக்தியில்லாத குழந்தைகள், பாலியல் கொடுமையில் சிக்கினால், என்ன செய்ய வேண்டும்? இதற்கு, விழிப்புணர்வு ஏற்படுத்தும் பாடம், மூன்றாம் வகுப்பு, தமிழ்ப் பாடத்தில், சேர்க்கப்பட்டு உள்ளது.

விழிப்புணர்வு:குழந்தைகளிடம் பாலியல் வன்முறை செய்வது அதிகரித்து வருகிறது. இதனால், குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, மூன்றாம் வகுப்பு, தமிழ்ப் பாடப் புத்தகத்தில், பாடம் சேர்க்கப்பட்டுள்ளது.மூன்றாம் வகுப்பு தமிழ்ப் பாடப் புத்தகத்தில், முதல் பருவ புத்தகத்தில், ஒன்பதாவது பாடமாக, "இப்படி நடந்தால்...' என்ற தலைப்பில், அந்த பாடம் சேர்க்கப்பட்டுள்ளது. பாடத்திலுள்ள படத்தில், குழந்தையின் வாயை, ஒருவரின் கை இறுக்கமாக அழுத்தியிருப்பது போன்றும், அந்த கையை, குழந்தை இழுப்பது போன்றும், சமூக அவலத்தை, பறைசாற்றும் விதமாக உள்ளது.

அந்த பாடத்தில் இருப்பதாவது:வகுப்பறையில் சுறுசுறுப்பாக, சிரித்த முகத்துடன் இருக்கும் மீனா, சில நாட்களாக சோர்வாக இருந்தாள். வகுப்பாசிரியர் விசாரித்தார். நாட்கள் செல்லச் செல்ல, அவளிடம் மாற்றம் மிகுதியானது. படிப்பிலும், நாட்டம் குறைந்தது; யாருடனும் பேசுவதில்லை; வீட்டில் ஏதாவது பிரச்னையா என, அறிய ஆசிரியை, மீனாவின் அம்மாவை பள்ளிக்குவரவழைத்தார்.மீனா பற்றி கேட்டதும், "சில நாட்களாக, அவள் இப்படித்தான் இருக்கிறாள். வீட்டில் அவளுக்கு எந்த குறையும் இல்லை; மருத்துவரிடம் காண்பித்தேன். உடல் அளவில் ஏதுமில்லை என, கூறிவிட்டார். நானும் பலமுறை கேட்டு விட்டேன்; வாயே திறக்கவில்லை' எனக் கூறினார் அம்மா.

மீனாவை, தனியே அழைத்து, ஆசிரியை விசாரித்தபோது, மீனா கண் கலங்கினாள். "ஒருநாள் என் அம்மாவும், அப்பாவும், என்னை, பக்கத்து வீட்டில் விட்டு விட்டு, அவசர வேலையாக வெளியே சென்றனர். அந்த வீட்டு மாமா... அவரோட மொபைல் போனில் இருந்த படங்களை காண்பித்து, பார்க்குமாறு வற்புறுத்தினார். தொட்டுத் தொட்டு பேசினார்; இதை யாரிடமும் சொல்லக் கூடாது என, மிரட்டினார். எனக்கு பயமாய் இருந்ததால் யாரிடமும் சொல்லவில்லை; நான் தவறு செய்து விட்டேனா?' என, மீனா அழுதாள்.ஆசிரியையின் ஆறுதலால், மீனா, பழைய நிலைக்கு திரும்பினாள்.இப்படிப்பட்ட கருத்துடன், பாடம் முடிகிறது.


மூன்று கேள்விகள்:

இது குறித்து, அரசு பள்ளி தமிழாசிரியர் ஒருவர் கூறியதாவது: சமூகத்தில் ஏற்படும் பிரச்னைகளுக்கு தீர்வு காண, பாடப் புத்தகங்கள் மட்டுமே சிறந்த வழி. எதுவும் அறியாத, எதிர்க்கும் சக்தியற்ற குழந்தைகளுக்கு விருப்பமில்லாத, கசப்பான அனுபவங்கள் ஏற்பட்டால், என்ன செய்ய வேண்டும் என்பதற்கு மூன்று கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. இதன் மூலம், குழந்தைகளுக்கு நிச்சயம் விழிப்புணர்வு ஏற்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (24)

Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
08-ஜூன்-201318:48:51 IST Report Abuse
Pugazh V ஒரு இந்திய ஆராய்ச்சியாளரின் ஆங்கிலக் கட்டுரையில் இப்படி சொல்லியிருக்கிறார். இது போன்றக் கொடுமைகள் நடக்கக் காரணம், மனைவிகள். 40 வயதுக்கப்புறம் பெரும்பாலான ஆண்களுக்கு வீட்டில் காதல், ஸ்பரிசம், அணைப்பு, செக்ஸ் மறுக்கப்பட்டு விடுகிறது, அதுவும் காரமே இன்றி. // மகள் பெரியவளாகி விட்டால், வயசாகிறது நினைவு இருக்கட்டும் // என்று சொல்லி மனைவிகள் கணவன்மார்களை தவிக்க வைப்பதால் இது போன்ற நிகழ்வுகள் என்று எழுதியிருக்கிறார். இது சரிதானா என்று 40+ நண்பர்கள் பகிர்ந்துகொண்டால் நலம்.
Rate this:
Cancel
Karikalan - Manapakkam, CHENNAI-125.,இந்தியா
08-ஜூன்-201314:07:36 IST Report Abuse
Karikalan முதலில் குழந்தைகளுக்கு சொல்லி கொடுக்க வேண்டியது தைரியம், மற்றும் சந்தேகத்தை நிவர்த்தி கொள்ளும் ஆர்வம்.கேள்வி கேட்கவே பயப்படும் குழந்தைகளை பெற்றோரும் ஆசிரியரும் அதிக கவனம் செலுத்தி புரிய வைக்க வேண்டும் .
Rate this:
Cancel
SENTHIL KUMAR - MADURAI,இந்தியா
08-ஜூன்-201313:02:29 IST Report Abuse
SENTHIL KUMAR அந்த வீட்டு மாமாவோடு பள்ளி ஆசிரியரையும் சேருங்கள். ஒருவேளை பக்கத்து வீடு மாமா தவறு செய்தால் மட்டும் சொல்லவேண்டும் பள்ளி ஆசிரியர் செய்தால் ஒன்றும் சொல்ல கூடாது என்று நினைக்கப்போகிறது அந்த பிஞ்சு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X