அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஒட்டியிருந்த என்னை வெட்டி விட்டது யார்? காங்கிரசுக்கு கருணாநிதி கேள்வி

Added : ஜூன் 12, 2013 | கருத்துகள் (332)
Share
Advertisement
சென்னை : ""ஒட்டியிருந்த என்னை, வெட்டி விட்டது யார்?'' என, காங்கிரஸ் கட்சிக்கு, தி.மு.க., தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான திருநாவுக்கரசரின் மகன் திருமணத்தை, சென்னை காமராஜர் அரங்கில், நேற்று நடத்தி வைத்து அவர் பேசியதாவது:விழாவில் வரவேற்றுப் பேசிய திருநாவுக்கரசர், "காங்கிரசோடு நான் ஒட்டி இருக்க வேண்டும்' என
ஒட்டியிருந்த என்னை வெட்டி விட்டது யார்? காங்கிரசுக்கு கருணாநிதி கேள்வி

சென்னை : ""ஒட்டியிருந்த என்னை, வெட்டி விட்டது யார்?'' என, காங்கிரஸ் கட்சிக்கு, தி.மு.க., தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான திருநாவுக்கரசரின் மகன் திருமணத்தை, சென்னை காமராஜர் அரங்கில், நேற்று நடத்தி வைத்து அவர் பேசியதாவது:விழாவில் வரவேற்றுப் பேசிய திருநாவுக்கரசர், "காங்கிரசோடு நான் ஒட்டி இருக்க வேண்டும்' என தெரிவித்தார். ஆனால், ஒட்டி இருந்த என்னை, வெட்டி விட்டது யார் என்பது அவருக்கே தெரியும் என, கருதுகிறேன். அதைப்பற்றி விரிவாகப் பேச விரும்பவில்லை.அரசியல் பேசுவதற்கு தனி நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படுவது உண்டு. திருமண நிகழ்ச்சியில் அரசியல் பேசுவது பொருத்தமில்லை. எனவே, இப்பிரச்னையை இதோடு நிறுத்தி விடுகிறேன்.கடந்த சில ஆண்டுகளில், தமிழகத்தில் சில நிகழ்வுகள் நடந்துவிட்டன. அதை உணர்ந்து, நம்மை நாமே திருத்திக் கொள்ள வேண்டும். தமிழர்களுக்குரியது பண்பாடு. அது, தன் மரியாதையை காப்பாற்றிக் கொண்டு, தமிழினத்தின் மரியாதையையும் காப்பாற்றும். எனவே, அனைவரிடமும் நட்பாகப் பழக வேண்டும்.

ஒருவர் எந்த கட்சியில் இருக்கிறார். எந்தக் கட்சிக்காக வாதாடுகிறார் என்பது முக்கியமல்ல. அவர் எங்கிருந்தாலும் நம்முடையவர் என்ற எண்ணத்தோடு பழக வேண்டும். இதுப்போல தான், திருநாவுக்கரசர் எங்கிருந்தாலும், அதைத் தாண்டி அவருடைய நண்பர்கள் பல கட்சிகளில் இருந்து வாழ்த்துகின்றனர்.இவ்வாறு, கருணாநிதி பேசினார்.காங்கிரஸ், பா.ஜ.,- தி.மு.க., உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்கள், திருமண விழாவில் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (332)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nagarajan Thamotharan - Chennai,இந்தியா
02-ஆக-201318:37:54 IST Report Abuse
Nagarajan Thamotharan திருமண வீட்டிலும் அரசியல் பேச்சையே பேசி வயதான காலத்தில் இப்படி பொலம்பவெண்டியதயிற்றெ தலைவரே கூட இருந்தவர்கள் எல்லாம் எங்கே போனார்கள் .
Rate this:
Cancel
amukkusaamy - chennai,இந்தியா
13-ஜூன்-201318:57:22 IST Report Abuse
amukkusaamy "s.maria alphonse pandian - chennai-88,இந்தியா 13-ஜூன்-201315:38:56 IST Report Abuse தமிழ் கடவுளே தமிழ் பண்பாடை மீறிவிட்டாரோ ?..." பழனி பஞ்சாமிர்தத்தை ருசிக்காமல் உமக்கு தூக்கம் வருவதில்லையோ?
Rate this:
Cancel
T.C.MAHENDRAN - LUSAKA,ஜாம்பியா
13-ஜூன்-201318:56:51 IST Report Abuse
T.C.MAHENDRAN தொர, இப்போதெல்லாம் அடிக்கடி திருமண நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தன் பழைய காதல் நினைவுகளை மக்களுக்கு தெரியப்படுத்துகிறார் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X