பொது செய்தி

தமிழ்நாடு

சத்தியவாடி ஆலந்துறையீஸ்வரர் கோவில் புனரமைக்கப்படுமா?

Added : ஜூன் 12, 2013
Advertisement

பெண்ணாடம்:ஆயிரம் ஆண்டுகள் பழமையான சத்தியவாடி ஆலந்துறையீஸ்வரர் கோவிலைப் புனரமைக்க இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.விருத்தாசலம் அடுத்த சத்தியவாடி கிராமத்தில், 1,000 ஆண்டுகள் பழமையான அழகிய பொன்மணி உடனுறை ஆலந்துறையீஸ்வரர் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில், ஆண்டுதோறும் தைப்பூச திருவிழா விமர்சையாக நடப்பது வழக்கம்.இக்கோவில் புனரமைக்கப்பட்டு, கடந்த 1982ம் ஆண்டு மே 6ம் தேதி அப்போதைய திருச்சி இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை துணை ஆணையர் முத்துவேல், கடலூர் இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை உதவி ஆணையர் நந்தகுமார் ஆகியோர் முன்னிலையில் கும்பாபிஷேகம் நடந்தது.அதன் பிறகு, முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக பராமரிப்பின்றி உள்ள இக்கோவில் சிதிலமடைந்துள்ளது. கோவிலின் சுற்றுச் சுவர்களில் மரம், செடி, கொடிகள் வளர்ந்து விரிசல் ஏற்பட்டுள்ளது.நாளுக்கு நாள் பாழாகி வரும், ஆயிரம் ஆண்டுகள் பழமையான இக்கோவிலை புனரமைக்க இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.சத்தியவாடி திருநாவுக்கரசு கூறுகையில், ஆலந்துறையீஸ்வரர் கோவில் ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலுக்கு அடுத்ததாக ஐந்து நிலை பெரிய கோபுரமுடையது. இக்கோவிலைச் சுற்றி 12 அடி உயரம் சுற்றுச் சுவர் உள்ளது.கோவிலில் சிவராத்திரி நான்கு கால பூஜைகள், கார்த்திகை மாத சோம வார பூஜைகள், மாதந்தோறும் பிரதோஷம், கார்த்திகை, பவுர்ணமி பூஜைகள், வெள்ளிக்கிழமை வார வழிபாடு, தைப்பூசத்தில் சுவாமி புறப்பாடு விமர்சையாக நடக்கும். ஆலந்துறையீஸ்வரர் கோவிலை திருப்பணி செய்ய இந்து சமய அறநிலைத்துறை முன்வரவேண்டும்' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X