கூடுதலாக 88,537 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி: அரசு இலக்கு

Updated : ஜூன் 08, 2013 | Added : ஜூன் 07, 2013 | கருத்துகள் (12) | |
Advertisement
மத்திய மின் அமைச்சகம், 12 வது ஐந்தாண்டு திட்ட காலத்தில், அனல், புனல் மற்றும் எரிவாயு ஆகிய மின் உற்பத்தி திட்டங்களின், மொத்த உற்பத்தி திறனை, ஏற்கனவே உள்ளதை விட கூடுதலாக, 88,537 மெகாவாட் வரை அதிகரிக்க, இலக்கு நிர்ணயித்து உள்ளது.நாட்டின் மரபு சார்ந்த மற்றும் மரபு சாரா எரிசக்தி ஆதாரங்களின், மொத்த உற்பத்தி திறன், 2, 23, 343.60 மெகாவாட். மத்திய அரசு, மின் நுகர்வோருக்கு, தரமான மற்றும் சீரான
கூடுதலாக 88,537 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி: அரசு இலக்கு

மத்திய மின் அமைச்சகம், 12 வது ஐந்தாண்டு திட்ட காலத்தில், அனல், புனல் மற்றும் எரிவாயு ஆகிய மின் உற்பத்தி திட்டங்களின், மொத்த உற்பத்தி திறனை, ஏற்கனவே உள்ளதை விட கூடுதலாக, 88,537 மெகாவாட் வரை அதிகரிக்க, இலக்கு நிர்ணயித்து உள்ளது.

நாட்டின் மரபு சார்ந்த மற்றும் மரபு சாரா எரிசக்தி ஆதாரங்களின், மொத்த உற்பத்தி திறன், 2, 23, 343.60 மெகாவாட். மத்திய அரசு, மின் நுகர்வோருக்கு, தரமான மற்றும் சீரான மின்சாரம் வழங்கல், தொழில் நுட்ப மற்றும் வணிக இழப்பு (உற்பத்தி, பகிர்மான இழப்பு) ஆகியவற்றை கட்டுப்படுத்தும் திட்டங்களை செயல்படுத்துகிறது.நாளுக்கு நாள், தனி நபர் மின் நுகர்வு மற்றும் மின் தேவை அதிகரித்து வருகிறது. இதற்கு ஏற்ப, மத்திய மின் அமைச்சகம், புதிய மின் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, 16 மிகப் பெரும் அனல் மின் திட்டங்களை செயல்படுத்த உள்ளது.

மத்திய பிரதேசம், குஜராத், ஆந்திரா, ஒடிசா, சத்தீஸ்கர், பீகார், தமிழகம் ஆகிய மாநிலங்களில், தலா, 4,000 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட, 16 மிகப் பெரும் அனல் மின் திட்டங்கள் அமையவுள்ளன. இவற்றில், தமிழகத்தில், இரு மிகப் பெரும் அனல் மின் திட்டங்கள் அமைகின்றன.இரு மிகப் பெரும் அனல் மின் திட்டங்களில் ஒன்று, காஞ்சிபுரம் மாவட்டம், செய்யூர் தாலுகாவில், 18 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில், செய்யூர் அனல் மின் திட்டம் அமைகிறது. இத்திட்டத்திற்கு, மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனம் அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. மற்றொரு மிகப் பெரும் அனல் மின் திட்டத்திற்கான இடம், தேர்வு செய்யப்படவில்லை.

கடந்த, 2012 - 13ம் ஆண்டு, நாட்டின் மொத்த மின் உற்பத்தி இலக்கான, 93 ஆயிரம் கோடி யூனிட்டில், 91,165 கோடி யூனிட்கள் உற்பத்தி செய்துள்ளது. 12வது ஐந்தாண்டு திட்ட காலத்தில், பழைய மின் உற்பத்தி நிலையங்கள் புதுப்பிப்பு, நவீனப்படுத்துதல், தடையின்றி மின் உற்பத்திக்கு தேவையான எரிவாயு மற்றும் நிலக்கரி வழங்கல், நிர்ணயிக்கப்பட்ட காலத்தில் மின் உற்பத்தி திட்டங்களை நிறுவுதல் ஆகிய நடவடிக்கைகள் மூலம், மரபு சார்ந்த மின் உற்பத்தி திட்டங்களின் மொத்த உற்பத்தி திறனை, தற்போது உள்ளதை விட, கூடுதலாக, 88, 537 மெகாவாட் வரை அதிகரிக்க, மத்திய மின் அமைச்சகம் திட்டமிட்டு உள்ளது.மேலும், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களின் உற்பத்தி திறனும், கூடுதலாக, 30 ஆயிரம் மெகாவாட் வரை அதிகரிக்கப்படும் என, மத்திய மின் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஏழு ஆண்டு மின் உற்பத்தி விவரம்

ஆண்டு உற்பத்தி(யூனிட் கோடியில்)
2006 -07 66,252
2007 - 08 70,450
2008 - 09 72,380
2009 - 10 77,160
2010 - 11 81,110
2011 - 12 87,690
2012 - 13 91,165

-நமது நிருபர்-

Advertisement


வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SENTHIL KUMAR - MADURAI,இந்தியா
08-ஜூன்-201313:10:01 IST Report Abuse
SENTHIL KUMAR அணுமின்சாரம், அனல்மின்சாரம், புனல்மின்சாரம் இதுபோன்று பலவகைகளில் எப்படி மின்சாரம் தயாரிக்கமுடியும் என்று படித்திருப்பீர்கள் ஆனால் பேப்பரில் மின்சாரம் தயாரிப்பது எப்படி என்று தெரியுமா அதுதான் இந்த செய்தி மூலம் மத்திய மற்றும் மாநில அரசு நமக்கு சொல்லும் செய்முறை .
Rate this:
Cancel
ANBE VAA J.P. - madurai,இந்தியா
08-ஜூன்-201312:55:01 IST Report Abuse
ANBE VAA J.P. நல்லா கிழிச்சீங்க போங்க இப்படி தான் பதவி ஏற்றத்தில் இருந்து எங்க மாநில அரசு கதை விட்டுகிட்டே இருக்கு எதையோ பார்த்து சூடு போட்டு கிட்ட து போல் மோடி ய பார்த்து சூரிய உற்பத்தி சூரிய உற்பத்தி ன்னு சொல்லிக்கிட்டு ஒரு 1000 மெகாவாட் திட்டத்துக்கு இன்னும் டெண்டர் விண்ணப்பம் கூட தயாரிக்கல இதுல நீங்க வேற புது கதை விட ஆரம்பிச்சாச்சா நல்லா இருங்க ....
Rate this:
Cancel
JAY JAY - CHENNAI,இந்தியா
08-ஜூன்-201310:19:59 IST Report Abuse
JAY JAY இது கூட பத்தாது...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X