பொது செய்தி

இந்தியா

ஜூலை 15 முதல் தந்திக்கு "தடா' : விடை பெறுகிறது 160 ஆண்டு சேவை

Updated : ஜூன் 13, 2013 | Added : ஜூன் 12, 2013 | கருத்துகள் (38)
Share
Advertisement
நாட்டில், 160 ஆண்டு கால பழமை வாய்ந்த, "தந்தி' சேவை, அடுத்த மாதம், 15ம் தேதி முதல் நிறுத்தப்படும் என, பி.எஸ்.என்.எல்., அறிவித்து உள்ளது.இணையதளம்:தகவல்களை விரைவாக பரிமாறிக் கொள்ள, தந்தி சேவையை, மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். எனினும், இணையதளத்தின் வருகை, ஸ்மார்ட் போன்களின் பயன்பாடு அதிகரிப்பு போன்றவற்றால், மக்கள் மத்தியில், தந்தி சேவைக்கான மவுசு குறைந்து விட்டது.கடந்த, 1853ம்
ஜூலை 15 முதல் தந்திக்கு "தடா' : விடை பெறுகிறது 160 ஆண்டு சேவை

நாட்டில், 160 ஆண்டு கால பழமை வாய்ந்த, "தந்தி' சேவை, அடுத்த மாதம், 15ம் தேதி முதல் நிறுத்தப்படும் என, பி.எஸ்.என்.எல்., அறிவித்து உள்ளது.

இணையதளம்:தகவல்களை விரைவாக பரிமாறிக் கொள்ள, தந்தி சேவையை, மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். எனினும், இணையதளத்தின் வருகை, ஸ்மார்ட் போன்களின் பயன்பாடு அதிகரிப்பு போன்றவற்றால், மக்கள் மத்தியில், தந்தி சேவைக்கான மவுசு குறைந்து விட்டது.கடந்த, 1853ம் ஆண்டு, இந்தியாவில் அறிமுகமான இந்த வசதி, சில ஆண்டுகளுக்கு முன் வரை, தகவல் பரிமாற்றத்திற்கு, பலராலும் பயன்படுத்தப்படும் சேவைகளில் ஒன்றாக இருந்தது.சில ஆண்டுகளாக, குறைந்த கட்டணத்தில், போன் மூலம் பேசும் வசதி, எஸ்.எம்.எஸ்., அனுப்பும் வசதி, "இ - மெயில்' மூலம் விரிவான தகவல் களை அனுப்புதல் போன்றவற்றை, அனைத்து தரப்பினரும் பின்பற்ற துவங்கியதை அடுத்து, தந்தி பயன்பாடு, வெகுவாக குறைந்து விட்டது.

கடந்த, 160 ஆண்டுகளாக வழக்கத்தில் உள்ள இந்த சேவை, இன்னும் சில நாட்களில் முடிவுக்கு வருகிறது.அஞ்சல் துறையின் சார்பில் வழங்கப்பட்ட இந்த சேவை, கடந்த சில ஆண்டுகளாக, பி.எஸ்.என்.எல்., நிறுவனம் ஏற்று நடத்தி வருகிறது. வணிகரீதியில், லாபம் தராத இந்த சேவையை, ஜூலை, 15 முதல் நிறுத்திக் கொள்ள, பி.எஸ்.என்.எல்., முடிவு செய்துள்ளது.இது குறித்து, மத்திய அரசிடம், அந்த நிறுவனம் அனுமதி கோரிய போது, பி.எஸ்.என்.எல்., நிறுவனமே முடிவெடுக்கலாம் என, அரசு கூறிவிட்டது.


சுற்றறிக்கை:

இதையடுத்து, ஜூலை, 15ம் தேதி முதல், பொதுமக்களின் பயன்பாட்டிற்கு தந்தி இருக்காது. அடுத்த, ஆறு மாதங்களுக்கு, அரசின் ஆணைகள், சுற்றறிக்கைகள் மட்டுமே, தந்தி சேவை மூலம் அளிக்கப்படும். அதன் பிறகு, முழுமையாக, தந்தி சேவை நிறுத்தப்படும் என, டில்லியில் உள்ள, பி.எஸ்.என்.எல்., நிறுவன, மூத்த பொது மேலாளர், சமீம் அக்தர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (38)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mohamed Musthafa - doha,கத்தார்
14-ஜூன்-201300:50:02 IST Report Abuse
Mohamed Musthafa எண்பதுகளில் சார் தந்தி என்ற போஸ்ட்மன் குரல் கேட்டதும் பதறிய நினைவு மறக்கமுடியாது
Rate this:
Cancel
Indian - Erode,இந்தியா
13-ஜூன்-201316:30:23 IST Report Abuse
Indian புலம்புவதை தவிர்த்து, இது வரை ஆற்றிய சேவைக்கு ஒரு சலாம் போட்டு வழியனுபுவோம்.. 160 வருடம் மனிதனால் நிலைத்துகூட நிற்க முடியாது தானே..
Rate this:
Cancel
Narendra Bharathi - Sydney,ஆஸ்திரேலியா
13-ஜூன்-201316:29:07 IST Report Abuse
Narendra Bharathi தந்திக்காரர் தெருவில் நுழைந்தவுடன், அய்யோ...யார் வீட்டிற்கு வரப்போகிறாரோ என்று தெருவே ஓர் பதபதப்புடன் எதிர் நோக்கி இருந்தது...அது ஒரு காலம்...தந்தி கொண்டு வருபவர், அந்த செய்தியுடன்தான் வருகிறார் என்ற ஒரு அவ நம்பிக்கை... ஆனால், இன்றோ இணையம், மின்னஞ்சல் போன்ற தொழில்நுட்ப மேம்பாடுகளால் "அஞ்சல் துறையின்" அருமை பலருக்குப் புரியவில்லை...குறிப்பாக, மேல் நாட்டு கலாச்சாரத்திற்கு அடிமையாகிப்போன நம் இளம் தலைமுறையினர்... சென்ற தலைமுறையில் பெரும்பாலோனோர் "தபால்காரர்" வருகைக்கு ( பள்ளி இறுதி ஆண்டு தேர்வுச் செய்தி, காதலர்/காதலியிடமிருந்து கடிதம், நேர்முகக் கடிதம், வேலை நியமனக் கடிதம், தீபாவளி/பொங்கல் வாழ்த்துக்கள் இன்ன பிற...) தவமிருந்தது பழங்கதையகிப்போனது வேறு விஷயம்...தபால்காரரிடமிருந்து கடிதம் பெற்றவுடன் படிப்பது ஒரு ஈடு இணையில்லா சுகம்...
Rate this:

Microsoft OLE DB Provider for SQL Server error '80040e31'

Query timeout expired

/xtralog_load_full_taboolabc.asp, line 394