சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தொழிலாளி வெட்டிக் கொலை:கரூர் அருகே மூன்று பேர் கைது

Added : ஜூன் 08, 2013
Advertisement

குளித்தலை: மணல்குவாரியில் வே லைபார்த்து வந்த தொழிலாளி, கு ளித்தலை அருகே வெட்டிக் கொ ல்லப்பட்ட வழக்கில், மூன்று பே ரை போலீஸார் கைது செய்தனர்.கரூர் மாவட்டம் குளித்தலை நடுவதியத்தைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் மகன் கருணாமூர்த்தி 32. அதே ஊரில் செயல்பட்டு வரும் மணல் குவாரியில் வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த 2ம் தேதி இரவு, 8 மணிக்கு, நடுவதியம் ரயில் தண்டவாளம் அருகில் கருணாமூர்த்தி தலையில் பலத்த அரிவாள் வெட்டுடன், ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதனால், லாலாப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், தொகைமலை இன்ஸ்பெக்டர் முகமது இஸ்திரிஸ் ஆகியோர் தலைமையில், தனிப்படை அமைத்து போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். இதில், கருணாமூர்த்தி மனைவி தமிழ்செல்விக்கும், எழுநூற்றுமங்கலத்தைச் சேர்ந்த பஷிர்முகமது ,37, என்பவருக்கும் கள்ளக்காதல் இருப்பது தெரியவந்து. இதையடுத்து இவரை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தினர். இவர் நண்பர்களுடன் சேர்ந்து கருணாமூர்த்தியை கொலை செய்தாக கூறினார். இதையடுத்து, இவரது நண்பர்கள் வேங்காம்பட்டி சேர்ந்த கோபாலகிருஷ்ணன், 29, அதே ஊரை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, 33 ஆகியோரை கைது செய்தனர். கடந்தவாரம் பஷிர்முகமதுடன் இருந்த கள்ளக்காதல், கருணாமூர்த்திக்கு தெரியவந்த பின், அவர் தனது மனைவி தமிழ்செல்வியை கண்டித்துள்ளார். இதனால், நண்பர்களுடன் இணைந்து கொலை செய்ததாக கூறினர். தலைமறைவாக உள்ள தமிழ்செல்வியை போலீஸார் தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X