பொது செய்தி

தமிழ்நாடு

துணை சுகாதார நிலையத்தை திறக்க பொதுமக்கள் கோரிக்கை

Added : ஜூன் 12, 2013
Advertisement

திட்டக்குடி:மங்களூர் ஒன்றியம், வி.சித்தூர் துணை சுகாதார நிலையத்தைத் திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மங்களூர் வட்டாரம், வி.சித்தூர் துணை சுகாதார நிலையம் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்காமல் பழுதடைந்த நிலையில் உள்ளது. இதனால் மிகவும் பின்தங்கிய பகுதியைச் சேர்ந்த ஆலத்தூர், வி.சித்தூர், கீழக்கல்பூண்டி, மேலக்கல்பூண்டி, வடகராம்பூண்டி கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பல கி.மீ., தொலைவிலுள்ள தொழுதூர் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்து சிகிச்சை பெற வேண்டிய அவலநிலை உள்ளது.சாலை விபத்து, விஷ ஜந்துக்களால் பாதிப்பு உள்ளிட்ட அவசர காலங்களில் முதலுதவி பெறுவதற்கு கூட 10 கி.மீ., தொலைவிலுள்ள தொழுதூருக்கு பழுதடைந்த சாலையை கடந்து செல்வதற்குள் பலர் உயிரிழக்கும் அவலம் நேர்கிறது. துணை சுகாதார நிலையத்திற்காக அமைக்கப்பட்ட கட்டடமும் பராமரிப்பின்றி பாழடைந்துள்ளது.சாதாரண காய்ச்சல் உள்ளிட்ட முதலுதவி தேவைப்படும் நோய்களுக்கு தொலைவிலுள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறுவதில் பொதுமக்கள் அலட்சியம் காட்டுவதால் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே பொதுமக்களின் அத்தியாவசிய தேவையாக உள்ள மருத்துவ சிகிச்சைக்காக துணை சுகாதார நிலையத்தைத் திறக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X